Muralitharan K Profile picture
A journalist working with BBC writes on Politics, Social Justice, Archaeology, Literature and Movies.
Kanagarajan Profile picture 1 subscribed
Mar 30 8 tweets 3 min read
நெட்ஃப்ளிக்ஸில் சமீபத்தில் வெளிவந்த பழங்கால Docudramaகளில், அலெக்ஸாண்டர்: தி மேக்கிங் ஆஃப் எ காட், குயின் க்ளியோபாட்ரா ஆகியவை மிக முக்கியமானவை. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் மற்றொரு docudrama தொடர்தான் Testament: The Story of Moses.
(1/8) Image பாரோக்கள் ஆளும் எகிப்தில் துவங்குகிறது கதை. மோசஸ் பிறந்தது, பாரோக்களின் அரண்மனையில் வளர்ந்தது, பிறகு தனது எகிப்தியர் ஒருவனைக் கொலைசெய்ததால் தேடப்பட்டு, எகிப்திலிருந்து வெளியேறி மீடியான் என்ற இடத்தில் வசிப்பது, அங்கே சினாய் மலையில் கடவுளைச் சந்திப்பது,...
(2/8) Image
Jan 30 10 tweets 4 min read
சிந்துச் சமவெளி குறியீடுகள் சொல்வது என்ன? விடுபடும் புதிர்
-------------------------------
சிந்துச் சமவெளிப் பகுதியில் கிடைத்த குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பது நூறாண்டுகளுக்கும் மேலாகவே புதிராகவே இருந்த நிலையில், ஆய்வாளர் ஒருவர் அந்த குறியீடுகளைப் படித்துள்ளார்.
(1/10) Image சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளைப் பொறுத்தவரை அவை ஒரு மொழியின் எழுத்துகளா அல்லது மொழியல்லாத குறியீடுகளா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மென்பொருள் பொறியாளரான பஹதா அன்சுமாலி முகோபாத்யாய், இவை வணிகக் குறியீடுகள் என்று கண்டறிந்திருப்பதாகக் கூறுகிறார்.
(2/10) Image
Nov 14, 2023 25 tweets 8 min read
ஜவஹர்லால் நேரு: இந்திய வானின் துருவ நட்சத்திரம்
---------
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 30 லட்சம் பேரைக் காவுகொண்ட பஞ்சத்தின் நினைவுகூட ஆறவில்லை.
1950. முதல் ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்பட்டது. விவசாயத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ய முடிவெடுத்தார் முதல் பிரதமர் நேரு.
(1/25) Image மூன்று மிகப் பெரிய அணைகளைக் கட்ட திட்டமிடப்பட்டது: 1. பக்ரா நங்கல், ஹிராகுட், நாகார்ஜுன சாகர். இப்போது பக்ரா நங்கல் அணை ஒரு கோடி ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது. 1,500 மெகா வாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
1949ல் அமெரிக்காவில் உள்ள...
(2/25) Image
Sep 26, 2023 9 tweets 3 min read
ஊடகங்கள் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும், யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் சென்று சாதாரண பொதுமக்களிடம், அந்த பட்ஜெட் பற்றிக் கேட்டால் அறியாமையே பதிலாகக் கிடைக்கும். ஆனால், 1991ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வேறு மாதிரி இருந்தது.
(1/9) Image இந்தியாவின் நிதியமைச்சராக பதவியேற்றிருந்த Dr. மன்மோகன் சிங் தனது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்திருந்ததற்கு அடுத்த நாள். மதுரை போன்ற 2ஆம் நிலை நகரங்களில் இருந்த தேநீர் கடைகளில்கூட இந்த பட்ஜெட்டைப் பற்றி, செய்தித் தாள்களில் வந்த தகவல்களை வைத்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
(2/9) Image
Aug 15, 2023 7 tweets 3 min read
வைகை என்ற கனவு ரயில்
------------------------
47 வருடங்களாக ஒரு ரயில், iconic ரயிலாக இருக்க முடியுமா? முடியும் என காட்டியிருக்கிறது வைகை எக்ஸ்பிரஸ். 1977ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயிலுக்கு இன்றோடு வயது 47.

(1/7) Image மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் பகல் நேர ரயில் வேண்டுமென்ற நீண்ட காலக் கோரிக்கையின் அடிப்படையில் இந்த ரயில் விடப்பட்டது.
1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை ஆறு மணிக்கு மீட்டர் கேஜ் பாதையில் மதுரையிலிருந்து கொடியசைத்துத் துவக்கிவைக்கப்பட்டது வைகை.
(2/7) Image
Jul 9, 2023 11 tweets 4 min read
பானகல் அரசர் ராமராய நிங்கர்: சீர்திருத்தவாதியான ஜமீன்தார்
---------------------------
சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமரும் பெரும் சீர்திருத்தவாதியுமான பானகல் அரசர் பி. ராமராய நிங்கரின் பிறந்த நாள் இன்று. பெரும் செல்வந்தர் குடும்பத்தில் 1866ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி... (1/11) Image காளகஸ்தியில் பிறந்த ராமராய நிங்கரின் குடும்பத்தினர் காளகஸ்தி அரச குடும்பத்தோடு மண உறவு பூண்டவர்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் மாண்டெகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்த பிறகு, மாகாண சட்டமன்றங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. (2/11)
Image
Image
Jun 11, 2023 16 tweets 2 min read
மீண்டும் வடகலை - தென்கலை மோதல்: ஆரம்பம் என்ன?
------
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஏற்கனவே வடகலை - தென்கலை ஐய்யங்கார்களிடையே மோதல் நிலவிவருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மோதல் ஏற்பட்டதைப் போல இரு நாட்களுக்கு முன்பாக இந்த ஆண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.
(1/16) Image இந்த ஆண்டு கோவிலில் நடந்த பிரம்மோத்சவத்தின் 9ஆம் நாளில் பிரசாதம் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு இருபிரிவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் இந்த வடகலை - தென்கலை பிரச்சனையின் ஆரம்பப் புள்ளி என்ன?
(2/16)
Jun 10, 2023 14 tweets 5 min read
தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் Scoop ஒரு சிறப்பான வெப் சீரிஸ். 2011ல் மும்பையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது இந்தத் தொடர்.

அந்தச் சம்பவத்தின் பின்னணி, ஒரு பத்திரிகையாளரின் படுகொலை. கொலை செய்தது தாதாவான சோட்டா ராஜன்.
(1/14) Image மும்பையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த Mid - Day இதழில் குற்றம், புலனாய்வு பிரிவு இதழியலாளராக இருந்த ஜ்யோதேந்திர டே என்ற ஜே டே 2011 ஜூன் 11ஆம் தேதி மும்பையின் ஹிராநந்தனி கார்டன்ஸ் பகுதியில் பைக்கில் வந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பைக்கில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
(2/14) Image
Jun 9, 2023 8 tweets 3 min read
ஒரு வழக்கமான whodoneit படத்தைப் போலத்தான் துவங்குகிறது போர் தொழில். திருச்சியில் ஒரு இளம் பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடக்கிறாள். அடுத்த சில நாட்களில் அதேபோல கொலைசெய்யப்பட்ட மற்றொரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது. (1/7) Image இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக லோகநாதன் (சரத்குமார்) என்ற முசுடு அதிகாரியும் அவருக்கு உதவியாக அப்போதுதான் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்த பிரகாஷும் (அசோக் செல்வன்) நியமிக்கப்படுகிறார்கள்.
படத்தின் இடைவேளையின்போது கொலைகாரனைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். (2/7) Image
Jun 1, 2023 7 tweets 3 min read
பாச்சுவும் அத்புத விளக்கும்
------------------------

ரொம்ப நாட்களுக்குப் பிறகு மலையாளத்திலிருந்து ஒரு முழு நீள feel - good திரைப்படம்.
பிரசாந்த் என்ற பாச்சு, மும்பையில் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலைக்கு பிரான்சைசி எடுத்து நடத்திவருகிறான். 34 வயசாகியும் கல்யாணம் ஆகவில்லை. (1/7) Image ஒரு முறை சொந்த ஊருக்கு வரும்போது, ஒரு பணக்கார பெண்மணியையும் மும்பைக்கு ரயிலில் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த ரயில் கோவாவில் நிற்கும்போது அந்த பணக்காரப் பெண்மணி இறங்கி ஓடிவிடுகிறார். அவரைத் தேடி பாச்சுவும் இறங்குகிறான். (2/7) Image
May 31, 2023 6 tweets 2 min read
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட தாது வருஷப் பஞ்சத்தின்போது மதுரையைச் சேர்ந்த குஞ்சரத்தம்மாள் என்ற நடனக் கலைஞர் தனது சொத்துகளை விற்று மதுரை நகர மக்களுக்கு உணவளித்ததாக ஒரு கதை உலவுகிறது.
