Er.NithanKrish B.E., Profile picture
One of the Casteless Collective.

Feb 1, 2023, 10 tweets

"ஆண்டு வருமானம் 7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை" #பட்ஜெட்2023

கேக்குறதுக்கு இனிப்பா இருக்குல்ல?

இதுக்கு பின்னால ஏகப்பட்ட LIC ஏஜென்ட்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிருக்கு. அதேநேரம் Upper Middle Class மக்கள், Lower Middle Class க்கு வர்ற நிலையும் உருவாகிருக்கு (1/n)

என்னடா எதயோ எங்கயோ போயி முடிச்சு போடுற?-னு கேக்குறீங்களா??

இங்க பலர் LIC ல பணம் போடக் காரணமே, LIC ல முதலீடு பண்ற பணத்துக்கு வரி கிடையாது, LIC கட்டுனது போக மீத பணத்துக்கு மட்டும்தான் வரி. அந்த மீத பணமும், குறைந்தபட்ச வருமானத்துக்கு கீழ வந்துச்சுன்னா No Tax என்கிற காரணம்தான் (2/n)

**LIC க்கு மட்டும் இல்ல, இன்னும் ஒரு சில விஷயங்களுக்கும் வரிச்சலுகை இருக்கு! நான் LIC-ய மட்டும் எடுத்துக்குறேன்.

வரிச்சலுகை உள்ள காரணத்தால் விரும்பியோ / நிர்பந்தத்தின் அடிப்படையிலோ பாலிசி போட்டவங்கலாம் இனி பாலிசி போட மாட்டாங்க! அதாவது, சேமிப்பு குறைஞ்சு செலவு அதிகரிக்கும். (3/n)

இதன் பாதிப்பை நேரடியா அனுபவிக்கப் போறது LIC எஜென்ட்கள்தான். பாலிசி போட்டு, வர்ற கமிஷன் காசுலதான் ஏஜென்ட்களின் குடும்பமே பசியாறிட்டு இருக்கு.

இப்போ எவனும் பாலிசி போட முன்வரலங்குறப்ப, இவங்களுக்கு எப்டி வருமானம் வரும்?

இது நேரடி பாதிப்பு. இப்போ மறைமுக பாதிப்பு பாப்போம்.. (4/n)

நேரடியாகவோ மறைமுகமாகவோ, LIC என்பது ஒருவகை சேமிப்புதான்.

அந்த சேமிப்பு குறையுறது ஒரு பக்கம்!

மிடில் கிளாஸ் வாழ்க்கைல ஒரு சிக்கல் என்னன்னா.. அவங்க தன்னை பெரிய ஆளா காட்டிக்க, தாராளமா செலவு பண்ணக்கூடியவங்க.

பிரச்சனையே இங்கதான்... (5/n)

சம்பள காச கரன்சியா செலவு பண்றத விட்டுட்டு டிஜிட்டல்ல செலவு பண்ண ஆரம்பிச்சதுல இருந்து, "வர்ற சம்பளம் எப்டி போகுது? "ன்னே புரியாம பெரும் குழப்பத்துல இருக்குற கூட்டம்தான் இந்த மிடில் கிளாஸ் கூட்டம்.

சேமிப்பு இல்லங்குறது ஒரு பக்கம், அதிக செலவு செய்வோம்ங்குறது ஒரு பக்கம்... (6/n)

இது மட்டும்தான் மறைமுக பாதிப்பா?-னு கேட்டா, அங்கதான் வர்றாரு நேரு கஷ்டப்பட்டு உருவாக்குன LIC நிறுவனம்..

ஆண்டுக்கு 7 லட்சம்ன்னா, மாசம் 58,333

பெரும்பாலான அரசு ஊழியர்கள், இந்திய IT பணியாளர்கள், மத்த இன்டஸ்ட்ரி அதிகார மட்டத்தினர் எல்லாரும் இந்த கேட்டகிரிக்குள்ளதான் வருவாங்க. (7/n)

இவ்ளோ நாளா Tax கட்டுன பெரும் பகுதி மக்கள் வரி கட்டாதது அரசுக்கு இழப்பு. அத ஒருபக்கம் வெச்சாலும்,

அதிகமா LIC போட்டவங்களும் சாட்சாத் இவங்களேதான். இது நேரடியாவே LIC க்கு பாதிப்புதான்.

முதலீடுகள் இல்லன்னா, LIC எனும் ஆலமரம் தானாவே சரியும்.. இதுக்கு மேல சொல்றதுக்கு எதும் இல்ல. (8/n)

LIC எஜென்ட்களுக்கு சின்ன அட்வைஸ் என்னன்னா, இவ்ளோ நாளா பாலிசி பிளான சொல்லி பாலிசி போட வெச்சீங்க! இனி பயமுறுத்தி போட வைக்க வேண்டியிருக்கும்.

அதனால நல்லா பேச கத்துக்கோங்க!

~எலக்சன்ல இம்புட்டுக்கான்டி ஓட்டு வாங்குறதுக்கு, எவ்ளோ பெரிய வேலைய பாத்து வுட்ருக்கானுக இந்த சங்கிக 🤮 (8/n)

மக்களே.. சேமிப்புதான் உங்களை பின்னாளில் காப்பாத்தும்!

அதனால, எக்காரணம் கொண்டும் சேமிக்கத் தவறிடாதிங்க...❣️ (n/n)

**பி.கு: என்னோட அறிவுக்கு எட்டிய வரை சொல்லிருக்கேன். முரண்பாடுகள் இருந்தால் தாராளமா சொல்லுங்க! நானும் தெரிஞ்சுக்கிட்டு அப்டேட் ஆகிக்குவேன்..😇

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling