#ராமாவரம்தோட்டம்_கோமாளிகளின்கூட்டம்
#இரண்டாவதுபல்டி
#ஏழைப்பங்காளனின்_கோமாளிபல்டி
விவசாயி,தொழிலாளி,உழைக்கும் கரங்கள்,
உரிமைக்குரல்,மீனவநண்பன்
என தன்னை ஏழைகளை இரட்சிக்க வந்த தேவதூதனாக மக்களை நம்ப வைத்து....வாரிக் கொடுத்த வள்ளல்...கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான மகோரா
தமிழகத்தின் சுபீட்சத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்து பெரும்பான்மையான மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டு, இலவசப் பற்பொடி, செருப்பு, புடவை, பிளாஸ்டிக் குடம், சத்துணவு என்று இவரது தானத்திற்குத் தவம் கிடக்கச் செய்துவிட்டு
தனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை தானமாக வாரி வழங்கி பல்டி அடித்தார்
சென்னை மிருகக்காட்சி சாலை இடத்தை பழனி பெரியசாமிக்கும்,
சென்னை வளசரவாக்க புறம்போக்கை அம்பிகா-ராதாவுக்கும்,
போரூர் புறம்போக்கை சாராய உடையாருக்கும்,
மருவத்தூர் ஏரிப்புறம்போக்கை பங்காருவுக்கும்..
முனு ஆதி, லியாகத் அலிகான், மாபொசி., அங்கமுத்து, உக்கம் சந்து, பழக்கடை பாண்டி, கோடம்பாக்கம் குமார், சுலோச்சனா சம்பத், கல்யாணி ராமசாமி, அனகாபுத்தூர் ராமலிங்கம்,குருவ ரெட்டியார் என பெரிய ஒட்டுண்ணிக் கூட்டத்தை
வாரியம்,அரசு நிறுவன தலைவராக்கி,அரசாங்கப் பணத்தைச் சுருட்ட ஏற்பாடு செய்தார்
திரை பிம்பத்தை பார்த்து இவன் தங்களை ரட்சிக்க வந்த என்று நம்பி ஓட்டு போட்டு ஏமாந்த அப்பாவி பொதுமக்களை சோத்துக்கு மட்டை அடிக்க விட்டு,
ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, லதா, குட்டி பத்மினி கோவை முதலாளி வரதராஜுலு போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கும் பதவிகளைத் தானம் செய்தவர் மகோரா.
#மூன்றாவதுபல்டி
"குடிகாரன் பேச்சு விடியறக்குள்ளேயே போச்சு"
மதுவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் குழுவிலிருந்த மகோரா,தி.மு.க-வில் இருந்து வெளியேற கண்டுபிடித்த காரணங்களில் மதுவும் ஒன்று. கணக்கு கேட்ட கூட்டத்தில், மதுவைப் பற்றியும் கண்டித்தார். விலக்கும் கடிதத்தில் இதுவும் உள்ளது
'பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதற்கு ஆதரவாகப் பேசிவிட்டு, இப்போது வெளி மேடைகளில் விமர்சித்துப் பேசுவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாகும்’ என்று தி.மு.க-வின் அன்றைய பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் குறிப்பிட்டார்
"'என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான்
நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக் கொள்கிறேன்’ 2.12.1979 'அண்ணா’ நாளிதழில்,மகோரா
1.5.1981-ல் மகோரா சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளை மீண்டும் திறந்தார்
அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இல்லை
நான்கு தனி நபர்களுக்கும் கூட்டுறவுத் துறை நிறுவனத்துக்கும் அரசு அனுமதி அளித்து,சாராயம், கோடிகளைக் கொட்டும் தொழிலாக மாற்றியது மகோராதான்
பல்டிகள் பல நூறு உண்டு,மறுப்புகளுக்கேற்ப மறுபடியும் பல்டி அடிக்கப்படும்.
பதிவு உதவி :
எழுத்தாளர் வாஸந்தி எழுதிய ’ஜெயலலிதாவின் மனமும் மாயையும்’
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.