#தீபம்_விளக்கு எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம். சகல விதமான செல்வங்களை சுகபோகங்களை விரும்புவோர் பசுநெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். குல தெய்வத்தை வழிபடும் போது வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் மூன்றையும் சமவிகிதத்தில்
கலந்து விளக்கில் ஊற்றி ஏற்றிட வேண்டும். கணவன்-மனைவியிடையே அன்பு நீடித்திருக்கவும் உறவினர்கள் நன்மை அடையவும் விளக்கெண்ணெய்யால் விளக்கேற்ற வேண்டும். தேங்காய் எண்ணெய்யால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம். லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசு நெய்யால்
விளக்கேற்றி வழிபடவேண்டும். மகாவிஷ்ணுவுக்கு உகந்தது நல்லெண்ணெய் தீபமே. எந்த தெய்வத்தை வழிபடுவதாயிருந்தாலும் நல்லெண்ணெய் ஏற்றது. கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலை, தொல்லைகளை, பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணெய்யின்
தீபங்கள். சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி. முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். செய்வினைகள்
நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது. தம்பதிகள் மனமொத்து வாழவும் - மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும். பித்தளை அல்லது வெள்ளி, வெண்கலத்தால் ஆன
விளக்கே பூஜை செய்யச் சிறந்தது. மரப்பலகை அல்லது தாம்பாளத்தின் மீது விளக்கை வைக்க வேண்டும். தலைவாழை இலை மீது குத்து விளக்கை வைத்தும் பூஜிக்கலாம். திருவிளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம் இவற்றால் பொட்டிட்டு அலங்கரிக் வேண்டும். திருவிளக்கிலே தேவி உறைகின்றாள். விளக்கை வழி படுவதன் மூலம்
தேவியை ஆராதனை செய்கின்றோம். அகிலத்தைக் காத்தருள் புரியும் அன்னையின் அருளைப்பெற திருவிளக்கு பூஜை எளிமையானது. திரு விளக்கை அணைக்கும் பொழுது ஒரு துளி பாலை ஜோதியில் வைத்து அல்லது திரியை மெல்ல உட்புறம் இழுத்தோ அணைக்கலாம். குத்துவிளக்கு பூஜையை, சுமங்கலிப் பெண்களும் கன்னியரும் கூடி
கோவில்களில் செய்தால் வீடும் நாடும் சுபிட்சமடையும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.