அந்தப் பெயரை கூகுளில் தேடினால், நூற்றுக்கும் மேற்பட்ட முடிவுகள் தென்படுகின்றன. (1/6) Image பல பத்திரிகைகளில் குஞ்சரத்தம்மாள் குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. 25க்கும் மேற்பட்ட You Tube வீடியோக்கள் கிடைக்கின்றன. குஞ்சரத்தம்மாளின் ஓவியங்கள்கூட தென்படுகின்றன. குஞ்சரத்தம்மாள் குறித்து ஒரு புத்தகம்கூட இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. (2/6) Image
May 30, 2023 5 tweets 2 min read
விசித்ரம் (Vichitram) என்று ஒரு மலையாளப் படம். அமெசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது. ரொம்ப நேரத்திற்கு எந்த மாதிரிப் படம் என்பதே தெரியாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். 35வது நிமிடத்தில்தான் கதைக்குள்ளேயே லேசாக நுழைகிறது படம். (1/5) Image ரொம்ப நேரம் கழித்துத்தான் புரிகிறது இது ஒரு Horror திரைப்படம் என. ஐந்து உருப்படாத மகன்கள். அவர்களை சம்பாதித்து காப்பாற்றிவரும் தாய். வீட்டு வாடகையே கொடுக்க கஷ்டப்படும் நிலையில், ஒரு கட்டத்தில் தங்கள் பூர்வீக பங்களாவுக்கே குடிபோகும் வாய்ப்பு ஏற்படுகிறது. (2/5) Image
May 24, 2023 8 tweets 3 min read
பரபரப்பாக பேசப்பட்ட ஒரு சம்பவத்தை உடனடியாக திரைப்படமாக்க ஒரு துணிச்சல் வேண்டும். Sirf Ek Bandaa Kaafi Hai (ஒரே ஒருவன் போதும்) படத்தை உருவாக்கியவர்களுக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறது.
வட இந்தியாவில் ஆசாராம் பாபு என்று ஒரு பிரபல சாமியார் இருந்தார். (1/8) Image 2013ஆம் ஆண்டில், இந்த ஆசாராம் பாபு ஜோத்பூருக்கு அருகில் உள்ள மனாய் கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று புகாரளிக்கப்பட்டது. ஆனால், அவரை கைதுசெய்வதே காவல்துறைக்கு பெரும்பாடாகிவிட்டது. பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. (2/8) Image
May 23, 2023 6 tweets 2 min read
எம் கல்லூரித் தாளாளரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்காருமான கருமுத்து தி. கண்ணன் காலமானார். நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் படிக்கும் நாட்களில், சுதந்திர தினம், குடியரசு தினம் அல்லாமல், வெகு அரிதாகத்தான் அவர் கல்லூரிக்கு வருவார். Image உலகமயமாக்கம் அப்போதுதான் துவங்கிருந்த நாட்களில், அவர் பயன்படுத்திவந்த வோல்வோ கார் ஒரு மிகப் பெரிய அதிசயமாக இருந்தது.
கல்லூரியை முடித்த பிறகு, பல முறை ஒரு பத்திரிகையாளராக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு முறை அவரது சென்னை மாளிகையில் சந்தித்தபோது, அவரது உறவினர்...
May 22, 2023 16 tweets 6 min read
இந்தியாவில் ஜாதி கட்டமைப்பின் அடக்குமுறை குறித்தும் அதற்கு எதிரான தொடர் போராட்டங்கள் குறித்தும் பேசும் மற்றும் ஒரு புத்தம் புதிய புத்தகம் Caste Pride: Battles for Equality in Hindu India. புத்தகத்தை எழுதியவர் தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரான மனோஜ் மிட்டா. (1/16) Image இவர் ஏற்கனவே When a Tree shook Delhi: The 1984 Carnage and its Aftermath, The fiction of Fact finding: Modi and Godhra ஆகிய புத்தகங்களை எழுதியவர்.
இந்தியாவில் இந்து ஜாதி அமைப்பை எதிர்த்து கடந்த இரு நூற்றாண்டுகளில் நடந்த சட்டப்போராட்டங்களைச் சொல்வதுதான் இந்தப் புத்தகம். (2/16) Image
May 21, 2023 5 tweets 2 min read
கடந்த ஆண்டின் இறுதியில் Smile என்று ஒரு படம் வெளியானது. ஒருவர் தற்கொலை செய்வதைப் பார்ப்பவர்கள், விரைவிலேயே அவர்களும் தற்கொலை செய்துகொள்வார்கள். Trauma ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கடத்தப்பட்டு, அந்தத் தற்கொலை நடக்கும். Virupakshaவின் மையக் கதை கிட்டத்தட்ட அதேதான். (1/5) ImageImage ருத்ரவனம் என்ற கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் பலர் இறந்துபோக, அங்கிருந்த மந்திரவாதி ஒருவரையும் அவர் மனைவியையும் உயிரோடு எரித்துவிடுகிறார்கள். 12 ஆண்டுகள் கழித்து, அந்த கிராமமே சுடுகாடாகிவிடும் என அந்த மனைவி சபித்துவிடுகிறாள். (2/5) Image
May 20, 2023 7 tweets 3 min read
ஒருவரைக் கொலைசெய்யத் திட்டமிடுகிறார்கள். ஆனால், திட்டமிட்ட நேரத்தில் அந்தக் கொலை வேறொருவரால் செய்யப்படுகிறது. நாம் கொலை செய்ய நினைத்த நபரைக் கொலை செய்தவர் யார், எதற்காகச் செய்தார் என முதலில் திட்டமிட்ட நபர் யோசிக்கிறார். முதலில் ஆச்சரியமும் பிறகு பயமும் வருகிறது. (1/7) Image இந்தக் கொலையைச் செய்த நபரைத் தேடத் துவங்குகிறார். பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இதுதான் Aha OTTல் வெளியாகியிருக்கும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தின் கதை. கதையைக் கேட்கும்போது ரொம்பவும் நன்றாக இருக்கிறது. திரைக்கதை சுமார்தான் என்றாலும்கூட, ஓகேதான். (2/7) Image
May 20, 2023 8 tweets 3 min read
வட இந்தியாவில் நிலவும் ஆணாதிக்கம், ஜாதி ஒடுக்குமுறையை பின்புலமாக வைத்து, ஒரு பெண் காவல்துறை அதிகாரியை மையப் பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியஸ் த்ரில்லராக Dahaadஐச் சொல்லலாம். இதே அம்சங்களோடு நகைச்சுவை த்ரில்லராக உருவான படம்தான் Kathal - கட்ஹல். (பலாப்பழம்). (1/8) Image ஒரு வட இந்தியச் சிறுநகரம். அங்கே உள்ள எம்.எல்.ஏவான முன்னாலாலின் வீட்டில் வளர்க்கப்பட்ட பலா மரத்தில் காய்த்திருந்த இரண்டு பலாப்பழங்கள் காணாமல் போகின்றன. அந்தப் பலாப்பழத்தைக் கண்டுபிடிக்கும் பணி காவல்துறை ஆய்வாளரான மஹிமா பசோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. (2/8) Image
May 19, 2023 7 tweets 3 min read
போதைப் பொருள் வர்த்தகம், கொடூரமான வில்லன், போதைப் பொருள் கும்பலுக்குள்லேயே உள்ள சிக்கல் எல்லாம் சேர்ந்துகொண்டால் ஒரு அட்டகாசமான த்ரில்லர் கிடைக்கும். ஆனால், இந்த ingredients இருப்பதாலேயே அது கிடைத்துவிடாது. சிறப்பான திரைக்கதையும் தேவைப்படும். (1/7) Image Saas, Bahu Aur Flamingo நம்மைக் கைவிடுவது இந்த இடத்தில்தான். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்தத் தொடர், ஆரம்பத்திலிருந்தே அசுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. மொத்தம் எட்டு எபிசோட்கள்.
வட மேற்கு இந்தியாவில் ரான் பிரதேஷ் என்ற கற்பனைப் பிரதேசத்தில் நடக்கிறது கதை. (2/7) Image
May 18, 2023 13 tweets 6 min read
Modern Love Chennai: ஐந்து நவீன காதல் கதைகளும் ஒரு ஆணாதிக்கச் சுரண்டல் கதையும்
--------------------------
காதல் குறித்து தி நியுயார்க் டைம்ஸில் வெளியான வாராந்திர கட்டுரைகளின் அடிப்படையில் இயக்குனர் ஜான் கார்னே Modern Love என்று ஒரு தொடரை பிரைம் வீடியோவுக்காக இயக்கினார். (1/13) ImageImage அதில் காதலின் பல்வேறு வகைமைகளின் அடிப்படையிலான கதைகள் இடம்பெற்றிருந்தன. பிரைம் வீடியோ அதே பாணியிலான இந்தியாவிலும் முயன்று வருகிறது. ஏற்கனவே மாடர்ன் லவ் மும்பை, மாடர்ன் லவ் ஹைதராபாத் ஆகியவை வெளியாகிவிட்ட நிலையில், தற்போது மாடர்ன் லவ் சென்னை வெளியாகியிருக்கிறது. (2/13) ImageImage
Apr 20, 2023 12 tweets 5 min read
கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்படும் இந்த தருணத்தில் படிக்க வேண்டிய ஒரு நூல் These Seats Are Reserved: Cast, Quotas and the Constitution of India. புத்தகத்தின் ஆசிரியரான அபிநவ் சந்திரசூட், பம்பாய் உயர்நீதிமன்ற வழக்கறிஞர். (1/12) Image ஹார்வட் லா ஸ்கூலில் படித்த அபிநவ், சட்டம், நீதிமன்றங்கள் தொடர்பாக பல முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார். Republic of Rhetoric: Free Speech and the Constitution of India, Supreme Whispers: conversations with the Judges of the Supreme Court of India,... (2/12) Image