#கலைஞராற்றுபடை
தலைவர் கலைஞர் அவர்களின் வைரவேல் யாத்திரை என்பது திருச்செந்தூர் முருகப்பெருமான் சன்னிதியில் உள்ள உண்டியலை 1980ல் கோவில் நிர்வாக அதிகாரி திரு. சுப்பிரமணியப்பிள்ளை வருவதற்கு முன்பே கோவில் அறங்காவல் குழு உறுப்பினரும், 1980-ல் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான
திரு. சி. கேசவஆதித்தன் திறந்து அதில் உள்ள காணிக்கையை எண்ணிக் கொண்டிருந்தார். தட்டிக்கேட்ட கோவில் நிர்வாக அதிகாரி திரு. சுப்பிரமணியன் சரியாக நவம்பர் 26 1980ல் மர்மமான முறையில் கோவில் பிரகாரத்தில் இறந்து கிடந்தார். அத்தோடு மட்டுமில்லாமல் முருகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தப்ப-
பட்ட வைரவேல் ஒன்றும் காணாமல் போனது. இதை கேள்விபட்ட தலைவர் கலைஞர் சுப்பிரமணியப்பிள்ளைக்கு நீதி கேட்டு 1982 பிப்ரவரி 15 ஆம் நாள் மதுரையில் தொடங்கி, 1982 பிப்ரவரி 22 ஆம் நாள் திருச்செந்தூர் வரை பாதயாத்திரையாக சென்று அன்றைய முதல்வர் MGRன் ஆட்சிகட்டிலின் அஸ்திவாரத்தை ஆட்டம் போடச்
செய்தார். அரண்டுபோன அன்றைய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. RM வீரப்பன் தலைவர் கலைஞரை தனியாக சந்திக்க நேரம் கேட்ட காலமும் உண்டு. அன்றைய மகோரா அரசு உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி CJRபால் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. அறிக்கையை வெளியிடவே MGRக்கு வியர்த்து கொட்டியது. அன்றைய
அரசின் மொழிபெயர்ப்பு பிரிவு அதிகாரியாக இருந்த சதாசிவம் மற்றும் சண்முகநாதனின் உதவியோடு தலைவர் கலைஞர் பால் கமிஷன் அறிக்கையை வெளியிட்டு மகோராவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். உடனடியாக நீக்கப்பட்ட அதிகாரிகளில் ஒருவரான திரு. சண்முகநாதன் தலைவர் கலைஞரின் நிழலாக வலம் வந்தவர்.
பால் கமிஷன் கூறியதாவது, " கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை தற்கொலை செய்யவில்லை அவரை அடித்துதான் கொலை செய்துள்ளனர்" என குறிப்பிட்டுள்ளது.மேலும், கோவிலில் பல லட்சம் மதிப்புள்ள வைரவேல் என்ன ஆனது என இதுவரை யாருக்கும் தெரியவில்லை! தலைவர் கலைஞரின் விடா முயற்சி கடைசியாக வெற்றி
பெற்றது. ஒரு மாநில முதலமைச்சரே பால் கமிஷன் அறிக்கையை வாசிக்க பயந்தபோது! தலைவர் கலைஞர் மிகவும் துணிச்சலோடு அந்த அறிக்கையை வெளியிட்டது மக்கள் மன்றத்தில் மிகுந்த எழுச்சியாக இன்று வரை பார்க்கப்படுகிறது. எனவே தான் அவரை திராவிட இனத்தில் பிறந்த "பனங்காட்டு நரி" என்று உடன்பிறப்புகளினால்
இன்றும் கொண்டாடப்படுகின்றார். எனவே வேல் யாத்திரையை தலைவர் கலைஞர் ஆன்மிகத்திற்காகவோ? அல்லது சனாதத்திற்காகவோ? நடத்தப்பட்டது அல்ல. மனிதனறம் தழைக்க நடத்தப்பட்டவையாகும்! புறவாசலில் கலைஞரை தூற்றியவன் நிச்சயம் அகவாசலில் அவரை போற்றியவனாக தான் இருப்பான்! 🙏🙏
#KalaignarForever 🖤❤️🖋️
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.