VISWA Profile picture
TRAVELLER || LAND and PEOPLE || TAMIL NADU NATURE 🇮🇳🌄 🔂 for 🔄 Comment for 🔙. 💯 Following

Jan 3, 2023, 9 tweets

#ராமாவரம்தோட்டம்_கோமாளிகளின்கூட்டம்
#பகுதி2_சுட்டான்_சுட்டேன்
1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம். எம்.ஜி.ஆர் தொண்டையில் குண்டடிப்பட்டு,ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் எம்.ஆர்.ராதாவும்

ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நெற்றிப்பொட்டிலும், கழுத்திலும் குண்டடிப்பட்டு ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். இருவருடைய ஸ்ட்ரெச்சர்களுக்கும் இடை ஒரு மீட்டர் இடைவெளி தான். குண்டடிப்பட்ட இருவரிடமும் எந்த சலனமும் இல்லை.

எம்.ஜி.ஆரை, எம்.ஆர். ராதா சந்தித்தற்கான காரணம் என்ன?

பெற்றால்தான் பிள்ளையா படத் தயாரிப்பாளர் வாசுவுக்கு எம்ஜிஆர் கொடுத்த டார்ச்சரால் படத்தின் செலவு எகிறியது. படம் முடங்கும் சூழ்நிலை. பலரிடமும் உதவி கேட்டார்.
ஒரு லட்சம் ரூபாயை எம்.ஆர்.ராதா, கொடுத்து உதவினார் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியில் வரட்டும், அந்த பணத்தை

எம்.ஆர்.ராதாவுக்குத் தருகிறேன் என்று கூறியிருந்தார் எம்.ஜி.ஆர். பெற்றால்தான் பிள்ளையா படம் பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஆர்.ராதா தன்னுடைய பணத்தை வாங்க வாசுவுடன் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதில் கோபம் அடைந்த எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியினால் சுட்டார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
இது ஊடகங்களில் வந்த தகவல். ஆனால் அதற்கு முன்பே ராதாவுக்கும் எம்ஜிஆருக்கும் பிரச்சனைகள் இருந்தது.
தனி இஷ்டத்துக்கு படங்களில் காட்சிகளை மாற்றும் போக்கு

அந்தக் காலத்தில் ராதா மட்டுமல்ல எந்த நடிகருக்குமே கடுப்பாகத்தான் இருக்கும்.
துப்பாக்கி சண்டையின் போது உடனிருந்த சாட்சியான வாசுவின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது.
திமுகவில் இருந்ததால் செல்வாக்கால் வாசுவை மிரட்டி எம்ஜிஆர் தரப்பு ராதாவுக்கு எதிராக சொல்ல வைத்தது

எம்.ஆர்.ராதா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

1) கொலை செய்ய முயன்றது (இ.பி.கோ – பிரிவு 307)

2) தற்கொலை முயற்சி (இ.பி.கோ – பிரிவு 309)

3) உரிமம் இல்லாமல் துப்பாக்கி (ஆயுதச் சட்டம் பிரிவு 25)

4) உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்து சட்டவிரோத காரியம் (ஆயுதச் சட்டம் –பிரிவு 27)

எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் வெப்லி ஸ்காட் .420 காலிபர் வைத்திருந்தனர். இருவரும் தத்தம் துப்பாக்கிகளை P.ORR & Sons நிறுவனத்திலிருந்து, வாங்கியிருக்கின்றனர். அதுவும் ஒரே நாளில். இருவரின் துப்பாக்கி உருளைகளும் (Cylinders) ஒரே மாதிரியானவை. எம்.ஜி.ஆர் தன்னுடைய துப்பாக்கியை

பயன்படுத்த தேவையான உரிமத்தை, அரசிடம் பெற்று புதுப்பித்து வந்திருக்கிறார். ஆனால் ராதா துப்பாக்கியை பயன்படுத்த வழங்கப்பட்ட உரிமத்தை புதுப்பிக்கவில்லை.
எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயற்சி செய்ததற்குத் Motive எம்.ஜி.ஆர் மீதிருந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றது அரசு தரப்பு.
அது பற்றி நாளை

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling