Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்
4 subscribers
Nov 29, 2023 11 tweets 4 min read
From Saravana Kumar முகநூல்

ஒரு நொடிக்கு பத்து ரவுண்டுகள் சுடக்கூடிய எல் .எம்.ஜி யை கையில் வைத்துக்கொண்டு ,

ஒரே ஒரு தோட்டோவைக் கூட சுடாமல் கூட்டத்திடம் கல்லடிபட்டுச் செத்த ராணுவ வீரர்களைக் கண்டது இந்த தேசம் ... Image பாரதத்தின் பொருளாதார தலைநகரம் அண்டை நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி கதறிக் கொண்டிருந்தபோது ,

தேசியப் பாதுகாப்பு படையை அனுப்ப 24 மணி நேரம் எடுத்துக் கொண்ட தூங்குமூஞ்சி அரசுகளைக் கண்டது இந்த தேசம் ... Image
Oct 1, 2023 16 tweets 5 min read
#காகம்
காகத்தைப் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது? இந்த 1 பொருளை தினம்தோறும் காகத்திற்கு உணவாக வைத்தால், பல காலமாக தீராத இருந்து வரும் கஷ்டங்கள் கூட தீரும்

நம்முடைய பித்ருக்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகிறார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு சாஸ்திரம். Image ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல விஷயங்கள் உள்ளது.

இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?

ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை முன்கூட்டியே வலியுறுத்தும் சக்தியும் Image
Aug 21, 2023 8 tweets 2 min read
🎈ராக்கெட் தொழில்நுட்பத்தை அமெரிக்கா கொடுக்கவில்லை.....

🎈உதவ வந்த ரஷ்யாவையும் கொடுக்க விடவில்லை அமெரிக்கா....

சொந்தமாக முயற்சி செய்த திரு #நம்பிநாராயணன் அவர்களையும் பொய்யான போலியான வழக்கை போட்டு சிறையில் அடைத்தார்கள்... Image போதிய நிதியில்லாத காரணத்தினால் ராக்கெட்டின் உதிரி பாகங்களை கூட ஏவு தளத்திற்கு மேதகு ஐயா #அப்துல்கலாம் அவர்கள் #சைக்கிளில் கொண்டு செல்வார்......

🍁#விக்ரம்சாராபாய்
🍁#சதீஷ்தவான்
🍁#அருணாச்சலம்
🍁#டாக்டர்_அப்துல்கலாம்
🍁#சிதம்பரம்
Aug 8, 2023 9 tweets 3 min read
ராதே கிருஷ்ணா

தன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை ஸுரிய பகவானிடம் சொல்ல , அவர் அதை மறுத்து கர்ணனுக்கு கூறிய பதிலை படியுங்கள்.( குறிப்பு: இது கருடாலாயா என்ற குழுவில் நான் படித்தது. அதை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன்.🌞வ்ருஷாகபி:.. Image ஆயிரம் நாமங்களில் விசேஷித நாமம்.

மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,

“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன். Image
Jun 25, 2023 8 tweets 3 min read
நாளை 26/06/2023 பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம்.

அன்று ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும், உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது நம்பிக்கை. இந்த பிரபஞ்சத்தின் அதன் இயக்கத்தின் தத்துவமாக நடராஜரின் வடிவம் உள்ளது.
இதை விஞ்ஞானிகள் உணர்ந்ததாலேயே ஜெனிவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தின் (𝘾𝙀𝙍𝙉) முன்பாக பெரியதொரு நடராஜர் சிலை வைத்துள்ளனர்.
Jun 24, 2023 16 tweets 5 min read
படித்ததைப் பகிர்கிறேன் !!

#ஸ்ரீராமர்_பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார்.

அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும்
ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும். அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார் அகஸ்தியர்.

அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள்.
Jun 23, 2023 10 tweets 2 min read
சுக்கா ரொட்டி
துக்காராம் மகராஜ்....

என்றும் வழக்கம் போல அன்றும் துக்காராம் மகராஜ் அவர்களுக்கு அவர் மனைவி ஆவளீ ஏதோ வீட்டில் இருந்த சிறிது மாவை வைத்து இரண்டு சுக்கா ரொட்டி தயார் செய்து கொண்டு செல்ல ஆயுத்தமானார்.

பாவம் அதற்கு தொடு கறி செய்ய கூட இயலாத வறுமை வெறும் சுக்கா ரொட்டி. துக்காராம் மகராஜ் பண்டார மலை என்னும் இடத்தில் விருட்ச வல்லி மரத்தின் கீழே அமர்ந்து அபங்கம் இயற்றி பாடி கொண்டிருப்பார்.

அந்த அம்மையோ காட்டின் மைய பகுதிக் கு சென்று கொண்டிருக்க அவள் காலில் ஒரு விஷமுள் தைக்க கண்டோபோ (பைரவர்) அங்காயீ (அங்காளம்மன்) என அவளது குலதெய்வத்தை அழைத்தார்.
Jun 23, 2023 15 tweets 5 min read

#மாணிக்கவாசகர் சொல்ல சிவபெருமான் எழுதிய #திருவாசகம் தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று. 22-06-2023 இன்று ஆனி மாதம் ஆயில்யம்.

*சிவபெருமானே உட்கார்ந்து ஓலைச்சுவடியில் எழுதிய சிவபுராணம்*

*நமச்சிவாய வாழ்க*

*சிவபுராணத்தின் பெருமைகள்* 1.தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2.வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் "தாங்கள் எழுதிய திருவாசகத்தை
Jun 22, 2023 10 tweets 3 min read
இந்தியாவில் இருக்கும் சில அரசியல் #தரகர்கள் தவறே செய்யாத மனிதனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றார்கள்.......

இவர்களின் பேச்சை நம்பி விசாரணையே இல்லாமல் #விசா இல்லை என்றார்கள்.... மாலையும் #மகுடமும் யாரும் கொடுத்து கிடைப்பதில்லை தானா கிடைக்கக்கூடியது.... அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது..

விசா இல்லை என்ற தலைவனுக்கு தரையிறங்க ராணுவ #தளத்தை திறந்து விட்டிருக்கிறார்கள்......
Jun 22, 2023 5 tweets 1 min read
இது புதிய பாரதம். குடும்ப ஆட்சியின் கீழ் கக்கத்தில் துண்டை இடுக்கிக் கொண்டு, இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, முதுகெலும்பு முன் வளைந்து, அமெரிக்க/பிரித்தானிய பறங்கிகள் முன்பு கைகட்டி வாய் பொத்தி தொண்டூழியம் செய்த பழைய இந்தியா இல்லை. புதிய பாரதம். தன்னை சந்திக்க வந்த அமெரிக்க செனட் பிரதிநிதிகள் குழுவை சந்திக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்து விட்டார்.

காரணம் மிகவும் எளிதுனது. அந்த குழுவில் ப்ரமிளா ஜெயபால் என்ற இந்திய விரோதி இடம் பெற்றிருந்ததே காரணம்.
Jun 21, 2023 26 tweets 8 min read
#பூரி_ஜெகன்னாதர்

இந்துஸ்தானத்தில் புராதனமான ஆலயங்கள் வடக்கு பக்கம் பெரிதாக இல்லை, இன்று இருப்பவையும் புராதான ஆலயம் இல்லை எல்லாம் புதிதாக கட்டபட்டவை

இன்றிருக்கும் காசியோ மதுராவோ உஜ்ஜைனியோ பலமுறை இடித்து கட்டபட்டவை, ஆப்கானிய படையெடுப்பில் அடிக்கடி ஆலயங்கள் இடிபடுவதும் பின் இந்துக்கள் மீளகட்டபடுவதும் வழமை

அல்லது இடைவிடாத போராட்டம்

இன்று ராமர்கோவில் அயோத்தியில் கட்டபடுவது சிலருக்கு ஆச்சரியமாக தெரியலாம் ஆனால் வரலாற்றின்படி அது அதிசயம் அல்ல, இங்கே விழ விழ இந்து ஆலயங்கள் மீள மீள கட்டபடும்
Jun 16, 2023 14 tweets 2 min read
ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார்.....

மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்......

உரிமையாளர் சொன்னார்...
மீன் குழம்புடன் 50,
மீன் இல்லாமல் 20 ரூபாய்.... Image கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினான்....

இதுவே என் கையில் உள்ளது.....

இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க....

பெறும் அன்னம்மானாலும் பரவாயில்லை...

மிகுந்த பசி.
Jun 7, 2023 5 tweets 2 min read
மறைக்க பட்ட பாரத சுதந்திர வரலாறு

2ஆம் பாகம்

"பாரதத்தின் சுதந்திரத்திற்காக தன் உடல், பொருள், ஆவி, இளமை,, எல்லாவற்றையும் மனப்பூர்வமாக, என் கணவர் போன்று தியாகம் செய்த நூற்றுக் கணக்கானவர்களை சந்தித்து உள்ளேன்.. . அவர்கள் தியாகத்தின் முன் என்னுடையது கால் தூசி கூட இல்லை... Image அதை காட்டி எந்த சலுகையும் அடைய என் மனசாட்சி ஒப்பவில்லை, அதுவும் காங்கிரஸிடமிருந்து. அந்த வீரர்களின் புகழ் பரப்புவது,... நினைவை போற்றுவது தான் என் பணி " என்றார்

தன் சொத்துக்களை விற்று லக்னோவில் ஒரு பெண்கள் பள்ளி ஆரம்பித்து , Image
Jun 7, 2023 25 tweets 8 min read
மறைக்கப்பட்ட பாரத சுதந்திர வரலாறு

19 டிசம்பர், 1928 நள்ளிரவு,

லாகூர்.. அந்த பங்களாவின் திட்டி வாசல் போன்ற ரகசிய கதவு , சங்கேத மொழியில் தட்டப்படுகிறது..

கதவை திறந்தது ஒரு அழகிய இளம் பெண், இடுப்பில் குழந்தையுடன்.. வந்த நால்வரை பார்த்த உடன் அவர் முகம் மலர்கிறது. Image உள்ளே.. அமரச் செய்து உணவளிக்கிறார். வந்தவர்கள் எல்லோரும், இளைஞர்கள் HSRA (ஹிந்துஸ்தான் ஸோஷியலிஸட் ரிப்பப்ளிக் அஸோசியேஷன்) என்ற தேச விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் ரகசியமான குரலில் பேசிக் கொள்கிறார்கள,

என்ன பிரச்சினை? Image
Jun 5, 2023 18 tweets 3 min read
அப்பா எனும் சகாப்த்தம்

அடக்க மாட்டா கண்ணீருடன்

Repost ...

ஒரு சிறுகதை ...

"அப்பா சிவா ... சாயங்காலம் வரும்போது மறக்காம அந்த கண் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வாப்பா...

இந்த வலது கண்ணுல பவர் கூடி இருக்கறா மாறி இருக்கு " என்றார் அப்பா . Image ஆஃபீஸ்க்கு லேட் ஆன டென்ஷனில் வெடுக்கென்று "ஏன்பா என்னதான் உங்க பிரச்சனை ....

யார் எப்படி போனாலும் உங்களுக்கு உங்களை பத்தி மட்டும் தான் சிந்தனை..

உங்க கண்ணுக்கு அப்படி ஒண்ணும் ஓடி போய் பாக்கற மாறி பிரச்சனை இல்லை ...

எனக்கு இருக்கற பவர்ல பாதி கூட உங்களுக்கு இல்ல.
May 23, 2023 12 tweets 3 min read
#தலையெழுத்தை_மாற்றும்_அதிசயகோயில்!

என்னடா வாழ்க்கை இது என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள். நாமலாம் எதுக்கு பொறந்தோம்னே தெரியல.

இந்த வாழ்க்கை இல்லாம வேற வாழ்க்கை கிடச்சிருந்தா சந்தோசமா இருக்கலாம்னு நினச்சிட்டு இருக்கீங்களா.

