Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

Dec 17, 2022, 10 tweets

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம்

தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!

இந்த பாசுரத்தின் முக்கிய வரி.. "பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடி."
உள்ளங்கை நெல்லிக்கனிபோலே

107வது திவ்யதேசமான #க்ஷீராப்தி திவ்யதேசத்தை
பாற்கடல் வாசனான க்ஷீராப்தி நாதனான #ஸ்ரீவ்யூஹ #வாசுதேவனை அனுபவிக்கிறார் ஆண்டாள்.
ஏஷ நாராயண ஸ்ரீமான் க்ஷீரார்ணவ நிகேதன: நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஆகதோ மதுராம் புரிம்.
இந்த-ஸ்ரீமகள்நாயகனான நாராயணனே ,

பாற்கடலில் இருந்து தன் பாம்புப்படுக்கையை விட்டு மதுராபுரி க்கு கண்ணனாக வந்தான் என்ற ஶாஸ்த்ரம் மிக பிரபலம். ஆகையால் அந்த கண்ணனை பார்கடலுல் துயிலும் பரமனாக கோதை பிராட்டி தன் மணாளனாக அனுபவிக்கிறாள்.

முதல் பாசுரத்தில் இடைச்சியர்களை அழைத்த நாச்சியார் தற்போது வையத்து வாழ்வீர் என "உலகத்தீரே" என்று அனைவரையும் பாவை நோன்பிற்காக விளித்து கூப்பிடுகிறார்.. நோன்பின் விதிகளை சொல்லி.

உலகத்தில் பால் நெய், மை இடுதல் மலர் சூடுதல் என்ற ரசனையான உலக விஷயங்களை விலக்கி பேரின்ப பேற்றிக்கான நோன்பை தொடங்குகிறார்.

மிக முக்கியமானதும் அவசியமானதும் குறிக்கோளானதுமான ஒரு விஷயத்தை நோக்கி நமது மனம் உடல் ஆன்மா இருக்க வேண்டுமெனில்

அதை அடைய தடையாய் இருக்கும் சிறிய விஷயங்களை விடுதல் நமது வைராக்கியத்தை வளர்க்கும்.
மிக அற்பமான விஷயங்கள் நம்மை எண்ணிய காரியத்தை அடையவிடாமல் திசை திருப்பும். ஆகையால்..

நெய்யுண்னோம்,
பாலுண்னோகரொஐ ஒம்,விடியற் காலையில் குளித்தல் ...

மனதை திசைதிருப்பும் பொருட்களை உபயோகிக்காமல் இருத்தல். தவறான வார்தைகள் செயல்களை செய்யாமல் இருத்தல்.வம்பு பேசாமை. முடிந்த வரை தானம் தருமம் செய்தல்.

பின் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமாளையே முப்பொழுதும் நினைத்து பூஜித்தல்.இந்த நோன்பின் விதிகளாகும்.

பெண்கள் மலர் சூடிக்கொள்வது சாத்திரம் சொன்ன விஷயமாக இருப்பதால் மலரிட்டு நாம் முடியோம் என கூறினாள். அதாவது மலரினை நாமாக சூடிக்கொள்ள மாட்டோம்.ஆசையாக கண்ணனே சூடிவிட்டால் சூடிக்கொள்வோம் என பொருள்..
முதல் பாசுரத்தில் நோக்கம்.. அடையவேண்டிய இடம்..

இரண்டாம் பாசுரத்தில் அந்த நோக்கத்தை அடையவேண்டிய விதிகளும் மற்றும் தடுக்கும் விரோதி காரணங்களை கூறி அருளினாள்.

விஷ்ணு சித்தரின் மகளான சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் பாதம் பணிவோம்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling