மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்...
ராமானுஜ தயாபாத்ரம் ஞானவைரிக்ய பூஷனம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்ததேசிகம்
அன்ன வயற்புதுவை
ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் இன்னிசையால்-பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
#முதல்_நாள்_திவ்யதேசம்
திருப்பாவை ஒவ்வொரு பாசுரமும் ஒரு திவ்ய தேசத்தை கூறுகிறது.. கோதை நாச்சியார் தான் அனுபவித்த திவ்யதேசங்களை பாசுரமாய் உரைத்தாள்..
அனைத்து பாசுரங்களிலும் முக்கியமான உயிர் சொல்லக வாக்கியமாக இருப்பதை எடுத்து அது எந்த திவ்யதேசத்தை கூறுகிறது என பூர்வாசார்யர்கள் நமக்கு விளக்கி உள்ளனர்..
தேவர்களுக்கு விடியற்காலை பொழுதான மார்கழிமாதம். பரம்பொருளை த்யானிக்க உகந்த விசேஷமான காலம்.
நந்தகோபன் யசோதை தம்பதியரின் குழந்தையான க்ருஷ்ணனை அனுபவிக்க உரிமை உள்ள எம்பெருமானுக்கு மிகப்ரியமான லோகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாக்களையும் அழைக்கிறாள். #நாராயணனே #பறைதருவான் இந்த இரு பதங்களும் இப்பாசுரத்தின் உயிர் சொல்லாகின்றன..
ஆண்டாள் இவ்விரு பதங்களால் சேவிக்கும் திவ்யதேசமானது 108 வது திவ்ய தேசமான பரமபதமான #ஸ்ரீவைகுந்தம் ஆகும். நாராயணன் எனப்படும் சொல் வைகுந்த நாதனான ஸ்ரீமன் நாராயனனையே குறிக்கும். மற்ற திவ்யதேசங்களில் தனி திருநாமம் பெற்று எம்பெருமான் திகழ்கிறார்..
மேலும் பறை எனும் சொல் வீடு பேற்றை குறிக்கிறது . வீடுபேறாவது பரம்பதமான ஸ்ரீவைகுந்தப்பேறு. வைகுந்த நாதனான ஸ்ரீமன்நாராயணனால் நாம் அனுபவிக்கப் படவேண்டியவர்கள்.
ஆக முதல் பாசுரத்திலேயே ஜீவாத்மக்களின் குறிக்கோளான இயற்கையாக சென்று அடையவேண்டிய இடத்தை அறிவுறுத்தியது,
அதற்காக நாம் செய்ய வேண்டியவைகளையும் சுருங்க உரைத்தாள் பூமிபிராட்டி.
நாம் அடைந்து அனுபவிக்க வேண்டிய பரதத்வம் ஸ்ரீமன் நராயனனே. அவனை அடைய அவனே வழியாவான்.இது இப்பாசுரத்தின் சாரமான பொருளாகும்.
கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்🙏🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.