கவல படாதீங்க அப்படி ஒரு வாய்ப்பு வழங்குகிறது ஒரு இடம். Image #பிரம்மபுரீஸ்வரர் கோயில்...

திருச்சி அருகே #திருப்பட்டூர் ரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோயில்.

இந்தியாவிலேயே மிக சொற்ப இடங்களில் இருக்கும் பிரம்ம தேவனுக்கான கோயில்களில் இது சிறப்பானதாகும்.
May 22, 2023 15 tweets 2 min read
நம் நாட்டின்மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?..

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்தான் நம் நாட்டிலுள்ள கோயில்களில் மிகப் பெரிய கோயிலாகும்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. Image திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
May 21, 2023 10 tweets 3 min read
2ஆம் பாகம் தொடர்கிறது...

இந்த முறை எப்படியாவது இந்தியாவில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு கிங்கணர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

பல் பிடித்து பதம் பார்க்க தயாராக நம்மவர்களும் களத்தில் நிற்கிறார்கள். Image அதன் ஓர் பகுதியாக புழக்கத்தில் உள்ள அதிக மதிப்பு கொண்ட நம் இந்திய ரூபாய் இரண்டாயிரத்தை திரும்ப பெறுவதாக அறிவித்து யாரும் எதிர்பாராத வண்ணம் மிக பெரிய கால அவகாசத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட பொறி வைத்து பிடிக்க இருக்கிறார்கள்... Image
May 21, 2023 23 tweets 8 min read
🍀🏵️ #இரண்டாயிரத்திலும்_ஒன்று....

நேற்று கோட்சே பிறந்த நாளில் இந்தியாவின் உச்ச பட்ச காந்தி கரன்சியை திரும்ப பெறுவதாக அறிவித்து அதிரடித்திருக்கிறார்கள்.

என்ன ஒன்று.....

முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. Image நம் இந்திய தேசத்தில்.... விடுதலை சமயத்தில்...‌‌

சரியாக சொல்வதென்றால் 1946 ஆம் ஆண்டு அப்போது புழக்கத்தில் இருந்த 10,000 ரூபாய், 5000 ரூபாய் ஆகியவற்றோடு 1000 ரூபாயும் இனி செல்லாது என அறிவித்தது பிரிட்டிஷ் இந்திய அரசு.

அது தான் முதல் தடவை. Image
May 19, 2023 24 tweets 4 min read
#படித்ததில்_ரொம்ப_பிடித்தது

”விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.”

தண்ணீரையும், காபியையும் கொண்டு வந்து வைத்தாள் விமலா.

“விமலா… அப்பா ஏன் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கார்?”

”ம்… நீங்களே கேளுங்க அந்த கண்றாவியை.” Image காபியை ஒரே மடக்கில் குடித்தவன், தந்தையின் அருகில் வந்தான். அவரது தோளை ஆதரவாக பற்றினான்.

“அப்பா… எழுந்திரிச்சு உள்ளே வாங்க.” தந்தையின் கையை மென்மையாக பிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர்த்தினான்.

“ஏம்பா என்னமோ மாதிரி இருக்கீங்க?”

அவர் சொல்லத் தயங்கினார்.
May 18, 2023 12 tweets 5 min read
ந.முத்துராமலிங்கம் பதிவு
🙏❤️🙏

ஜெயலிதா முதல்வராக இருந்தபொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வெறும் உத்தரவு மட்டும்தான், அப்பொழுது காவிரி நீர்கூட வரவில்லை.
ஆனால், அ.தி.மு.க.வினர் தஞ்சையில் மிகப்பெரிய விழா நடத்தினார்கள். Image நன்றாக நினைவிருக்கிறது, திருச்சியிலிருந்து தஞ்சை வரை லட்சக்கணக்கான பேனர்கள், "பொன்னியின் செல்விக்குப் பாராட்டு விழா" என்று, இரண்டு நாட்கள் தஞ்சையே குலுங்கியது -

இதுதான் தமிழகத்தில் எடுபடும் அரசியல்- Image