#மதுரபாஷினி #யாழினும்_மென்மொழியம்மை உடனுறை #பதஞ்சலி_மனோகர்_சுவாமி திருக்கோவில்
திருவிளமல்(விளமல்) திருவாரூர் மாவட்டம்.
பதஞ்சலி முனிவர் ஈசனின் நடனக்கோலம் காணத் தவமிருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த ஈசன் தில்லையில் தனது திருநடனத்தைக் காண்பித்தார். இந்த நடனத்தை வியாக்ரபாதரும் கண்ட
மகிழ்ந்தார். அத்துடன் இரு முனிவர்களும் சிவனிடம், “ஐயனே! உனது நடனம் கண்டோம். இந்த ஆனந்த நடனத்துடன் தங்களின் அஜபா நடனத்தையும், உருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண விரும்புகிறோம். மேலும் உன் பக்தர்களுக்கும் உனது திருவடி தரிசனத்தை காண்பித்து அருளவேண்டும்” என வேண்டினர். அதற்கு ஈசன்,
“நீங்கள் இருவரும் ஸ்ரீபுரம் என்று அழைக்கப் படும் திருவாரூர் செல்லுங்கள். அங்கே எனது நடனத்தையும், திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள்” என்றார். அதன்படி இருவரும் திருவாரூர் வந்தனர். அங்கே எங்கு பார்த்தாலும் சிவலிங்கமே காட்சியளித்தது. எனவே பதஞ்சலி தன் உடலைப் பாம்பாகவும், வியாக்ரபாதர்
தன் கால்களைப் புலிக்கால்களாகவும் மாற்றி, திருவாரூர் கமலாம்பாளை வணங்கினர். அவள் கூறியபடி #விளமல் என்ற இடத்தில் விமலாக்க வைரம் என்ற தேவலோக மண்ணில் பதஞ்சலி முனிவர் லிங்கம் பிடித்து வழிபட்டார். இந்த வழிபாட்டின் பலனாக சிவன் தோன்றி, அஜபா நடனம் ஆடி, தன் பாதத்தை காட்டி அருளினார். இந்த
சிவன் #பதஞ்சலி_மனோகரர் என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் நடனம் ஆடியபோது காட்டிய திருவடி உருத்ரபாதம் எனப்பட்டது. அவர் நடனமாடிய இடம் விளமல் எனப்பட்டது. இதற்கு திருவடி எனப்பொருள். இந்த தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர்.
சிவபெருமான் காட்டிய உருத்ரபாதத்திற்கு இன்றளவும், தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் #திருவடிக்ஷேத்திரம், #திருவிளமல், #சிவபாததலம் எனப் போற்றப்படுகிறது.
திருஞானசம்பந்தர் பதிகம் அருளியுள்ளார்.
திருச்சிற்றம்பலம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.