Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Nov 12, 2022, 9 tweets

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
அதிமுகவே டெல்லிக்கு காவடி தூக்குவதற்காக தொடங்கபட்டதுதான்
திராவிடத்தை எதிர்க்க "அவர்களுக்கு" ஒரு ஆள் தேவைபட்டார். அதற்காக அவசரநிலை காலத்தில் நேபாளத்தில் இருந்த MGR ரை ரெய்டு பயம்காட்டி வருமானவரி சோதனைக்கு அஞ்சி கணக்கனே கணக்கு கேட்ட கதை தான் அதிமுக

அவரை பார்பனீயம் சரியாக பயன்படுத்திக் கொண்டது .. இடையிடையே ஆசாரமான "ஐந்து பைங்கிளி"களை வைத்து வடதேசத்து அதிகாரிகளை சரிகட்டி
வள்ளல் கரைபடியாத கரமென பிம்பத்தை தொடர்ந்து உயரபிடித்து சமாளித்தது தான் சாதனையே தவிர வேறெதும் தமிழகத்திற்கு நன்மை உண்டா என்ன..

சத்துணவு கூட நீதிகட்சி

செயல்திட்டம் அதை பெரியாரின் யோசனையில் மதிய திட்டமாய் காமராஜ் கொண்டுவந்த போது
கஜானாவிலே பணமில்லை என்ற அதிகாரிகளின் பல்லவியை அடுத்து
பணக்காரர்களிடம் நிலகிழார்களிடம் கேட்டு கடைசியில் சிறு குறு விவசாயிகளிடம் முதல் மரக்காயை கோவிலுக்கு தருவீர்கள்
இரண்டாவது மரக்காய் நெல் எனக்கு

தாருங்கள் பசியோடிருக்கும் குழந்தை உணவளிக்கிறேன் என்றெதல்லாம் இன்றைய அதிமுகவினருக்கு தெரிய வாய்ப்பில்லை ..
சமூக அநீதி தான் அதிமுக ..
தொடர்ந்து ஜெயா மரணத்திற்கு பிறகு
அவசர அவசரமாக நீட் தேர்விற்கு அனுமதி வழங்கியதாகட்டும் CAA குடியுரிமை சட்டத்திற்கு எதிர்த்து வாக்களிக்காமல்

ஒளிந்துக்கொண்டதாகட்டும் ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு அனுமதியாகட்டும் பார்பனன் வீட்டுக்கு பால்பாக்கட் போடுவதாகட்டும்
ஒரு நொடி கூட தாமதிக்காமல் விரைந்து ஆதரவை தந்து பிற்படுத்த ஒடுக்கபட்ட மக்களுக்கு அநீதி செய்தவர்கள் தான் .. EWS 10% ஒதுக்கீட்டிற்கு நாடாளுமன்றத்தில் மௌனம் எனும் ஆதரவு

தந்து அநீதி அளித்தவர்கள் இன்று வேறு வழியின்றி
நேரடியாகவே ஆதரிப்பது வெளிச்சம் போட்டு நாங்கள் "எப்போதும் அடிமை " தான் என சொல்லியிருக்கிறார்கள் ..
..
தமிழகத்தில் அதிமுக ஏன் வேண்டும் என்பதற்கு கலைஞர் மிக அழகாக சொல்வார் அந்த இடத்தை காங்கிரஸ் நிரப்பிக்கொள்ளும் அதை தவிர்க்க அதிமுக தேவை

என்பார் அதன் பொருள் நேரடியாக பார்பன சக்திகள் வருவதைவிட கொஞ்சமாகவது திராவிட வேசம் கட்டியாவது இவர்கள் இருக்கட்டும் என்பது தான்.. இப்போது வெளிப்படையாகவே பாஜக பாசிச பார்பனீய ஆதரவு என்கிற போது அந்த இடத்தை நிரப்ப தமிழகத்தின்
சமூகநீதி பேசும் கட்சிகள் முன் வரவேண்டும் .. திமுக இனி

எதிரியை நேரடியாகவே சந்திக்கிற காலம் என்பதும்
திமுக மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம் தமிழர் நலன் சார்ந்து சமூகநீதியை நிலைநாட்டும் என்பதை உணர்ந்து பல்வேறு பிரிவுகளாக பிரிந்து நிற்கும் நாட்டின் நலன் விரும்பிகள் மற்றும் சிறுபான்மையினர் பிற்படுத்தபட்ட ஒடுக்கபட்ட சமூகத்தின் கருத்தில்

கொண்டாலே போதும்
தமிழ்நாடு செழுமையடையும்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
நம் நம்பிக்கை
நமது காவல்
நமது எதிர்காலம்

🔥ஆலஞ்சியார்🔥

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling