Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Feb 19, 2023, 16 tweets

#கஞ்சாகேஸ்_அறிமுகம்
91 ல் #டான்சிராணி ஆட்சியில் அந்த பெயரை சொல்லவே பயந்து எம்.என். என்று மரியாதையாக அழைப்பார்கள்.
அவர்..
சசிகலா கணவர் எம் நடராஜன்
ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பெண் IAS சந்திரலேகாவுடன் நடராஜனின் அறிமுகத்திலிருந்து ஆரம்பித்தது தமிழ்நாட்டின் அரசியல் சீரழிவு

செய்தி பிரிவு அதிகாரியாக கலைஞரால் நியமிக்கப்பட்ட நடராஜன் மனைவி சசிகலாவை சந்திரலேகா உதவியுடன் ஜெயாவுக்கு அறிமுகம் செய்தார். எம்ஜிஆரின் அடாவடியால் ஆண் நண்பர்களை சந்திக்க முடியாமல் தவித்த ஜெயாவுக்கு சசியின் வருகை ஆறுதலாக இருந்தது. வீடியோ கேசட் கொடுக்க வந்தவள் உடன்பிறவா சகோதரி ஆனார்

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா அரசியலில் பெரிய தலைக்கட்டாக உருவெடுக்கவும், அ.தி.மு.க.வை கைப்பற்றிடவும், முதல்வராக தனிப்பெரும் ஆளுமை காட்டிடவும் நடராஜனின் திரை மறைவு தகிடு தத்தங்கள் உதவின
ஆதரவற்று நின்ற தனக்கு, மனைவியையே சகோதரியாக தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு நகர்ந்து

நின்ற நடராஜன் மீது
ஜெயலலிதாவுக்கு நியாயப்படி நடராஜன் மீது மிகப்பெரிய மரியாதையும், நன்றியும் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் 2003 ல் நடராஜன் நில மோசடி வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது வெறுப்பு ஏற்பட எது காரணம்?
போயஸ் தோட்டத்து சுவர்கள் மட்டுமே தெரிந்த ரகசியம்.

பிற்காலத்தில் ஜெயலலிதா தமிழகத்தின் அசைக்க முடியாத முதல்வராவார், தன் மனைவி நிழல் முதல்வரளவுக்கு உயர்வார்! அதன் மூலம் தன் மற்றும் தன் மனைவியின் சொந்த பந்த வகையறாக்கள் வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் என நடராஜன் மிகப்பெரிய ஃபோர்விஷனுடன் திட்டமிட்டிருக்க வாய்ப்பில்லை! ஆனால் நடந்தது.

ஜெயாவால் நடராஜன் பெற்றது ஏராளம், இழந்தது தாராளம். கட்டிய மனைவியை இழந்தார். தங்களுக்கென்று ஒரு குழந்தை வேண்டுமென்று கூட சசியும், நடராஜனும் திட்டமிட்டுக் கொள்ளவில்லை.
நடராஜனை காண சசி செல்லக்கூடாது, சசியின் பெயரில் நடராஜனை நீக்க வேண்டும் என்று கூட ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.

தேர்தல் காலங்களில் நடராஜன் பெசண்ட் நகர் இல்லத்தை பெரும் படையே ‘சீட் வாங்கி தாங்க தலைவரே!’ என முற்றுகையிடும். நடராஜனுக்கென ஒரு கோட்டா ஒவ்வொரு தேர்தலிலும் ஒதுக்கப்படும் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையின் அடி நாதமே நான் தான் என்று ஜெயா இருக்கையிலேயே நடராஜன் காலர் தூக்கி விட்டிருக்கிறார்

மனைவியை தாரை வார்த்து, கட்சியில் நடராஜன் ஆடிய ஆட்டங்கள் வழக்கம் போல ஜெயா காதுக்கு எட்டவே இல்லை. 1996 இல் அதிமுக மட்டுமல்ல ஜெயாவே பர்கூரில் பரிதாபமாக தோற்று சொத்து குவிப்பு வழக்கு கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாராவுக்கு ஊதுபத்தி உருட்ட சென்ற போது தான் தெரிந்தது நடராஜன் ஆட்டம்

