Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Nov 9, 2022, 10 tweets

#Demonitization_Storeies
சாதாரணமாக திருப்பூரில் டைலர்களின் வாழ்வு: தினசரி 1000 - 1200 வரை சம்பாதிப்பார்கள். அதில் தினமும் ஆண்களாக இருந்தால், குடிக்க 200,டீ குடிக்க 100, குடும்பத்திற்காக 100 வாங்கிச் செல்வர். இந்த சலுகை இல்லையென்றால் அடுத்த நிமிடமே வேற கம்பெனிக்கு சென்று விடுவர்.

அவர்களுக்கான மரியாதை எப்போதும் தனித்து இருக்கும். அவ்வளவு கெடுபிடி.

இன்றைய நிலைமை.
ஒரு நிட்டிங் கம்பெனிக்கு ஒரு டெய்லர் வந்து வேலை வேண்டும் என்றார்.
ஓனர் :
வேலை இல்லை என்கிறார்.
டைலர்:
ஹெல்பராவாவது வேலை இருந்தால் கொடுங்கள்
100 ரூபாயாக இருந்தாலும் போதும் என்றார்.

ஓனர்:
நானே ஹெல்பர் ஆக, எனது கம்பெனில வேலை செய்கிறேன்
டைலர்:
கீழ் இருக்கும் வேஸ்டுகளை அள்ளிப் போடுகிறேன் 100 ரூபாயாவது தாருங்கள்
ஓனர்:
மன்னிக்கவும் அதற்கும் கூட காசு கொடுத்து வேலைக்கு அமர்த்தும் நிலையில் நான் இல்லை.
டைலர்:
ஒரு பத்து ரூபா இருந்தால் கொடுங்கள் பஸ்க்கு வேண்டும்.

ஓனர்:
என் நிலைமை அதைவிட தர்ம சங்கடம். என்னால் கொடுக்க முடிந்தது தண்ணீர் மட்டும் தான் தாராளமாக குடித்துவிட்டு செல்லுங்கள்
😥😥😥🔚
ஓனர் டிசைனராக வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் (4 வருடங்களுக்கு முன்) 28,000 அவரது சம்பளம். இன்று 20 ஆயிரத்துக்கு மேல் யாருக்கும் வேலை இல்லை.

யார் வேலையில் இருந்தார்களோ அவர்களுக்கும் வேலை இல்லை, படித்த படிப்பிற்கும் வேலை இல்லை, பத்து வருடத்திற்கும் மேலான அனுபவத்திற்கும் வேலையில்லை. ஒரு காலத்தில் இந்தியாவில் எந்த நகரத்தில் இருந்தும் எந்த மூலையில் இருந்தும் பிழைப்பிற்காக, பசிக்காக, சொந்த வாழ்வுக்காக காதலுக்காக என்று

இந்நகரம் எல்லோரையும் வாரியணைத்து கைக்குள் வைத்திருந்தது. வசதி தந்தது.

திருப்பூரில் 35 வருடங்களில் தொழிலாளர்கள் கவுரவமாக சுயமரியாதையோடு நடத்தப்பட்டனர். ஆனால் இன்று அதற்கான எந்த வாய்ப்புகளும் இனிமேல் நடக்கப் போவதில்லை. ஒரு காலத்தில் டாலர் சிட்டி என்று அழைக்கப்பட்ட ஒரு நகரம்.

நாளொன்றுக்கு 11 கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நகரம். 24 மணி நேரமும் வேலை செய்த நகரம், இன்றைக்கு கீழ்மையிலும் கீழ்மையாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு ஆதாரமாக வித்திட்டது, முடித்து முண்டையாக்கிவிட்டது டிமானிடேஷன். பிறகு GST. பிறகு Corona. பிறகு நூல் விலை ஏற்றம்,

பிறகு நூல் விலை ஏற்றம், பிறகு நூல் விலை ஏற்றம், ஏற்றம் ஏற்றம் ஏற்றம்... கடைசியாக நிர்மலா அம்மா சொன்ன டாலர் விலையேற்றத்திற்கான விளக்கம், எப்பா எங்களை ஹிட்லர் Auschwitz ல கொன்னு புதைச்ச மாதிரி கொன்னுடங்கடா யப்பா...

இப்போது இந்நகரை, இவ்வளவு காலமும் பெரிய பெருந்தொகையை ஏற்றுமதிக்காக

கொடுத்திட்ட இந்நகரை பற்றி பேச ,சீண்டுவார் எவருமில்லை. இன்றைய தேதியில் இந்தியாவின் textiles துறையை, காய்ந்த சாணிக்கும் மதிப்பதில்லை.
திருப்பூர் மக்கள் வயிறு எரிந்து சொல்வது: நாடே நாசமாய் போகட்டும். பூமி ரெண்டாய் பிளக்கட்டும்.. சங்கிகளே வெக்கங்கெட்டு வியந்தோதுங்கள். த்தூ...

இதில் ஓனர் எனக் குறிப்பிடப் படும் T. M. Arunkumar அவர்களின் 35 ஆண்டு அனுபவம் இது..😥

டிவிட்டருக்காக, சிறிது சுருக்கி உள்ளேன்,

மூலக் கட்டுரை இரத்தக் கண்ணீர் வரவழைத்து விடும்...
👇👇👇
facebook.com/10001701082441

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling