விஸ்வா || VISWA Profile picture
Breaking News | Educationist | History Fanatic | Travel Enthusiast | Proud Dravidian Stock | Secular Indian

Jan 7, 2023, 11 tweets

#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
1987-ல் இறந்தபோது “இடி அமீன்: எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற திரைப்படம் சென்னையில் வெற்றிகரமாக ஓடியது. ‘எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் இடி அமீன்’, ஒரு ‘சேடிஸ்ட்’ – குரூர இன்பம் காண்பவர், ‘துக்ளக்’கைப் போல திடீர் திடீரென்று முடிவுகளை மாற்றிக்கொள்ளும் கோமாளி என்று

பத்தாண்டுகளாக கலைஞர் முரசொலி பத்திரிக்கையில் எழுதி வந்து கொண்டிருந்தார்.
ஒருவர் இறந்தபின் அவரை தூற்றுவது நாகரீகம் இல்லை என எம்ஜிஆர் மறைவிற்கு பின் நிறுத்திக் கொண்டார்.
திமுகவும் கலைஞரும் அந்த கோமாளியை அன்று வெளிப்படுத்த தவறியதன் விளைவை இன்று தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது

எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி வந்தவுடனே, கலைஞர் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கிய கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லாக்கட்சிகளும், அந்தக் கோமாளியை ஆகா ஓகோ என சித்தரிக்கத் தொடங்கிவிட்டனர்.
எம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார்.

#எம்ஜிஆர்_கவர்ச்சி_அரசியல்
என்ற பொறுக்கி அரசியல்தான் இன்றும் தமிழகத்தில் கோலோச்சுகிறது.
திராவிட இயக்கத்தின் அரசியல் சீரழிவைப் பயன்படுத்தியே அதற்கு குழி தோண்டுவது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் சோ, சுப்பிரமணியசாமி, ஆர்.வெங்கடராமன், சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும்

பார்ப்பன ஊடகங்களும் மோகன் குமாரமங்கலம், கல்யாணசுந்தரம், தா.பாண்டியன் போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இணையைத் தமிழக மக்களின் தலையில் கட்டியிருக்கின்றனர்.
தமிழின அடையாளங்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் சவக்குழி தோண்டியவர் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதைப்போலத்தான்எம்.ஜி.ஆரின் வள்ளல்தன அறிவிப்புகள் இருந்தன. விவசாயியாகவும், தொழிலாளியாகவும், மீனவ நண்பனாகவும் நடித்து விட்டு, அதே மக்களை தேவாரம்-மோகன்தாசு தலைமையிலான போலீசு மிருகங்களை ஏவி கொடூரமாக ஒடுக்கினார்

அவரை மனிதநேயர், வள்ளல் என்பது வரலாற்றையே திரித்துப் புரட்டுவதாகும். உண்மையை மறைத்து, பார்ப்பன ஊடகங்களும் பிழைப்புவாத ஊடகங்களும் சினிமாக்காரர்களும் புளுகித் திரிகின்றனர்.
சந்தேகப்பிராணி ஜெயலலிதா தனது உடன் பிறவாத சகோதரி சசிகலா, கணவர் நடராஜன் மீதும் அமைச்சர்கள் மீதும் உளவுப்படை

போலீசை விட்டு வேவு பார்ப்பதும், சொந்த புத்தி இல்லாமல் அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் கோள் மூட்டும் போது பதவிகளைப் பறித்து அவர்களைப் பந்தாடுவதும், கஞ்சா வழக்குகள் பேடுவதும் எம்.எல்.ஏ., எம்பி.க்களை தோட்டத்துக்கு இழுத்து வந்து அடிப்பதும் கூட எம்.ஜி ஆரிடம் கற்றுக்கொண்ட பாடம்தான்.

காரியத்தைச் சாதித்துக்கொள்ள பிரமுகர்களுக்கு விருந்து வைப்பதுகூட எம்ஜிஆரிடம் அடிமைகள் கற்றுக்கொண்ட கலை
ஜெயலலிதாவையே உளவு பார்த்து, மிரட்டி,வைத்தார், அவரை விஞ்சிய சந்தேக பிராணி எம்ஜிஆர் அடிமைக்கட்சி லஞ்ச ஊழல் களுக்கும், காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர்

இந்த உண்மை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. முந்தைய தலைமுறையினரோ அன்றாடப் பரபரப்புச் செய்திகளில் மூழ்கடிக்கப்பட்டு மறந்து விடுகின்றனர். இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் அறிவும் ஜனநாயக உணர்வுமற்ற ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியைப் பராமரித்து வருகிறது அடிமைகள் கட்சி

நாளை அடுத்த பாகம்
#ஒருபாசிஸ்டின்_மரணம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling