#திரிம்பகேஸ்வரர்_கோவில் #நாசிக்
சுயம்பு லிங்கம் உள்ள இத்தலத்தின் கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறிக் கொண்டே இருக்கும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கத் தலங்களுள் இத்தலம் ஒன்றாகும். சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் மூன்று சிறிய லிங்கங்கள்
ஒரே ஆவுடையாரில் உள்ளன. இங்கே தான் நீர் எப்போதும் ஊறிக்கொண்டே இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 2500 அடி உயரத்தில் மலை மீது, #பிரம்மகிரி என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடனும், அதில் நான்கு
வாயில்களைக் கொண்டும் உள்ளது. இக்கோவில் பதினெட்டாம் நூற்றாண்டில் மூன்றாம் பேஷ்வாவான நானாசாகிப் காலத்தில் கட்டப்பட்டது. கோவிலின் கருவறையின்மேலே வழைப்பூ வடிவில் கூம்பான விமானம் அமைந்துள்ளது. அதன் உச்சியில் தங்கக் கலசமும், சிவனின் சூலமும் அமைந்துள்ளது. கோவிலின் முதன்மைத் தெய்வமான
திரிம்பகேஸ்வரரின் லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில் உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக கருதுகின்றனர். நாள்தோறும் இந்த ஆவுடையர் குழிமேல் ஒரு
முகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்று முகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு நாட்களில் ஐந்து முக தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. சிவ பெருமானின் கிரீடம் ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 4-5 மணி முதல் காட்டப்படுகிறது. இக்கோவில் திருக்குளம் அமிர்தவர்ஷினி.
பிரம்மகிரியில் இருந்து தான் #கோதாவரி நதி உற்பத்தியாகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த #கௌதம_முனிவர் தன் மனைவியுடன் இருந்த கடுமையான தவத்தின் பயனாக இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த #கங்கையை அவிழ்த்து விட்டார் என்றும் அதுவே இங்கு எப்போதும் நீரூற்றாக
ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க #சிவன், #பிரம்மா, #விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் அதனாலேயே இங்கு மூன்று லிங்கங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அம்மலையில் #கௌதமர் வாழ்ந்த குகையும் அவரால் உண்டாக்கப் பட்ட புனித
தீர்த்தமும் உள்ளன. கௌதமர் வழிபட்ட 1008-லிங்கங்களும் அக்குகையில் இருக்கின்றன. இங்கு சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும், அறிவியல் ரீதியாக, இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை புலப்படவில்லை. அறிவியலால் அறிய முடியாது பல ரகசியங்கள் நம்
நாட்டில் பல உண்டு என்பதற்கான ஒரு சிறந்த சான்று இந்த நீரூற்று அபிஷேகம் என்றே கூறலாம்.
அமைவிடம்: #திரியம்பகேஸ்வரர் திருக்கோவில் மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.