மன்னார்குடி மாபியா கும்பல் ஆடிய ஆட்டத்தால் மனம் நொந்து நம்பிக்கை இழந்த கட்சி தொண்டர்களை மீண்டும் ஏமாற்ற ஜெயா நடராஜனை வெளியேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலிகடா ஆக்கப்பட்ட நடராஜன் ஜெயாவை பழிவாங்கு திரை மறைவு வேலைகளை நடத்தவே சசியை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் ஜெயா

2003 ஜுலை மாதம் திடீரென்று மதுரையைச் சேர்ந்த செரினா பானு என்கிற ஜனனி என்கிற பெண் கைது செய்யப்பட்டார்.   அவரோடு, அவர் தாயார் ரமீஜா மற்றும் அவர்கள் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் காரிலிருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. சென்னை நீலாங்கரையில் .

உள்ள அவர்கள் வீட்டிலிருந்து 1.04 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.   விமானப்பணிப்பெண் பயிற்சி பெற்றிருந்த செரினா எதற்காக கைது செய்யப்பட்டார், ஏன் கைது செய்யப்பட்டார் என்பன மர்மமாகவே இருந்தன.
ஆனால் செரினாவுக்கு ஜாமீன் வேண்டி நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் யார் தெரியுமா ?

தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்து, 2022 ல் காங்கிரசை விட்டு விலகிய கபில் சிபல்.  உடனே ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமுமே பரபரப்பாகி இந்த வழக்கை உற்று கவனிக்கத் தொடங்கின. ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் போன்ற பத்திரிக்கைகள் இந்த வழக்கின் பின் உள்ள மர்மங்களை எழுதத் தொடங்கின.

அ.தி.மு.க-வின் அதிகார மட்டத்தில் இருந்த 'நர்த்தன’ நாயகனுக்குப் பிடித்த நாயகியாய் இருந்த செரீனா, அந்த ஹோல்டை வைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்தவும் தலைப்பட்டார். நாயகனோடு முப்பைபக்கம் சென்றிருந்தபோது, 'ஐயம் ஃப்ரம் போயஸ் கார்டன்’ என்று வடநாட்டு எம்.பி-க்களிடம் வாய் துடுக்காகப்

பேசுமளவுக்கு வளர்ந்தது இவரது அதிகார வரம்பு. இதை எல்லாம் தெரிந்துகொண்ட சசி வட்டாரம், செரீனாவுக்கு செக் வைக்க நினைத்தது. ஆட்சி அவர்கள் பக்கம் இருந்ததால் பாய்ந்தது #கஞ்சாவழக்கு. வழக்குப் போட்டாலும் ஆளும் கட்சியின் ஆசீர்வாதத்துக்கு உரிய மனுஷியாகவே பாதுகாக்கப்பட்டார் செரீனா

நீதிமன்றத்துக்கு வந்தபோதெல்லாம் ராணுவ பாதுகாப்பு...  ஏடாகூடமாக எங்காவது எதையாவது பேசிவிடக்கூடாது என்பதற்காக.
கஞ்சா வழக்குக்கில் சிறை சென்ற பிறகு, நடராஜனுக்கும் செரீனவுக்கும் இடையில் இருந்த உறவுப் பாலம் உடைந்துவிட்டது
16 சாட்சிகள், 42 சான்று ஆவணங்கள், 12 சான்று பொருட்கள்

இருந்தும் 'குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை’ என்று சொல்லி செரீனாவை 2005-ல் விடுதலை ஆனார். ஜெயா சசி நடராஜன் உள் குத்துகளால் செரீனா மீது போடப்பட்ட #கஞ்சாவழக்கு அடுத்து பலி வாங்கியது தமிழ்நாட்டை திகைக்க வைத்த 100 கோடிக்கு திருமணம் செய்த ஜெயாவின் வளர்ப்பு மகன் #சுதாகரன் மேல் தான்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling