VISWA Profile picture
Reply for 🔂, RT for 🔁, ❤️ for ❤️

Jan 11, 2023, 11 tweets

#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
#4_அவதூறு_வழக்கு

காவல்துறை,கண்ணீர்ப் புகை,லத்தி சார்ஜ்,துப்பாக்கிச் சூடு, இவை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் மிரட்டல் ஆயுதங்களாக அறியப்படுகின்றன. இந்த ஆயுதங்களின் வரிசைப் பட்டியலில் ‘அவதூறு வழக்கு’ என்றொரு நூதன ஆயுதத்தையும் சேர்த்தவர் எம்ஜிஆர்

கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பாரம்பரியம் வழக்கத்தில் இருந்தாலும், ஜெயலலிதா ஆட்சியில் தீவிரம் பெற்றதுபோல், வேறு எந்த ஆட்சியிலும் அவதூறு வழக்குத் தாக்குதல் தீவிரமாக இருந்ததில்லை.
2011 - 2016 வரையிலான 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் 213 வழக்குகள் போடப்பட்டன.

#யார்மீது_எத்தனைவழக்குகள்

கலைஞர் & தி.மு.க மீது 85
விஜயகாந்த் & தே.மு.தி.க-வினர் மீது 48 ; 'ஆனந்த விகடன்' & பத்திரிகைகள் மீது 55 ;
பா.ம.க மீது 9 ;
காங்கிரஸ் கட்சியினர் மீது 7 ; சுப்பிரமணியன் சுவாமி மீது 5 ; ம.தி.மு.க., சி.பி.எம்., விசிக மீது 4 என மொத்தம் 213 வழக்குகள்

#ஜனநாயகமல்ல_சர்வாதிகாரம்
அவதூறு வழக்குகள், ஜெயலலிதா வாழ்க்கை குறித்து விமர்சித்ததற்காக அல்ல;
முதலமைச்சர் பொறுப்பில் இருந்த ஜெவின் செயல்பாடு, அமைச்சர்களின் செயல்பாடு, ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள், திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, மக்கள் மன்றத்தில் பேசியதற்காக.

இந்த வழக்குகளின் உண்மையான நோக்கம், ஆட்சியாளர்கள் சொல்வதுதான் திட்டம்; ஆட்சியாளர்கள் செய்வதுதான் சட்டம்; அதைக் குறை சொல்லவோ, எதிர்க்கவோ யாருக்கும் உரிமை இல்லை; அதைச் செய்ய யாரும் துணியக் கூடாது என்பதை உணர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம். ‘சர்வாதிகார ஆட்சி’ என்பதே அதன் பொருள்.

#முதல்பலி
2011-ம் ஆண்டு, 'நக்கீரன்' பத்திரிகை, ஜெயலலிதாவின் உணவுப்பழக்கம் குறித்து ஒரு செய்தி வெளியிட, 'நக்கீரன்' மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுஅதன் அலுவலகம், அ.தி.மு.க-வினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களைத் தொகுத்து, மறுநாள் ‘தி இந்து’ அந்த செய்தியை வெளியிட

அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது.
சென்னையில் பரவிவந்த காலரா நோயைத் தடுக்கத் தவறிய மாநகராட்சியைக் கண்டித்து, ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தி ''மாநிலத் தலைநகரில் காலரா பரவிவரும்போது,ஒரு முதலமைச்சரால் எப்படி நிம்மதியாகக் கொடநாட்டில் ஓய்வெடுக்க முடிகிறது?'' எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்காக, அவர் மீது ஓர் அவதூறு வழக்கு போடப்பட்டது. பேச்சை வெளியிட்ட, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 'தினகரன்’ நாளிதழ்கள் மீதும் அவதூறு வழக்கு
'ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்’ எனச் சொன்னதற்காக கலைஞர் மீதும், செய்தியாக வெளியிட்ட, 'முரசொலி'மீதும் அவதூறு வழக்கு பாய்ந்தன.

#விகடன்மீது_வரிசையாய்_பாய்ந்த_வழக்குகள்
அ.தி.மு.க அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, 'ஆனந்த விகடன்' இதழில், 'மந்திரி தந்திரி’ என்ற கட்டுரைத் தொடர் வெளியானது.
முந்தைய தி.மு.க. ஆட்சியின் போதும் 2006-2011 இதேபோன்று அன்றைய அமைச்சர்கள் குறித்து ஆனந்தவிகடன் தொடர்ந்து எழுதியது.

ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து, 'என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற தலைப்பில், 2015 நவம்பர் 25-ம் தேதியிட்ட 'ஆனந்த விகடன்' இதழில் கட்டுரை வெளியானது. ‘மந்திரி - தந்திரி’ 30 வாரங்கள் வெளியாகின.
இந்தக் கட்டுரைகள் தமிழக மக்களிடையே பரபரப்பாக வாசிக்கப்பட்டன.
ஒவ்வொரு வாரமும் ஒரு வழக்கு

என வரிசையாக 30 வழக்குகளைத் அதிமுக அரசு தாக்கல் செய்தது. விகடன் அதிமுகவை விமர்சித்துக் கட்டுரை வெளியிடும் போதெல்லாம், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான 'நமது எம்.ஜி.ஆர்’, 'ஆனந்த விகடனை' மிகக் கடுமையாகவும் கொச்சையாகவும் விமர்சித்துக் கட்டுரை வெளியிடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டது.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling