#ஸ்ரீவைத்யவீரராகவபெருமாள் #திருஎவ்வுள்
புருபுண்ணியர் என்ற முனிவர் புத்திர பாக்கியத்திற்காக மகாவிஷ்ணுவை வேண்டி சாலியக்ஞம் (யாகம்) நடத்தினார். இதன் பலனாக பிறந்த ஆண் குழந்தைக்கு யாகத்தின் பெயரால், #சாலிகோத்ரர் என்று பெயர் சூட்டினார். சாலிகோத்ரரும் பெருமாள் பக்தராக விளங்கினார்.
இங்குள்ள தீர்த்தக்கரையில் பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். பெருமாளுக்கு தினைமாவு படைத்து யாராவது ஒருவருக்கு கொடுத்த பின்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் பூஜையின் போது வந்த முதியவர் பசிப்பதாக சொல்லி உணவு கேட்டார். மகரிஷி அவருக்கு தினை மாவு கொடுத்தார்.
அதைச் சாப்பிட்டவர் தனக்கு மேலும் பசிப்பதாகச் சொல்லவே தான் சாப்பிட வைத்திருந்த மாவையும் கொடுத்தார். தனக்கு களைப்பாக இருப்பதாகச் சொன்ன அந்த முதியவர் உறங்குவதாக கூறினார். சயனத்தில் மகாவிஷ்ணுவாக சுயரூபம் காட்டியருளினார். பெருமாள் காட்சி தந்த நாள் தை அமாவாசை. பின் இவ்விடத்தில் கோவில்
எழுப்பப்பட்டது. மகரிஷிகள் சிலர் இங்கு ஒரு யாகம் நடத்தினர். அப்போது இரண்டு அசுரர்கள் யாகத்தை நடத்த விடாமல் தொந்தரவு செய்தனர். ரிஷிகள் மகாவிஷ்ணுவை வேண்டவே அவர் அசுரர்களை வென்று யாகம் தொடர்ந்து நடக்க அருளினார். இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் விஜயகோடி விமானம் அமைக்கப்பட்டது. இந்த
விமானத்தை தரிசனம் செய்தால் அனைத்துச் செயல்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். இங்குள்ள தீர்த்தத்தை நினைத்தாலே, பாவங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம். இதனால் #ஹிருதாபநாசிணி என்று இத்தீர்த்தத்திற்கு பெயர் உள்ளது.
மனதில் எண்ணும் பாவங்களைக் கூட இந்த தீர்த்தத்தை நினைத்தால் அது மன்னிக்கப் பட்டு விடும். ஒன்பது கரைகளுடன் அமைந்த மிகப்பெரிய தீர்த்தம் இது. இத்தலத்திற்கு வந்த திருமங்கையாழ்வார் சுவாமியை மங்களாசாசனம் செய்த போது, ராவணனை சம்ஹாரம் செய்த ராமன், இங்கு பள்ளி கொண்டிருப்பதாக பாசுரம் பாடினார்
இதனால் சுவாமிக்கு, #வீரராகவர் (அசுரர்களை வென்றதால் வீரர், ராகவர் என்றால் ராமன்) என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். #எவ்வுள்கிடந்தான் என்றும் இவருக்குப் பெயருண்டு. பெருமாள் முதியவராக வந்தபோது மகரிஷியிடம், "தான் எங்கே படுப்பது?”என்ற அர்த்தத்தில் "எவ்வுள்?' என்று ஒரே வார்த்தையில்
கேட்டார். இதனால் பெருமாளுக்கு இந்த திருநாமம் அமைந்து விட்டது. இவ்வூரும் #திருஎவ்வுளூர் எனப் பெயர் பெற்றது. இதுவே மருவி திருவள்ளூர் ஆயிற்று.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.