Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Dec 24, 2022, 13 tweets

#Periyar
வீட்டிற்குள்ளேயே இருந்து அரசியல் பேசும் தற்குறிகளே,
அரசியல்னா என்னன்னு தெரியுமா?
பணக்காரரான நடேசன் முதலியார், டாக்டருக்கு படிச்சிட்டு, Practice பண்ணலாம்னு வந்தா,
கல்லூரி, மருத்துவமனை, நீதிமன்றம், அரசியல்னு எல்லா இடத்திலையும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே

உக்காந்துக்கிட்டு ஆதிக்கம் பன்றதை சகிச்சுக்க முடியாம,
நம்ம பசங்களயும் படிக்க வப்போம்னு, எல்லாரும் வாங்க, படிங்கன்னு விடுதிய கட்டி... பிறகு பார்ப்பனர்கள் இல்லாதவர்கள் சங்கம்னு உருவாக்கி, அதை தென்னிந்திய நல உரிமை சங்கம்னு மாத்தி...

டாக்டர் மாதவன் நாயரையும், கபாலீசுவரர் கோவிலில்

அவமானப்பட்ட பணக்காரர் தியாகராயரையும் சேத்துக்குட்டு Justice partyன்னு தொடங்கி அதை நீதிக்கட்சியா மாத்தி, சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேணும்னு கேட்டு,
உடம்பு சரியில்லாம இருந்தப்பவும் நம்ம பயலுவலோட எதிர்காலம் முக்கியமுன்னு, இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கே

போயி சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேணும்னு கேட்டு, அங்கேயே டாக்டர் மாதவன் நாயர் தன் உயிரை விட்டு...

மான்டேக் - செம்ஸ்ஃபோர்ட் கொடுத்த Quashi Federalஐ பயன்படுத்தி தேர்தல்ல நின்னு ஆட்சியை புடிச்சு...
19,000 ஆரம்ப பள்ளிகளை திறந்து, மதிய உணவு போட்டு,

எல்லாரையும் படிக்க வச்சு, அரசு வேலை வாங்கி கொடுத்து...

சமஸ்கிருதத்தை நீக்கி, நிறைய பேர மருத்துவம் படிக்க வச்சு...

கோயில்ல நடந்த அக்கிரமங்களயும், கோயில் சொத்துகளை திருடுனதையும் அடக்க இந்து அறநிலையத் துறைய ஆரம்பிச்சு

மக்கள திருத்த சுயமரியாதை இயக்கம் ஆரம்பிச்சு, ஊர் ஊரா போயி

செருப்பு, சாணி, மலத்தால அடி வாங்கி....

தேவதாசி முறையை ஒழிச்சு....

பறையர்களையும், நாடார்களையும் வைக்கம் சிவன் கோவில் வீதிக்குள்ள விடமாட்டோம்னு சொன்ன, தன் குடும்ப நண்பர் திருவிதாங்கூர் மஹாராஜாவை எதுத்து சிறைக்கு போயி....

பறையர்களையும், நாடார்களையும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்ள

கூட்டிட்டு போனதால சிறைக்கு போயி...

தனி தமிழ்நாடு கேட்டு லாகூர்லேர்ந்து இங்கிலாந்து போறப்போ விமான விபத்துல தளபதி பன்னீர்செல்வத்தை இழந்து....

நீதிக்கட்சி காலத்தில் ஆரம்பிச்ச பள்ளிகள்ள 3000 பள்ளிகள மூடி, இந்திய திணிச்ச ராஜகோபால் என்ற ராஜாஜிய எதுத்து 2 வருடம் சிறையில இருந்து...

நீதிக்கட்சிய திராவிட கழகமாக்கி,

49ல திராவிட முன்னேற்றக் கழகத்தினை ஆரம்பிச்சு...

குலக்கல்வி என்ற பேர்ல 6000 பள்ளிக்கூடங்கள மூடுன ராஜகோபால் என்ற ராஜாஜிய பதவிய விட்டு தூக்கி...

காமராஜர முதலமைச்சராக்கி... பெரியாரிஸ்ட்டான நெ.து. சுந்தரவடிவேலுவை வச்சு ராஜாஜி மூடுன பள்ளிகளை திறக்க

வச்சு, மேலும் சிவந்தான்பட்டி உட்பட பல கிராமங்கள்ள பள்ளிகளை திறக்க வச்சு... எல்லா பள்ளிகள்ளையும் மதிய உணவு போட்டு... எல்லா தரப்பு புள்ளைங்களையும் படிக்க வச்சு, வேலைக்கு அனுப்பி...

57ல்ல போட்டி போட்டு, 15 MLAக்களை பெற்று, 59ல சென்னை மாநகராட்சி தேர்தல்ல 49 MCக்களை வெற்றி பெறச்

செய்து மாநகராட்சி மேயராகி, 62ல 50 MLAக்களை பெற்று, 65ல இந்திய எதிர்த்த 1000 இளைஞர்கள, கக்கன் துப்பாக்கிகளுக்கு பலிகொடுத்து...

67ல் ஆட்சிய புடிச்சு,

பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் உட்பட, திராவிட கொள்கைளை சட்டமாக்கி...

1971ல 183 MLAக்களை பெற்று...

நிலச் சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி...

ஒன்றியத்தின் எமர்ஜென்சியை எதிர்த்து, ஆட்சிய பறிகொடுத்து...

RSS, ராமச்சந்திரன வச்சு கட்சிய ஒடச்சப்பவும் கட்சிய காப்பாத்தி 89ல மீண்டும் ஆட்சிய புடிச்சு... ஜெயலலிதா, சுப்பிரமணியம் சாமி சதியால மீண்டும் ஆட்சிய பறிகொடுத்து...

வைகோ கட்சிய ஒடச்சப்பவும், கட்சிய காப்பாத்தி 96ல மீண்டும் ஆட்சிய புடிச்சு
இதை தடுக்க RSS, விஜயகாந்த வச்சு 10% வாக்குகள பிரிச்சப்பவும் மீண்டும் ஆட்சியை புடிச்சு
காங்கிரஸுக்கு பங்கு கொடுக்காம,5ஆண்டுகளும் ஆட்சி செய்து

எந்த ஈழத்துக்காக உழைத்தோமோ, அந்த இயக்கத்தாலேயே கொலைப்பழி சுமந்து

தலைவரை இழந்த பொழுதும் கட்சிய கட்டுக் கோப்பா வச்சு,
தமிழ் நாட்டில் தேர்தல் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி
இந்திய ஒன்றியத்துக்கே சவால் விடும் அளவுக்கு வளந்து இருக்கோமே
இதுதான் அரசியல்.

அரசியல்னா,
யாருக்கோ கழுவி விடுறதுன்னு நினைச்சியா......!!! .
#KandasamyMariyappan 🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling