அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Feb 7, 2023, 18 tweets

#காஞ்சிகாமாட்சி காமாட்சி அம்பாள் இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள். தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் நாபி

விழுந்த சக்தி பீடமாகும். காமாட்சி எனும் திருநாமத்தில் கா என்பது சரஸ்வதியையும், மா என்பது லட்சுமியையும் குறிக்கும். அட்சி என்பது கண்ணாக உடையவள் என்று பொருள்படும். அதாவது கலைமகளையும், திருமகளையும் தன் இரு கண்களாகக் கொண்டவள் காமாட்சி என்பதையே அவளது திருப்பெயர் உணர்த்துகிறது.

காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், 'உக்ர ஸ்வரூபினி' என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால், பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான

காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப் படுத்தினார். இந்த கோயிலின் முதல் பிராகாரத்தில் ஆதிசங்கரர் யோகாசனத்தில், தியான நிலையில் அமர்ந்துள்ள காட்சியைக் காணலாம். காமாட்சியம்மன் முன் உள்ள ஸ்ரீசக்ரத்தில் ‘வசின்யாதி வாக்தேவதைகள்’ எட்டு பேரும் அருள்கின்றனர். இந்த சக்ரத்திற்கே அர்ச்சனை, வழிபாடு,

பூஜை எல்லாம் நடக்கின்றன. அம்பிகை ஸ்ரீசக்ரத்தில் பிந்து மண்டல வாசினியாக முக்கோணத்துள் அருள்பவள் என்று கூறப்பட்டுள்ளதால், கருவறை முக்கோண வடிவில் அமைந்துள்ளது. ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட பெருமையுடையது இந்த ஸ்ரீசக்ரம். காமாட்சியின் கோஷ்டத்தில் வாராஹி, அரூபலட்சுமி, சௌந்தர்ய லட்சுமி,

#கள்ளவாரணப்_பெருமாள் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இதில் கள்ளவாரணர் 108 திவ்ய தேச பெருமாள்களில் ஒருவர். வாராஹியின் எதிரே உள்ள சந்தான ஸ்தம்பத்தை வலம் வந்து வணங்குவோர்க்கு மழலை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்த

ஆலயம் காமாட்சி அம்மன் கோயில் ஆகும். கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றி பங்காரு காமாட்சி, ஆதிசங்கரர் மற்றும் மகா சரஸ்வதி ஆகியோரின் சிறிய ஆலயங்கள் உள்ளன. வெளிப்

பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். மேலும் காஞ்சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் கோயிலில் தலவிருட்சம் மாமரம் ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது. காமாட்சி தேவி காரடையான் நோன்பு மேற்கொண்டு கம்பா நதி வெள்ளப் பெருக்கிலிருந்து ஈசனைக் காப்பாற்றியதால், இந்த

தலத்தில் காரடையான் நோன்பு விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. விஸ்வப்ராஹ்மணர் குலத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் பொற்கொல்லர்களின் பாரம்பரியத்தை காக்கின்ற குலதெய்வமாக இருக்கிறது . இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை. அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில்

புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்தும். மேற்கு, வடக்கு கோபுரங்களின் இடையே உள்ள கணு மண்டபத்தில் காமாட்சிதேவி பொங்கலுக்கு

முந்தைய பத்து நாட்கள் எழுந்தருள்வாள். பொங்கலன்று அந்த மண்டபத்தை காய்கனிகளால் அலங்கரித்து பாத வடிவில் காணப்படும் பங்காரு காமாட்சிக்கு முழுத் தேங்காய் நிவேதனம் நடக்கும். காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் உள்ள அன்னபூரணியை தர்மத்வாரம், பிட்சாத்வாரம் போன்ற துவாரங்கள் மூலமும்

தரிசிக்கலாம். பிட்சாத்வாரத்தின் மூலம் அன்னபூரணியை வணங்கி ‘பவதி பிட்சாந்தேஹி’ என கையேந்தி பிச்சை கேட்டு வழிபட்டால் நம் வாழ்வில் உணவுப் பஞ்சம் வராது என்கிறார்கள். இந்த தலத்தில் மூலஸ்தான காமாட்சி, தபஸ் காமாட்சி, பிலாகாஸ காமாட்சி, உற்சவ காமாட்சி, பங்காரு காமாட்சி ஆகிய 5 காமாட்சிகள்

அருள்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள எல்லாக் கோயில்களும் காமாட்சியம்மன் கோயிலை நோக்கியே அமைந்துள்ளன. விழாக்களின் போது அந்த ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் எல்லோரும் காமாட்சியம்மன் ஆலயத்தை வலம் வந்து செல்வது வழக்கம். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு நவாவரண பூஜை செய்யப்படுகிறது. 51

சக்தி பீடங்களில் தேவியின் எலும்புகள் இந்தக் காஞ்சியிலே விழுந்ததாகக் கருதப்படுகிறது. ஒட்டியாண பீடம் என இந்த பீடம் சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர் திருமணம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும். ஈசன் அளித்த இரண்டு நாழி அளவு

நெல்லினைக் கொண்டே இவ்வுலகில் 32 அறங்களையும் வளர்த்ததால் அறம் வளர்த்த நாயகி என்ற சிறப்புப் பெயரும் இந்த அன்னைக்கு உண்டு. இத்தேவி அமர்ந்துள்ள இடம் காம கோட்டம் என அழைக்கப் படுகிறது. காம கோட்டம் என்றால் விரும்பியவற்றையெல்லாம் தருவது என்று பொருள். பிறவியிலேயே பேச்சிழந்த மூகன்,

காமாட்சியின் அருளால் பேசும் சக்தியைப் பெற்று #மூகபஞ்சசதீ எனும் 500 அதியற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆதி சங்கரர் சௌந்தர்யா லஹரியை இங்கு தான் இயற்றினார். ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவங்கள் மிகச் சிறப்பாக நடந்தேறும். இவற்றில் தேர்த்திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும்

மிகச் சிறப்புடையது. நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன.

Temple Address
Sri Kanchi Kamakshi Amman Temple,
A, 24, Sanathi St, PeriyaKaanchipuram,
Tamil Nadu 631502.Phone Number: +91-4427225242, +91-442627 2053, +91-4426495883.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling