Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Feb 13, 2023, 11 tweets

#நெஞ்சுக்குநீதி_பாகம்1
8. சுதந்திர போராட்டம்
1939ல் விடுதலை கனல் தகித்து கொண்டு இருந்தது.
காந்தி இர்வின், ஒப்பந்தம், நேதாஜியின் ஆசாத் ஹிந்து ஃபவுஸ், ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை இந்தியாவில் தென் மூலையில் திருவாரூரில் படித்துக் கொண்டிருந்த 15 வயது பையன் கருணாநிதியையும் பாதித்தது

இனி கலைஞர் வார்த்தைகளில்:

அப்படிப் பட்ட முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர் என்னைச் சந்திக்க விரும்பினார்.
அவர் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார், கருணாநிதி என்றால் கிட்டத்தட்ட அவரைப் போன்ற வயதுடையவன், உருவமுடையவன் என்றெல்லாம்;15 வயது இளைஞனாக மெலிந்த உருவினனாக நான் போய் எதிரே நின்றேன்.

அவர் சந்தேகத்துடன், "நீங்கள்தானா 'மாணவ நேசன்' நடத்துகிற கருணாநிதி" என்று கேட்டார்.

'மாணவ நேசன்' என்பது நான் நடத்திய கையெழுத்து ஏடு. இப் போது கூட மாணவர்கள் பல இடங்களில் கையெழுத்து ஏடுகள் நடத்து கிறார்கள். கவிஞர் பாரதிதாசன், ஒருமுறை ஒரு மாணவர் தந்த கையெழுத்து ஏட்டைப் படித்து

விட்டு, கைராட்டையால் நாடு முன்னேறும் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு இந்தக் கையெழுத்துப் பத்திரிகையும்" என்று மதிப்புரை எழுதிக் கொடுத்தார்.

மாணவர்கள் நடத்தும் கையெழுத்து ஏட்டால் நாடு ஒரேயடியாக முன்னேறி விடும் என்று யாரும் கூறவில்லை. சிறுதுளி பெருவெள்ளம்.

பலர் சேர்ந்ததே நாடு. அந்த நாட்டின் எதிர்காலத்திற்குரியவர்கள் மாணவர்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களைச் செம்மைப் படுத்திக் கொள்ள மெருகேற்றிக்கொள்ளக் கையெழுத்துப் பிரதிகள் நல்ல வாய்ப்பு அளிக்கின்றன என்பதே என் நம்பிக்கை. இளமைப் பருவத்தில் எழுதுகின்றவைகளைப் பெரிய பத்திரிகைகள் எடுத்துக்

கொள்வதில்லை. அந்தப் பத்திரிகைக்கு எழுதுவது போன்ற தகுதியைக் கையெழுத்துப் பிரதி பயிற்சி தருகிறது. நான் பள்ளியில் நடத்திய கையெழுத்து ஏடுகளை ஒரு சமயம் ஒருவர்தான் படிக்க முடியும். நான் நடத்திய ஏடு மாதத்திற்கு இரண்டு வெளியீடு, ஒவ்வொரு வெளியீட்டிலும் எட்டு பக்கங்கள். பிரதிகளோ ஐம்பது

ஐம்பது பிரதிகளையும் நானும் சில நண்பர்களும் மட்டுமே உட் கார்ந்து காப்பி எடுப்போம். டெம்மி பேப்பர் செலவை மட்டும் வசூல் செய்து கொள்வோம். உழைப்பும் கட்டுரைகளும் இனாம்!
'மாணவ நேசன்' ஏழெட்டு மாதங்கள் நடை பெற்றது. இப்படி ஐம்பது பிரதிகள் கையாலேயே எழுதி வழங்குவது சிரமமாயிருக்கிறதே வேறு

வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோது தான் 'முரசொலி' தோன்றியது. வாரப் பத்திரிகை. மாதப் பத்திரிகை என்ற அளவிலே அல்ல. துண்டு வெளியீடுகளாக!
'முரசொலி' துவங்குவதற்கு முன்னால் நாளகு மாதங்களுக்கு முன்புதான் கதர்ச் சட்டைக் கண்ணாடிக்காரர் என்னைச் சந்தித்ததாகும்! ''மாணவர்களையெல்லாம்

ஒன்றுபடுத்திச் சுதந்திரம், சமாதானம், சமத்துவம் ஆகியவைகளுக்காக அணி வகுத்துக் குரல் எழுப்ப வேண்டும். அதற்குப் பாசறையாக மாணவர் சம்மேளனம் என ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருந்தது. அதன் அமைப்பாளராக நீங்கள் இருந்து திருவாரூர்ப் பள்ளியில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்." என கேட்டுக் கொண்டார்.

அணிந்திருந்தது கதர்ச்சட்டையாயினும், நாட்டுத் தலைவர்களைப் பெருமையோடு பேசினாராயினும் அவர் காங்கிரஸ்காரரல்ல என்று தெளிவாகியது. வந்தவர் கம்யூனிஸ்ட் என்பது அப்போது தெரியாது.
சுதந்திரம் - சமாதானம் - சமத்துவம் என்ற வார்த்தைகள் 15 வயது இளைஞனின் உள்ளத்தில் எவ்வளவு உணர்ச்சிகளை ஏற்றவல்லவை.!

அதனால் மாணவர்கள் சம்மேளனத்தின் அமைப் பாளன் ஆனேன். 200 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்கள். காங்கிரஸ் சார்புடையது எனக்கருதி, காங்கிரஸ் மாணவர் களும் சேர்ந்தனர், நூறு பேர் எக்கட்சியிலும் சேராத பொதுமாணவர்கள். சம்மேளனத்தின் போக்கு நம்மையும் சேர்த்து அடித்துச் செல்லும் போலிருந்தது

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling