Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Jan 29, 2023, 8 tweets

#இந்தியபாசிசத்தின்_எழுச்சி
பாசிசம் என்ற சொல் பொதுவாக அதிகாரத்தை கைப்பற்றிய ஒரு குழு அதனை தக்க வைக்க பிற குழுக்களை அடக்கி ஒடுக்கி அதிகாரத்தை தன்னிடமே என்றென்றும் வைத்துக்கொள்ள முயல்வதை குறிக்கிறது. இந்தியாவில் நிகழ்வதை குறிக்க வேறு சொல் இல்லாததால் நாமும் பாசிசம் என்றே கூறுவோம்

பாசிசம் என்பது தனி நபர் அல்ல. அது ஒரு அமைப்பு அதன் முகமூடிகள் காலாவதி ஆனவுடன் மாற்றப்படும். சில பல வார்த்தை மாறுதலுக்கு பின் புதிய மொந்தையில் பழைய கள்ளை வழங்கி மாற்றம் நிகழ்ந்து விட்டது இனி எல்லாம் சுகமே என்ற மயக்கத்திலேயே மக்களை நம்பச் செய்து என்றும் அடிமையாக வைத்திருப்பது

சமூக பொருளாதார இன ரீதியாக இச்சொல் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு புதிய பெயரில் அவதாரம் எடுக்கிறது. ஜெர்மனியில் நாசிசம் இத்தாலியில் பாசிசம், ஜிங்கோஇசம், ஸ்டாலினிசம், மேற்கு நாடுகளின் கேப்பிட்டலிசம், நேற்று உருவான #தாலிபானிசம்.
இந்தியாவுக்கு என்று ஒரு தனித்த சொல் என்றால் அது #நூலிபானிசம்

நூலிபாணிசம் தன் பிற சகோதர சொற்களை விட அபாயகரமானது வெறும் ஆயுதத்தை மட்டும் நம்புவது அல்ல. அதன் வரலாற்றில் நேரடி போர் நிகழ்வதே இல்லை. உடல் பலமின்மை அல்ல என்பது அதன் காரணம்
அதற்கு பலியாகும் மக்களின் மூளை பலமின்மையே அதன் வலிமை.
இதற்கு அது சூட்டிக்கொண்ட பெயர் சாணக்கியத்தனம்

இப்படி ஒன்று இருக்கிறது என்று தன்னால் வெற்றி கொள்ளப்பட்டவர்கள் 3000 வருடங்களாக உணர விடாமல் வைத்திருப்பதே அதன் பலம். உலக வரலாற்றில் தனி நபர்கள் பல சாம்ராஜ்யங்களை உருவாக்கினார்கள். உருவான வேகத்திலேயே அவை வரலாற்றில் இருந்து மறைந்தும் போயின. ஆனால் நூலிபானிசம் தோற்றதே இல்லை

இந்திய வரலாற்றில் முன்னும் பின்னும் பயணித்துப் பார்த்தால் பல
நிகழ்வுகள் தொடர்பற்றதாக இருக்கலாம். ஊன்றிக் கவனித்தால் மட்டுமே அதில் உள்ளீடாக இந்திய பாசிசம் கை ஓங்கி இருப்பது தெரியவரும்.
புதிய முகமூடிகள் நிலை நிறுத்த சில பழைய முகமூடிகள் பட்டி டிங்கரிங் செய்து சுற்றில் விடப்படும்

தாழம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொண்டே வந்த இந்திய பாசிசம் அல்லது நூலிபானிசத்தின் தற்போதைய முகமூடி நரேந்திர தாமோதர தாஸ் மோடி.
புதிய முகமூடியை நிலை நிறுத்த உதவிய சுற்றில் விடப்பட்ட பழைய முகமூடி ஸ்ரீ ராமச்சந்திரன்.
ராமன்கள் இல்லாமல் மோடிகள் இல்லை.
இந்திய பாசிசமும் இல்லை

இது இந்திய பாசிசம் பற்றியது மட்டுமே...

இதனை ஐரோப்பா மற்றும் கம்யூனிச நாடுகளுடன் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்..

அதைவிட குறிப்பாக பாசிசத்தின் வரையறையை விக்கிபீடியாவில் இருந்து தூக்கிக் கொண்டு வர வேண்டாம்

வரும் நாட்களில் இந்திய பாசிசத்தின் வெவ்வேறு அவதாரங்களை இங்கே காணலாம்

🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling