அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Dec 16, 2022, 11 tweets

#மார்கழி_ஸ்பெஷல்
#சூடிக்கொடுத்த_சுடர்க்கொடி

ஆண்டாள் குரு பரம்பரைப்படி ஸ்ரீவல்லிபுத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் வந்துதித்த பெண் குழந்தை கோதா

பெரியாழ்வார் இக்குழந்தையை எடுத்து சீரும் சிறப்புமாக வளர்த்தார். கோதை என்றால் தமிழில் மாலை, வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.
பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகு பார்த்து இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என

எண்ணி தினமும் கொடுத்து அனுப்புவாள். ஒருமுறை பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு இது தகாத காரியம் என்று கோபித்துக் கொண்டார். உடனே புது மாலை தொடுத்து கோதை சூடாத மாலையை எடுத்துக் கொண்டு சென்ற போது பெருமாள் அந்தப் பெண் சூடிய மாலை தான் எனக்கு உகப்பானது அதை எடுத்து வாரும் என்றார்.

பெரியாழ்வார் வியந்து நம் பெண் மானிடப் பிறவி இல்லை ஒருவேளை பூமித் தாயாராக இருக்கலாம் என்று எண்ணி ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று பெயரிட்டு அழைத்தார். அவளுக்கு மணப்பருவம் நெருங்க, நீ யாரை மணம் செய்து கொள்வாய் என்று பெரியாழ்வார் வினவ அவள்,
வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர்

வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

[தேவர்களுக்காக அந்தணர்கள் யாகங்களில் சேர்த்த உணவை காட்டில்

திரியும் நரி புகுந்து மோப்பம் பிடிப்பது போல உடலைப் பிளக்கும் சக்கரமும் சங்கமும் தாங்கிய திருமாலுக்கென்று ஏற்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது என்று சொல்லிவிட்டாள். அவன் எந்த ஊரான் என்று பெரியாழ்வார் கேட்டு திருமாலின் திவ்ய

தேசங்கள் அனைத்தையும் சொல்ல திருவரங்கனின் பெயர் கேட்டதும் நாணினாள். இந்தத் திருமணம் எவ்வாறு சாத்தியம்? அரங்கனோடு மணம் புரிவதாவது என்று பெரியாழ்வார் கவலைப்பட அவர் கனவில் பெருமாள் தோன்றி அவளை அலங்கரித்து கோயில் என்னும் திருவரங்கத்துக்கு அழைத்து வா! என்று கட்டளையிட்டார். கோவில்

பரிசனங்களுக்கும் அவள் வரவைத் தெரிவித்தார். அவ்வாறே கோதையை அலங்கரித்து திருவரங்கத்துக்கு அழைத்து வர அவர்களுக்குப் பெரிய வரவேற்பு. பெருமானிடத்தில் அவளை விட்டுவிட கோதை அவருடன் ஐக்கியமாகி மறைந்து போனாள். இது ஆண்டாளை பற்றி குரு பரம்பரை சொல்லும் கதை. இதன் அடிப்படைச் சம்பவங்கள்

ஆண்டாளின் பல பாசுரங்களில் இருக்கின்றன. மேலும் கண்ணன் மேல் ஆசைப்பட்டு அவனை விரும்பிப் பாவை நோன்பு ‘வாரணமாயிரம் சூழ வலம் செய்து’ என்று துவங்கும் நாராயணனுடைய திருமந்திரத்தைப் பற்றி பாசுரங்கள் எல்லாம் இந்த வசீகரமான வரலாற்றின் அடிப்படை ஆகின்றன. ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த

கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக் கொண்டு இருப்பதற்கு சிகரம் வைத்தது போன்றது #திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் #சங்கத்_தமிழ்மாலை என்று போற்றப்படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம். முதலில் இதற்கு ‘சங்கத் தமிழ்மாலை’ என்றுதான் பெயர் என

ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

திருப்பாவையின் முப்பது பாடல்களையும் மார்கழி மாதத்தில் அனுசரிப்பது வைணவர்கள் வழக்கம்.
ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling