அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Feb 17, 2023, 15 tweets

#கஜேந்திர_வரதன்_திருக்கோயில்
 புராணப் பெயர் திருக்கவித்தலம். தற்போதைய பெயர் கபிஸ்தலம், தஞ்சாவூர்.
மூலவர்: கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்)
உற்சவர்: செண்பகவல்லி
தாயார்: ரமாமணி வல்லி, பொற்றாமரையாள்
தல விருட்சம்: மகிழம்பூ
கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம்,
வைகானச ஆகமம்.

இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை

காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பதுமில்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக்காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக்குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த துர்வாசர், மன்னன் இருந்த

குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில்  மூழ்கியிருந்தான். இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில், "மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவன் ஆகவும் இருப்பதாலும், நீ

விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்” என சபித்தார். முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பாப விமோசனமும் கேட்டான். இவனது நிலையுணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு, "நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி

கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்@ என்று கூறினார். அத்துடன்,"ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ “ஆதிமூலமே” என மகாவிஷ்ணுவை அழைக்க, அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும்.”என்றார்.
ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில்

வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த

குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப் பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர் "நீ வருபவர்களை எல்லாம் காலைப் பிடித்து இழுப்பதால் முதலையாக மாறுவாய்” என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். அகத்தியர், “கஜேந்திரன் என்ற யானை இந்த

குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப் பிடிப்பாய், அப்போது அதைக் காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்.” என்றார். இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள  கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக்

கண்ட முதலை யானையின் காலைக் கவ்வியது."ஆதிமூலமே!” என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித்ததாக வரலாறு. கபி என்ற சொல்லுக்கு குரங்கு என்று பொருள். ராமபக்தனான அனுமனுக்கு திருமால் இத்தலத்தில் ராமபிரானாக

காட்சி அளித்ததால் கபிஸ்தலம் என பெயர் ஏற்பட்டது.
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா, தீ மாற்றமும் சார வகை அறிந்தேன்- ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு என்று #திருமழிசையாழ்வார்
‘ஆற்றங்கரை கண்ணனே’ என்று பாடியதால் பெருமாளை கண்ணன் என்றும்

அழைப்பர். திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான், பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்து உள்ளார். ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே

வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.
இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இத்தல இறைவன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ககனாக்ருத விமானம் எனப்படும். கஜேந்திரன் என்ற இந்திராஜும்னன், முதலையாயிருந்த கூஹு, பராசரர், ஆஞ்சனேயர் ஆகியோர்

இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர். ஆடி பௌர்ணமி கஜேந்திர மோட்சலீலை. வைகாசி விசாகம் தேர், பிரமோற்சவம். பெருமாளுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடக்கிறது. பக்தர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். கும்பகோணத்தில் இருந்து திருவையாறு வழியில்

சுமார் 15 கிமீல் உள்ளது. கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்துபேருந்துகள் உள்ளன. நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 7:00 - 12:00
மாலை 5:00 - 7:30
தொலைபேசி: 04374223434
முகவரி: மேளா போஸ்ட், கபிஸ்தலம், பாபநாசம் தாலுக்கா, தமிழ்நாடு
ரயில் நிலையம்: பாபநாசம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling