Tamilmarx offers Marxist perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues.
உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்
Jul 23, 2023 • 15 tweets • 2 min read
நெல்லையின் ஜாலியன் வாலாபாக்!
1999ம் வருடம் ஜூலை 23ம் தேதி இந்த உலகம் மற்றுமொரு அரச பயங்கரவாதத்தை காண நேர்ந்தது. அதுதான் தாமிரபரணி படுகொலைகள். 🧵 #Threads
#தாமிரபரணி_படுகொலை #தாமிரபரணி #நெல்லை
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்டத்தில் வேலை செய்து வந்த 4 ஆயிரம் தொழிலாளிகள் வேலை செய்துவந்தனர் இதில் தோட்ட வேளைகளில் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தோர் தலித்துகளே ஆவர்.
கூலி உயர்வு உட்பட பல கோரிக்கைகளுக்காக 9 மாத காலம் வேலை நிறுத்தம் செய்தனர் தொழிலாளர்கள்.
Feb 17, 2023 • 4 tweets • 2 min read
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #TeacherStrike#Ordinance149#DMKgovt#hunger_strike 1/4
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக
அரசுப் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும், 2/4
International North–South Transport Corridor என்பது இந்தியா-ஈரான்-ரஷ்யா இடையே வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழித்தடமாகும். இந்த வர்த்தக பாதை 7200 கிமீ நீளம் கொண்டது மற்றும் சரக்கு போக்குவரத்து என்பது சாலைகள், கப்பல்கள் மற்றும் இரயில்வேயின் பல-வகை வழியாகும். 🧵
இதன் மூலம் இந்தியாவிற்கு நலன்கள்?
உலக-அரசியல் சூழலில் INSTC ஒரு முக்கியமான நேரத்தில் செயல்பட முடியும். ஈரான் மற்றும் ரஷ்யாவுடனான தனது வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கும், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவுடனான தொடர்பை வலுப்படுத்தவும் இது இந்தியாவுக்கு பெரும் நன்மையை அளிக்கும்
EU Parliament approved the new CO2 emissions reduction targets for new passenger cars and light commercial vehicles, part of the “Fit for 55” package. 1/4
#EU#CO2#Climate
The landmark rules will require that by 2035 carmakers must achieve a 100 per cent cut in CO2 emissions from new cars sold, which would make it impossible to sell new fossil fuel-powered vehicles in the 27-country bloc in Europe. 2/4
The trade deficit is eased to $17.75B, the lowest in a year. And import also fell slightly as 3.6% to $50.66 billion in January. Sad part is,
Exports of the countries merchandise goods fallen as 6.6% to $32.91 billion for January month.
According to The Commerce and Industry Ministry's revised numbers, As many as 16 of India’s top 30 export commodities reported a decline, with handlooms,
Jan 1, 2023 • 5 tweets • 2 min read
வீதி நாடகக் கலைஞர், போராளி, கம்யூனிஸ்ட் தோழர் சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று.
1989 ஜனவரி 1ல் ஜந்தர்பூர் எனும் உத்திரபிரதேசத்தில் உள்ள கிராமம், அங்கு தான் சப்தரின் ஜனநாட்டிய மஞ்ச் /ஜனம் நாடகக் குழு "Halla Bol - உரக்கப் பேசு" என்ற நாடகத்தை நடத்தியது. #Safdarhashmi
அப்போது காங்கிரஸ் கட்சியினர் குண்டர்களோடு வந்து ஜனம் நாடகக் குழு மற்றும் பார்வையாளர்களை கடுமையாக தாக்கியது.
அந்த தாக்குதலில் தோழர் சப்தர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
தோழர். சப்தர் ஹஷ்மி வெறும் நாடககாரர் மட்டுமல்ல,
Jan 1, 2023 • 6 tweets • 3 min read
01/01/1959 கியூபா மக்களுக்கு மிகமுக்கியமான ஒரு புத்தாண்டு காரணம் 1959 டிசம்பர் 31 இரவு அந்நாட்டு அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி அதிபர் பாடிஸ்டா நாட்டை விட்டு வெளியேற்றப்படிருந்தான், வீதிகளில் எல்லாம் "viva la revolution, viva la fidel, viva la cuba," 🧵 #Cuba#cubanrevolution#Cuban
என விவசாயிகளும் தொழிலாளர்களும் கோஷங்கள் எழுப்பி ஆரவாரத்தோடு பிறந்தது புத்தாண்டு. ஆம் இன்று கியூபா புரட்சி தினம்.
1953 பீடல்காஸ்ட்ரோ வும் மற்ற தேசிய விடுதலை குழுக்களும் தீவிரமாக போராடும் போது கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
Dec 31, 2022 • 10 tweets • 2 min read
ஏழை மக்களின் பயோமெட்ரிக் விபரங்களை பெற ஒப்பந்தமே இல்லாமல் தனியார் நிறுவனத்தை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி.
சென்னை கண்ணப்பர் திடல் பகுதில் உள்ள குடிசை வாழ் மக்களிடமிருந்து கைரேகை மற்றும் விழித்திரை ஸ்கேன் ஆகியவற்றை Impact technology எனும் தனியார் நிறுவனம் பெற்றுவந்துள்ளது. 1/9
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (TNUHDB) மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அப்பகுதியில் வாழும் வீடற்ற மக்களுக்கு வீடு வழங்குவதற்கு இந்த விபரங்கள் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
2011 - 2015 வரை தான் Impact technology நிறுவனத்தோடு 2/9
Dec 30, 2022 • 4 tweets • 2 min read
அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே 3நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு பலர் மருத்துவ மனையில் உள்ள போதும் போராட்டம் தொடரும் என்றே உறுதியாக உள்ளார்கள்.
அரசுப் பள்ளிகளில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி, நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Dec 15, 2022 • 7 tweets • 2 min read
பெயரளவு கூலி? உண்மையான கூலி? என்ன வேறுபாடு? நம்ம இப்ப வாங்குறது என்ன கூலி?
முதலில் கூலி என்பது நாம் ஒரு நிறுவனத்திடம்/முதலாளியிடம் நம் உழைப்பை கொடுத்து நாம் உயிர் வாழ, சமூக வாழ்க்கையை மேற்கொள்ள தேவையான பொருட்களை வாங்க பெறப்படும் பணமே ஆகும்.
ஆனால் நாம் பெறும் கூலி வைத்து நம்மால் எவ்வளவு பொருட்கள் வாங்க முடியும் என்ற ஒப்பீட்டில் தான் உண்மையான கூலி என்று கூலியை வரையறுக்க முடியும்.
உதாரணத்திற்கு, ஒரு நபர் தன் வாழ்வாதார செலவினங்களுக்கு நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் தேவைபடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
Dec 15, 2022 • 5 tweets • 2 min read
பிரதமர் மோடி யின் அனுமதியோடு #BSNL க்கு 1.64 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் IT துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மொத்தம் - ₹1.64 லட்சம் கோடி,
அதில், அரசு எடுத்து கொண்டவை
Spectrum charges - ₹45,000 கோடி
அரசு எடுத்துக்கொண்டவை
In AGR - ₹35,000 கோடி
இது தவிர, BSNL க்கு தரமான 4ஜி டவர்களை இன்னும் வழங்காத "டாடா" நிறுவனத்திற்கு ₹23000 கோடி கட்டணமாக செல்லுகிறது.
₹40000 கோடி கடன் பத்திரங்களாக, வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ள வழங்கப்படுகிறது.
Dec 14, 2022 • 5 tweets • 2 min read
பெரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக மக்கள் தொடர்ந்து 9 நாட்களாக போராடி வருகின்றனர்.
பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோவை கைது செய்ததில் வலதுசாரிகள் சதி அம்பலம்.பொது மக்கள் இடதுசாரியான காஸ்டில்லோ விற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தை #PeruLibre#Peruprotest#PeruResiste#PeruEnCrisis
கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பெரிய முதலாளிகள் கடந்த 18 மாதங்களாகப் பேசி வந்துள்ளனர் எனவும் அவர்கள் நடத்திய சதி ஆலோனைகளின் குரல் பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. காஸ்டில்லோவை
Dec 10, 2022 • 5 tweets • 3 min read
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
தமிழக மீனவர்கள், 2019ல் 190 பேர், 2020ல் 74 பேர், 2021ல் 143 பேர், 2022ல் 219 பேர் என இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் இன்னும் சிறைகளில் இருக்கிறார்கள். 1/5 #fisherman#tamilnadu
இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகள் 2019ல் 39, 2020ல் 11, 2021ல் 19, 2022ல் 30 என்றும் அவற்றில் மீண்டும் திரும்ப மீட்கப்பட்ட படகுகள் 2019ல் 1, 2020ல் 1, 2021ல் 4, 2022ல் 0 ஆகும். 2/5
Dec 9, 2022 • 5 tweets • 5 min read
தரவுகளே இல்லாமல் அரசு நடவடிக்கை எப்படி எடுக்கும்! ஐடி ஊழியர்கள் குறித்தும் தரவுகள் இல்லை, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வீழ்ச்சி குறித்து தரவுகள் இல்லை!
ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் @AARahimdyfi (CPIM) அவர்கள் சமீபகாலத்தில் நிகழ்ந்து வரும் IT துறை ஆட்குறைப்பு,1/5 #Parliament
பணிநீக்கத்தை தடுக்க கேரளா மாநில இடது ஜனநாயக முன்னணி அரசின் செயல்களை சுட்டிகாட்டி இது போன்று மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் இது குறித்தான தரவுகள் மத்திய அரசிடம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார். 2/5 #ParliamentWinterSession#ParliamentQuestion#ParliamentofIndia
Dec 9, 2022 • 5 tweets • 2 min read
மூலதனத்திற்கும் கூலிக்கும் இடையே முற்றும் முரண்பாடு!🧵
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) சமீபத்தில் "Global Wage Report 2022-2023" & "Asia-Pacific Employment and Social Outlook 2022: Rethinking sectoral strategies for a human-centred future of work" என்ற இரண்டு அறிக்கைகளை #wage
வெளியிட்டது இது தொற்றுநோய்க்கு பிந்தைய உலகளாவிய வேலைவாய்ப்பு சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறது.
"ஊதியம்" என்ற வார்த்தையானது, ஊதியம் பெற்ற வருடாந்திர விடுப்பு மற்றும் ஊதியத்துடன் கூடிய நோய்வாய்ப்பட்ட விடுப்பு போன்ற வேலை செய்யாத நேரம் (அறிக்கைக்காக மாதாந்திரம்) குறிப்பிட்ட காலத்தில்
Dec 8, 2022 • 4 tweets • 1 min read
ரெப்போ வட்டி விகித உயர்வு ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களை வெகுவாக பாதிக்கும்.
வட்டி விகித உயர்வால் வீட்டுக்கடன் ,வாகன கடன்,தனிநபர் மற்றும் தங்க நகைக்கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
#RBIPolicy#RBI 1/4
மாதம் தோறும் செலுத்த வேண்டிய தவணைத்தொகை அதிகரிக்கும்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே Repo rate உயர்த்த படுவதாக RBI கூறினாலும் இந்த நடவடிக்கையால் இதற்கு முன் விலைவாசியும் பணவீக்கமும் குறைந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
2/4
Dec 7, 2022 • 4 tweets • 2 min read
Parliament has started today for the 2022 Winter Session, which will see 17 sittings over 23 days.
As per the notified schedules, the government plans to introduce 16 new Bills during the session. 1/4 #Parliament#bill#india#goverment
These include a draft law to increase accountability and reform the electoral process in multi-state cooperative societies. The Cantonment Bill deals with the administration of cantonments to impart democratisation and increase efficiency.
Oct 28, 2022 • 8 tweets • 2 min read
'தெரு பிரச்சினைகளை கையில் எடுங்க, மக்களோடு அந்த பிரச்சினைகள் குறித்து பேசும் போது சர்வதேச நிலைமைகளையும் இணைத்து எளிமையா விவரித்து சொல்லுங்க, அதுக்கு தான் நாம இருக்கோம்...' என்று இளம் தோழர்களுக்கு வழிகாட்டிய கலங்கரை விளக்கம் தான் தோழர் என்.நன்மாறன். 1/8 #Nanmaran#comrade@tncpim
அரசியல் வாழ்வில் எளிமை, நேர்மை என்றால் அதில் நம் காலத்தின் உதாரணம் தோழர் என். நன்மாறன்.
ஒரு கம்யூனிஸ்டாக 1968-70களில் தன் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு உயர்த்திய அந்த காம்ரேட் இறுதிவரை மக்கள் பணியில் அயராது உழைத்தார்.
Oct 27, 2022 • 6 tweets • 2 min read
ஒப்பந்த தொழிலாளர் முறையை எதிர்த்து தமிழக அளவில் தொடர் போராட்டங்கள்! நவதாராளமய கொள்கைகளால் போராட்ட கொந்தளிப்பில் தொழிலாளர்கள்!
வர்க்கப் போராட்டங்கள் ஓய்வதில்லை
1:தமிழக மின் வாரியத்தின் ஒப்பந்த ஊழியர்கள் ஆந்திரவில் சென்று கடந்த 10 நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 1/6🧵
2: திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் 29 நாட்களாக தொடர்ந்து பல விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
3: கோயம்புத்தூர் தூய்மை பணியாளர்கள் தீபாவளி மறு நாளிலிருந்து போராட்டங்களை நடத்தினர். 2/6