01/01/1959 கியூபா மக்களுக்கு மிகமுக்கியமான ஒரு புத்தாண்டு காரணம் 1959 டிசம்பர் 31 இரவு அந்நாட்டு அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி அதிபர் பாடிஸ்டா நாட்டை விட்டு வெளியேற்றப்படிருந்தான், வீதிகளில் எல்லாம் "viva la revolution, viva la fidel, viva la cuba," 🧵 #Cuba #cubanrevolution #Cuban
என விவசாயிகளும் தொழிலாளர்களும் கோஷங்கள் எழுப்பி ஆரவாரத்தோடு பிறந்தது புத்தாண்டு. ஆம் இன்று கியூபா புரட்சி தினம்.
1953 பீடல்காஸ்ட்ரோ வும் மற்ற தேசிய விடுதலை குழுக்களும் தீவிரமாக போராடும் போது கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
பின் 1956 ல் பீடல்காஸ்ட்ரோ, சே குவேரா, ரவூல் காஸ்ட்ரோ மற்றும் பல கொரில்லா வீரர்கள் எல்லாம் சியரா மாட்ரோ மலைபகுதிகளில் பயிற்சி பெற்று தொடர் தாக்குதல் நடத்தி முன்னேறினர்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு 1958 டிசம்பர் இறுதி நாட்களில் முக்கிய நகரங்களை கொரில்லா குழுக்கள் கைப்பற்றின
விவசாயிகள், தொழிலாளர்கள் என மக்களும் பெருதிரளாக கொரில்லா குழுவினரை ஆதரித்தனர், மேலும் அவர்கள் அதிபரையும், யுனைட்டெட் ப்ரூட்ஸ் கம்பெனியையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் வெறுத்தனர்.
64 வது கியூபா புரட்சி தினத்தை கியூப மக்கள் கொண்டாடும் நேரத்தில், கியூபா பல சாதனைகளை ஏகாதிபத்திய சோதனைகளை மீறி அது சாதித்து வருகிறது.
புரட்சிக்கு பின் கல்வியும், மருத்துவமும் இலவசமாகவும், தரம் உயர்த்தப்பட்டும் வந்துள்ளது.
அதிக மருத்துவர்களை கொண்ட நாடாக,
கல்வி கற்றோர் அதிகம் உள்ள நாடாக கியூபா உள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து பொருளாதார தடை விதித்து வருகின்ற போதிலும் தன்னுடைய வளர்ச்சியிலும், மக்களுக்காக முற்போக்கு திட்டங்களை அமல்படுத்தி மனித வாழ்வை மேம்படுத்துவதிலும் முன்னுதாரணமாக இருந்து வருகிறது. #Cuba #Cubanrevolution
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.