கீழடி அகழாய்வு தொடர்பான இந்தியத் தொல்லியல் துறையின் அறிக்கை என்ன சொல்கிறது? #Exclusive
----------------------------
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்துள்ளார். (1/7)
கீழடி குறித்து இந்த ஆய்வறிக்கை சொல்வதென்ன? பிபிசி வழங்கும் பிரத்யேகத் தகவல்கள்.
கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கே மூன்று பண்பாட்டு காலகட்டம் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. (2/7)
இதில் முதல் காலகட்டம் கி.மு. 8ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 5ஆம் நூற்றாண்டுவரை நிலவியிருக்கலாம். இந்த காலகட்டத்தில்தான் மக்கள் இங்கே வாழ துவங்கியிருக்க வேண்டும். 2வது காலகட்டம் கி.மு. 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். (3/7)
இந்தக் காலகட்டத்தில்தான் கீழடி, ஒரு முதிர்ந்த (mature period) வாழிடப் பகுதியாக இருந்த காலகட்டம். இந்த காலகட்டத்தில்தான், கீழடியில் பெரும் வளர்ச்சி இருந்திருக்கிறது. பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. (4/7)
இந்த காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, கீழடி மதுரைக்கு அருகில் இருப்பதும், வரலாற்றுக் கால துறைமுகமான ஆலங்குளம் செல்லும் வழியில் இருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. (5/7)
கீழடியின் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது.
கீழடியில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தாலும், அவை இலங்கையோடு தொடர்புடையவையே தவிர, வட இந்தியாவுடன் தொடர்புடையவை அல்ல. (6/7)
விரிவான தகவல்களைக் கொண்ட கட்டுரைக்கான இணைப்பு bbc.com/tamil/india-64…
(7/7)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.