விஸ்வா || VISWA Profile picture
Breaking News | Educationist | History Fanatic | Travel Enthusiast | Proud Dravidian Stock | Secular Indian

Jan 8, 2023, 14 tweets

#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
#2_புரட்டல்தலைவர்

காங்கிரசுக்காரராக அரசியலுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர்., தி.மு.கழகக்காரராகப் பிரபலமானார். ஒரு மாநிலக் கட்சியாக அ.தி.மு.க-வைத் தொடங்கினாலும் ஜனதாக் கட்சிப் பிரதமர் மெரார்ஜி தேசாய்-யின் மிரட்டலுக்குப் பயந்து, அகில இந்திய அ.தி.மு.க-வாக மாற்றிக்

கொண்டு அண்ணாயிசமே அதன் கொள்கை என்று அறிவித்தார். அண்ணாவின் கொள்கைகளும் கம்யூனிசமும், சோசலிசமும் கலந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கமும் அளித்தார் ‘புர்ரட்சித் தலைவர்’!

அண்ணாயிசம் போன்று பலப்பல அரசியல், சித்தாந்தக் கண்டுபிடிப்புகளை வகுத்தளித்தஎம்.ஜி.ஆரின் சாவு அவரது பாசிசப்

படுகொலைகளை, குரூர இன்பங்காணும் நடவடிக்கைகளை, கொடூரமான கோமாளித்தனங்களை மறைத்துவிட முடியாது. எம்.ஜி.ஆர். உடலோடு சேர்த்து மெரினாவில் புதைத்துவிட முடியாது. அங்கு தான் எம்.ஜி.ஆரின் போலீசு வெறிநாய்கள் தேவாரத்தின் தலைமையில் மீனவர்களைக் கடித்துக் குதறின; மீனவர் குப்பங்களைச் சூறையாடின.

கலைஞர் ஆட்சியில் ஊழல், அதிகார முறைகேடு என சொல்லி தூய்மையான “அண்ணா”வின் ஆட்சிக் காணப் போவதாகச் சொன்னார், எம்.ஜி.ஆர். ஆனால், அவரது ஆட்சியில் தழைத்தோங்கிய இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடு, மோசடி, தில்லுமுல்லு, எத்து வேலை, பித்தலாட்டம் அனைத்திற்கும் மூலகர்த்தாவாக எம்.ஜி.ஆரே விளங்கினார்

ஆடம்பர, வக்கிர வாழ்வும், விருந்தும், அரசு விழாக்களும் நடத்தினார். சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது “சின்ன வீடு” சினிமா பார்த்து மகிழ்ந்தார். 12 கோடிக்கு ஆடம்பரமாக உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். கலைஞர் நடத்திய அடுத்த மாநாட்டைப் புறக்கணித்து, பங்கேற்பவர்களை தடுத்தார்

#ஒருவள்ளலும்_ஓராயிரம்_ஒட்டுண்ணிகளும்
மாண்புமிகு புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், இதயக்கனி, டாக்டர் எம்.ஜி.ஆர்.” என்று தற்புகழ்ச்சியில் மூழ்கித் திளைத்தார். அரசு கட்டிடங்களின் எல்லா கல்வெட்டுகளிலும் தன் பெயரை இருக்க வெறியோடு உத்திரவிட்டார். முகத்துதிபாடும் கூட்டத்துக்கு பொன்னும்

பொருளும் கொடுத்து வள்ளலென்றும், நோபெல் பரிசுக்குரிய மேதை என்றும் புகழ வைத்தார்.
இதயம் பேசுகிறது மணியன், மக்கள் குரல் டி.ஆர்.ஆர்., சண்முகவேல், சோலை, வலம்புரிஜான் முகத்துதிபாடும் பத்திரிக்கை எடுபிடிகள்; கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், ரங்கச்சாரி, வி.பி.ராமன்

ஆகிய அரசியல் பச்சோந்திகள்
மோகன்தாஸ் தலைமையில் ஒரு உளவுப்படை, தேவாரம் தலைமையில் ஒரு அதிரடிப்படை – இடி அமீனைச் சுற்றி ஒரு அல்லக்கைக் கூட்டம் அமைந்ததைப் போல இவர்கள் எம்.ஜி.ஆரைச் சுற்றியிருந்தனர்.
தனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை எம்.ஜி.ஆர். தானமாகக் கொடுத்தார்.

அரசியல் எதிரிகளை ஒழிக்கும்பொருட்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியோர் மீது தேசத்துரோக வழக்கு, சட்டமன்ற பதவி பறிப்பு, வெடி குண்டு வழக்கு, இந்திராவுக்கு கருப்புக் கொடி காட்டிய தி.மு.க.வினர் மீது தாக்குதல், தனது அமைச்சர் மீதே கொலை வழக்கு என்று பல வக்கிரமான வழிகளை மேற்கொண்டார்

மோகன்தாஸ் – தேவாரம் படையை ஏவிப் புரட்சியாளர்களைப் படுகொலை செய்தார். பத்திரிக்கைகள் மீது குண்டர்களை ஏவித் தாக்கினார்; சபாநாயகர் பாண்டியனை ஏவி அரசியல் எதிரிகளை சிறையிலிட்டார்; நக்சல்பாரிகள் மீதான அடக்குமுறையை விசாரிக்கப்போன பத்திரிக்கையாளர்களைத் தேவாரத்தை விட்டுத் தாக்கினார்.

படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்தார். தனது அரசுக்கு விரோதமாகத் தீர்ப்புச் சொல்லும் நீதிபதிகளையும் தனது அரசை விமர்சிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும் உளவு பார்க்கச் செய்தார். நாடு கடத்தும் சட்டம் என்றொரு வக்கிரமான சட்டத்தைக் கொண்டு வந்தார்.

இணைப்பு :
கலைஞரின் எமர்ஜென்சி கால நினைவுகள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling