அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Dec 3, 2022, 17 tweets

#பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இம்மலை. மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும்

சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இம்மலைமீது சிவன் தனது பாதம் வைத்ததாக வரலாறு. இம்மலை மீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3-ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாகக்

கல்வெட்டுகள் உள்ளன. இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத் தொடங்குவர். மலை ஏறும் வழி ஓரளவிற்கே வசதியான வழியாக அமைந்துள்ளது. பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியில் இருந்து வரும்

பாதையும் தென்மகாதேவ மங்கலத்திலிருந்து செல்லும் பாதையும் ஒன்று சேர்கின்றன. இங்கிருந்து மேல்நோக்கி செல்லும் பகுதி நெட்டாக காணப்படும் இதற்கு குமரி நெட்டு என்று பெயர். இந்த இடத்தில் இயற்கையாய் அமைந்த சுனை (நீர் ஊற்று) உள்ளது, நீர் எடுப்பதற்கு கீழே செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இதற்கு

அடுத்து உள்ளது கடப்பாறை நெட்டு. இம்மலையின் சிறப்பம்சமாக விளங்குவதே இந்த கடப்பாறை நெட்டாகும். ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலே அமைந்து உள்ள பாறைப் பாதையைக் கடக்க இந்த கடப்பாறை நெட்டு வழியாக ஏறிச் செல்லவேண்டும். இந்தக் கடப்பாறை நெட்டை ஏறியவுடன் இதற்கு அப்பால் இரண்டு பெரிய பாறைகள் காணப்

படுகின்றன. அதில் ஒன்றில் (மல்லிகார்ஜுனர்) சிவன் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. இந்த கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள இலிங்கம், விக்ரகங்களுக்கு பக்தர்களே நேரடியாக அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். மேலும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகனும் உள்ளார். இயற்கையான சூழலில்

சுமார் 4560 அடி உயர மலையில் காணப்படும் இயற்கைக் காட்சிகளுக்காகவும், மூலிகைக் காற்றை சுவாசிக்கவுமே தற்போது சிரமத்தைப் பாராமல் அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்தில்

இருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு. இந்த மலை மொத்தம் ஏழு சடைப் பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான, கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று

வீசி தீராத நோயையும் தீர்க்கும். நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்து உள்ளார்கள். மலை ஏறும்போது துணைக்கு பைரவர்கள் வருகிறார்கள். இவர்கள் சித்தர்கள் என்பது நம்பிக்கை. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி

நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையில் இருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாகக் காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். சிவ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர

ஜோதியை நோக்கினால் ஜோதியில் நாகம் - சூலம் மற்றும் உடுக்கை போன்ற பிம்பங்கள் தோன்றுவதைக் காணலாம். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம். சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம்

உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும். இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது. அது போல் நாமும், கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை

மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி மற்றும் அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம். சகல நோயையும்

தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் உண்டு. மலைக்கு வருபவர்கள், உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப

விமோசனம். 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஓம்' எனும் பிரணவ ஒலி கேட்பதாக இங்கு

இரவில் தங்கிச் சென்ற பக்தர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஓம் என்ற ஒலி எழுப்பப்படுமென்றால் அந்த இடம் யோகம் செய்ய உகந்த இடமாகும். அது மட்டுமின்றி கோயில் கருவறையை போன்ற இடம் இதுவாகும். மனதில் குறையுடன் வந்தால் மன அமைதி வந்து வீடு திரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.

உடலில் சக்தி உள்ள போதே இது போன்ற இடங்களுக்கு போய் வர வேண்டும். ஆன்மீக தேடல் உடையோர் செல்ல வேண்டிய தலம் இது.
திருசிற்றம்பலம்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பனம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling