அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jan 8, 2023, 9 tweets

#பாலசுப்பிரமணிய_சுவாமி_திருக்கோவில்
#ஆண்டார்_குப்பம் திருவள்ளூர் மாவட்டம்.
சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச் சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இவரை தரிசித்து வழிபட்டால் பதவி யோகம் வாய்க்கும் என்பது பெரியோர் வாக்கு. மேலும் இக்கோவிலுக்கான

சிறப்பு என்னவென்றால், முருகன் காலை வேளையில் குழந்தையாகவும், மதியம் இளைஞராகவும், மாலை முதியவராகவும் மூன்று விதமான வடிவங்களில் பக்தர்களுக்கு இங்கு காட்சி தருகிறார். பால பருவத்தில் உலகத்தை சுற்றி வந்த முருகன் கருணையாலும், வீரத்தாலும் உலகை ஆண்டு, ஊரில் குடிகொண்டதால் ஆண்டார் குப்பம்

என பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. கைலாயம் சென்ற பிரம்மன் அங்கிருந்த முருகனை கவனிக்காமல் சென்றபோது, பிரம்மனை அழைத்த முருகன் நீங்கள் யார் என கேட்க, நான் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மன் என அதிகார தோரணையுடன் பதிலளித்தார். அவரது அகங்காரத்தை போக்க நினைத்த முருகன் படைக்கும்

தொழிலை எதன் அடிப்படையில் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்ப ஓம் என கூறி அதன் பொருள் தெரியாமல் நின்றார். அதனால் பிரம்மனை முருகன் சிறையில் அடைத்த புராணம் நாம் அறிந்ததே. இரண்டு கைகளை இடுப்பில் வைத்து அதிகாரத்துடன் பிரம்மனை கேள்வி கேட்ட வடிவிலேயே இத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு முருகப்

பெருமான் காட்சி தருகிறார். இதே போன்று முருகனை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் இங்கு நீராட இடம் உள்ளதா என ஆண்டி கோலத்தில் இருந்த சிறுவனிடம் கேட்க தன் கையில் இருந்த வேலாயுதத்தால் தரையில் குத்திய போது நீர் பெருக்கெடுத்ததாம். ஆண்டி வடிவில் இருந்த சிறுவன் முருகப் பெருமானாக காட்சி தந்ததை

அடுத்து வேலாயுதத்தில் உருவான தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கி பாலசுப்பிரமணியராக நின்ற கோலத்தில் சுவாமிக்கு இட வலமாக வள்ளி தெய்வானை என இரண்டு தேவியர்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரில், நடுகல் அமைப்பில் பிரம்மனின் சிற்பம்

திகழ்கிறது. பிரம்மதேவன் எக்காலமும் தனக்கு ஆணவம் தலை தூக்கக்கூடாது எனும் பிரார்த்தனையுடன் முருகனை தியானித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். அருணகிரிநாதர், வாரியார் ஸ்வாமிகள், பாம்பன் ஸ்வாமிகள் ஆகியோரும் இந்தத் தலத்து முருகனைப் போற்றி வழிபட்டுள்ளார்கள். இப்படி, அற்புத மகிமைகளோடு அழகன்

முருகன் அருள்பாலிக்கும் இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து மூன்று வெள்ளி அல்லது செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வந்து, நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபட, பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பரணி நட்சத்திர நாளன்று கோயிலுக்கு வந்து, அன்றிரவு அபிஷேக - ஆராதனைகளை

தரிசித்து, அங்கேயே தங்கி மறுநாள் கிருத்திகை வழிபாடுகளையும் தரிசிக்க சிக்கலான வாழ்க்கைப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்.
ஓம் சரவணபவாய

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling