Decoding Threadists Profile picture

Nov 14, 2022, 7 tweets

🔥#ஆலஞ்சியார்🔥
நன்றி! ..
தமிழன் மறந்துபோன உணர்வு /சொல் .. சிலநேரம் என்ன செய்தாலும் இந்த மக்கள் ஏன் இவ்வளவு அலட்சியமாக பணமே பிரதானமாய் இருக்கிறார்கள் .. எல்லாவற்றுக்கும் ஒரு விலை பேசுகிறார்கள் என நினைப்பதுண்டு.. நன்றி என்றொன்று உறுத்துமானால் கலைஞரை இவர்கள் தொடர்ந்து அரியணையில்

அல்லவா வைத்திருக்க வேண்டும்
..
ராஜீவ் கொலையாளிகள் நளினி உட்பட விடுதலையை நாம் மனிதாபிமானம் கொண்டு வலியுறுத்தினோமே தவிர நிரபராதி என்றல்ல .. மன்னிக்கும் மாண்பு அழிந்துவிட கூடாதென்பதும் நீண்டநாள் சிறைவாசம் தூக்கு தண்டனையைவிட கொடியதென்பதால் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்

இவர்களை போராளிகளாக கருதியல்ல இவர்கள் #கூலிப்படைகள் அவ்வளவுதான் ..
முதல் இலக்கு தவறினால் இவர்கள் அடுத்த குறியை சரியாக செய்திருப்பார்கள் .. தமிழர்கள் என்பதால் இவர்களை தியாகிகளாக கொண்டாட தேவையில்லை .. தோக்கு தான் தீர்வென்றால் இந்த பூமி கலவரமாகதான் இருக்கும் ..

நளினியின் தூக்கு

தண்டனையை
ஆயுள் தண்டனையாக குறைத்தது கலைஞர் பெருமகன்
அன்றைக்கு பாதிக்கபட்ட சோனியாவிற்கு எந்த ஆட்சேபனை இல்லை என்பதை சுட்டிகாட்டி அமைச்சரவையில் தீர்மானம் கொண்டுவந்து அதை கவர்னருக்கு அனுப்ப அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி ஆயுள்தண்டனை குறைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்த போது உயர்நீதிமன்றத்தை

அணுகி கேபினெட் முடிவிற்கு கவர்னர் கட்டுபட்டவரென தீர்ப்பை பெற்று தந்தவர் பேரருளாளன் கலைஞர் அவர்கள் இதெல்லாம் நன்றி "மறந்ததுகள்"அறியாமல் இல்லை
..
ராஜீவ் கொலையுண்ட நேரத்தில் யாருமே வழக்கிற்கு ஆஜராக மறுத்த போது நளினிக்காக வாதாடியவர் துரைசாமி .. அவரை நியமித்ததில் கலைஞரின் பங்கை

"சிலர்" அறிவார்கள் .. அவரை யாரை வேண்டுமானாலும் பார்க்கட்டும் "ஈழத்தாய்" சமாதியில் அழுது புலம்பட்டும் தயைகூர்ந்து கலைஞர் நினைவிடத்தில் கால்பதித்துவிடாதீர் என்றே சொல்ல தோன்றுகிறது..
..
நன்றி உணர்வை எதிர்பார்ப்பவரில்லை கலைஞர்
இங்கே கேடுகெட்டவர்களுக்கும் சேர்த்தே உழைத்த பெருமகன்

அவர் .. நம் கடமையை செய்வோம் என்பதே அவரது இயக்கமாக இருந்தது..
"இன்னா செய்தாரையும் ஒறுத்தல் " தான் கலைஞர் வாழ்வு ..

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling