Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Feb 17, 2023, 12 tweets

இந்தியனே, இந்தியனைச் சுரண்ட நினைத்தால் என்னாகும்
~ #ராஜராஜேந்திரன்

வரலாறு என்ன சொல்கிறது ??

பார்ப்பனீயப் பாம்பு ஆட்சியாளர்களின் கால்களை இறுகப் பிடித்து, கழுத்துவரை கவ்விவிட்டபின், நாட்டில் மதத்தின், இனத்தின் பெயரால் சக மனிதர்களையே இழிவுபடுத்தும் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறின.

கஜினி, கோரி என கொள்ளையடிக்க வந்தவர்களிடம், இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல என்று பாடினார்கள் சாமானியர்கள்.

எளிதாக ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியது அடிமை வம்சம்.

ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் அவனும் பழைய குருடி கதவைத் திறடி கதையாய், உல்லாச வாழ்வில் அலங்கோலமான

ஆட்சியை நடத்த ;

சக இஸ்லாமிய அரசனை வீழ்த்த முகலாயர்களை அழைத்து வந்து ஆளச் சொன்னார்கள். யார் ?

மக்கள்தான்.

இப்ராஹிம் லோடியை எளிதாக பாபர் வீழ்த்த அதுதான் பிரதானக் காரணி.

இருநூறு ஆண்டுகள் வரை அந்த வம்சமே நெடுக ஆண்டது. பார்ப்பனியமும், உல்லாசமும் அவர்களுடைய கால்களையும் பற்றியது.

அவுரங்கசீபிற்குப் பின் எவனுக்கும், எவன் மீதும் அக்கறை இல்லை.

பணத்தை வட்டிக்கும், படைகளை வாடகைக்கும் விட்டுப் பிழைக்க வந்த வெள்ளைக்காரர்களை, நீங்க இனி ஆண்டாத்தான் என்ன என்று கோரியவர்களும் நாம்தான் !

அவன் 150 வருடங்கள் ஆண்டான். தீமைகளை விட நன்மைகள்தான் அதிகம் விளைந்தன.

பார்ப்பனியம் அழிந்துவிடுமோ என அஞ்சியக் கூட்டமொன்று கைகோர்த்து, முதல் இந்திய விடுதலைப் போர் என செம மாத்து வாங்கியது !

கல்வியும், வசதியும், அறவழிப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தச் செய்தது. அதனால் விடுதலை வாய்த்தது !

ஊழல், சர்வாதிகாரம், அத்துமீறல், அராஜகம் என்றெல்லாம் சிற்சில

பிழைகள் இருந்தாலும், உலகின் மிகப் பெரிய ஏழை நாடு படிப்படியாக மெல்ல எழுந்தது.பொறுக்குமா பார்ப்பனீயத்திற்கு ?

மதக்கலவரங்கள், பிரித்தாளும் சூழ்ச்சி, மொழித்திணிப்பு, போலி தேசபக்தி என்று கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக செதுக்கி, ஓங்கி வளர்ந்த சிலையை சிதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்

மக்கள் வழக்கம் போல இந்தியாவுக்கு உதவும் நாடுகளிடம் கோரிக்கைகளை வைக்கவே ;

ஹிண்டன்பர்க், பிபிசி போன்றவை நமக்கு உதவ முன்வந்தன.

குஜராத்தின் அட்டூழியக் கலவரங்களைப் பற்றி ஏகப்பட்ட நூல்கள், கட்டுரைகள், குறும்படங்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வந்துமே கூட படுகொலை செய்தவன்களை பெரிய

பெரிய பதவியில் வைத்து அலங்கரித்தார்கள். ஆனால், அவைகளை மட்டுமே தொகுத்து வந்த பிபிசி ஆவணப்படமோ, உலகளவில் பரவி, இவன்களையாடா திரும்ப திரும்ப உட்கார வைக்கிறீங்க என்கிற கேள்வியை நம்மை நோக்கி எழுப்ப வைத்துள்ளது !

மோடி, அமித்ஷா போன்றோர் எப்படி பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்ட போலி

பிம்பங்களோ, அவர்களுக்கு நிகரான சக குஜராத்தி பிம்பம்தான் அதானி.

மூன்றே வருடங்களில் பல தகிடுதத்தங்களைச் செய்து போலியாக இராட்சத பலூன் அளவுக்கு ஊதப்பட்ட அந்த பிம்பம், ஹிண்டன்பர்க் கட்டுரையால் தூள் தூளாக வெடித்துச் சிதறியுள்ளது !

சொறி சிரங்கைக் கண்ட குரங்கின் கைகள் சும்மா

இருக்காது என்பதைப் போல, BBC நிறுவனங்களில் 60 மணி நேர சோதனையை மேற்கொண்டது இந்திய வருமான வரித்துறை !

இந்த அதிரடி நல்லதற்குத்தான்.

அணையப் போகும் தீபம் அணையும் முன் கோடி பிரகாசத்துடன் எரிகிறது.

கரையில் மீன் கண்டபடி துள்ளுவதென்பது எதிரிக்கு பயத்தையா தரும் ?

இந்திய ஆட்சி தனக்கு

எதிரானவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ளும் என்பதை உலகம் முழுக்க காட்டியிருக்கிறது மோடியின் பீஜேபீ அரசு !

ஏமாளிகளுக்கு மதவெறி மது ஊற்றி, அவர்கள் போதையில் அளிக்கும் வாக்குகளைக் கொண்டு மீண்டும் மீண்டும் வென்றிடலாம், ஆனால், இந்திய மக்களின் குணமறியாத, வரலாறியாத மூடர்கள், தடம் தெரியாமல்

கரைந்து காணாமல் போகப்போவதென்பது உறுதி. அதன் முதற்படியாக இந்த வெற்று ரெய்டுகளைச் சொல்லலாம் !!!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling