VISWA Profile picture
TRAVELLER || LAND and PEOPLE || TAMIL NADU NATURE 🇮🇳🌄 🔂 for 🔄 Comment for 🔙. 💯 Following

Jan 4, 2023, 11 tweets

#ராமாவரம்தோட்டம்_கோமாளிகளின்கூட்டம்
#பகுதி2_துப்பாக்கிசண்டை_பார்ப்பனபத்திரிக்கைஉருட்டு

பெரியார் தன்னுடைய 72 வது வயதில், தன் வயதில் சிறியவரான மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்துக்கு யோசனை கூறியவர் ராஜாஜி. பிராமணரான ராஜாஜியின் யோசனையைக் கேட்டு பெரியார் மணியம்மையை

திருமணம் செய்து கொண்டார் என்ற காரணத்தை முன்வைத்து, அண்ணாதுரை மற்றும் ஈ.வி.கே சம்பத் ஆகியோர் பெரியாரின் திராவிட கழகத்தை விட்டுப் பிரிந்து தனியே திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தனர். கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் அண்ணாவை பின்பற்றி, பெரியாரை விட்டு விட்டு திராவிட

முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தனர். ஆனால் எம்.ஆர்.ராதா தொடர்ந்து பெரியாரின் விசுவாசியாகவே இருந்தார். திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகத்தைப் போல் இல்லாமல் தேர்தல் அரசியலில் இறங்கியது.
1957 ஆம் ஆண்டிலிருந்து, காங்கிரசை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும்

தி.மு.க போட்டியிட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்குத் தேர்தலை சந்தித்தபோதும் திமுகவால் தமிழ்நாட்டில் காங்கிரசை பதவியிலிருந்து இறக்க முடியவில்லை.
1967 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தி.மு.க, காங்கிரசை வழக்கம்போல் எதிர்த்தது. ஆனால் பெரியாரின் திராவிடர் கழகம் காங்கிரசை ஆதரித்தது.

எம்.ஆர்.ராதாவும் காமராஜரும் நெருங்கிய நண்பர்கள். எம்.ஆர்.ராதா காங்கிரஸ் ஜெயிக்கவேண்டும் என்று நினைத்தார். தி.மு.கவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரால் காமராஜருக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைத்து எம்.ஜி.ஆரை, எம்,ஆர்.ராதா சுட்டார்

இதைப் பார்த்து சிரிக்காதீங்க மக்களே 🤭
இன்று பிஜேபிக்கு முட்டுக் கொடுக்கும் அனைத்து பத்திரிகைகளும் அன்றைக்கு காங்கிரசின் செல்ல நாய்க்குட்டிகள்.
1967 வெற்றியே எம்ஜிஆர் குண்டு காயத்துடன் தேர்தல் பரப்புரை செய்தது என்றெல்லாம் எழுதி அண்ணா மற்றும் கலைஞரின் உழைப்பை கொச்சைப்படுத்தினர்

இன்னொரு பத்திரிக்கை,
எம்ஜிஆர் தன் படங்களில் திமுகவின் உதயசூரியன் சின்னம்,அதன் கொள்கைகளை வலிந்து திணித்தார்.
திராவிடர் கழக முகாமிலிருந்த எம் ஆர் ராதா அதனை எதிர்த்து எம்ஜிஆர் உடன் நடிக்க மறுத்தார் இருவரின் கொள்கை காழ்ப்புணர்ச்சி கொலை முயற்சி வரை சென்றது என்று புளுகித் தள்ளினார்

துப்பாக்கி சூடு சம்பவத்தை வைத்து திமுகவுக்கும் திராவிடர் கழகத்திற்கும் சிண்டு முடியும் முயற்சி பெரியார் மரணம் வரை தொடர்ந்தது.
முதலில் ஏழாண்டுகள் தண்டனையும் மேல்முறையீட்டிற்கு பின் ஐந்தாண்டுகளாக குறைத்து
வெளியில் வந்த பின் எம் ஆர் ராதாவும் எம்ஜிஆரும் தங்கள் நட்பை தொடர்ந்தனர்.

அண்ணாவிற்கு பின் கலைஞர் முதலமைச்சர் ஆனார்.
எம்ஜிஆருக்கு மந்திரி சபையிலோ ஆட்சியிலோ முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
சரிந்து கிடந்த எம்ஜிஆரின் மார்க்கெட் துப்பாக்கி சண்டைக்கு பின் ஏறத் தொடங்கியது.
அண்ணா மற்றும் கலைஞரின் செயல்பாட்டால் பெரியாரின் கோபமும் குறைந்தது

பார்ப்பன அதிகார பீடங்களுக்கு வியர்த்துக் கொட்டியது.
அக்காலத்தில் எம்ஜிஆருக்கு முதல் ரசிகர் மன்றம் அமைத்தவர் கல்யாண சுந்தரம் என்ற பிராமணர்.
அவர் மூலம் திமுக வெற்றி பெற்றது எம்ஜிஆரால் தான் என்ற பிரச்சாரம் ரசிகர் மன்றத்தால் பொது வெளியில் முன்னெடுக்கப்பட்டு ஊடகங்களில் பரப்பப்பட்டது

அப்போலோ ஆஸ்பத்திரியில் காணாமல் போன கால்கள் போலவே, மர்மம் விலகாமலே காலப்போக்கில் துப்பாக்கி சண்டை மறக்கடிக்கப்பட்டது.
தொடர்ந்து 1977 இல் அதிமுக ஆட்சியை கைப்பற்றி எம்ஜிஆர் முதல்வர் ஆனதற்கு பிறகு ராமாபுரம் தோட்டம் ஒரு மர்மக்கோட்டையாகவே மாற்றப்பட்டது
#மர்மம்_தொடரும்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling