Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Feb 20, 2023, 27 tweets

#வாச்சாத்🔥
1992 ஜூன் 20,
தர்மபுரி மாவட்டம் அரூர், வாச்சாத்தி மலைக்கிராமம்

தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் காந்திமதி அம்மா.

லாரியில் வந்து இறங்கிய போலீஸ் பட்டாலியன் என்ன ஏது? என்று கூட கேட்கலை அடிக்க ஆரம்பித்தது. ஊருக்குள் கொண்டுபோய், ஆலமரத்தடியில் உட்காரவைத்தது

அப்பதான் தெரிந்தது இந்த கொடுமை அவருக்கு மட்டும் இல்லை ஊரில் உள்ள அத்தனை பேருக்கும்னு.
ஏறத்தாழ 250 குடிசை வீடுகள் 655 பேர் கொண்ட இந்த இயற்கை வளம் சூழ்ந்த கிராமத்தில் பழங்குடி இனமக்கள் வசித்து வந்தனர். அருகில் இருக்கும் சித்தேரி மலைப்பகுதியில் உயர்ந்தவகை சந்தன மரங்கள் அதிகம்

என்பதால், அப்போதைய ஆளுங்கட்சி அதிமுக வி.ஐ.பி.க்கள், வனத்துறை அதிகாரிகளின் துணையோடு மரக்கடத்தல் பேர்வழிகள் சந்தன மரங்களை சுவாஹா செய்தபடி இருந்தனர். முதலில் பணிந்து வேலைபார்த்த பழங்குடி இன மக்கள் ஒருகட்டத்தில் 'திருட்டு மரம் வெட்ட எங்களை கூப்பிடாதீர்கள்' என்று போக மறுத்தனர்.

அப்போது ஜெ. முதல்வர் செங்கோட்டையன் வனத்துறை அமைச்சர்
அதிமுகவினர் துணையோடு சந்தன மரம் கடத்தப்படுவது வெளியே கசிந்தது கொதித்த வனத்துறையினர், வாச்சாத்தி மக்கள் தான் சந்தன மரம் உள்ளிட்ட வனவளங்களைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று விவகாரத்தை திசை திருப்ப, அன்று ரெய்டு வந்திருந்தார்கள்.

முந்திய நாள், மரம் வெட்ட சொன்ன அதிகாரிகளுக்கு மறுப்பு தெரிவித்தவர்களுக்கும் வனத்துறைக்கும் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.
பதிலடி கொடுக்க 300 போலீஸ் கொண்ட பட்டாலியனுடன் வந்திருந்தனர். அடுத்து நிகழ்ந்தது 150 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் கூட நடக்காதது. தெலுங்கு சினிமாவில் கூட காணாதது

#நரவேட்டை_காவல்துறை
சக அதிகாரிகள் மீது கை வைத்தவர்களுக்கு தாங்கள் யாரென நிரூபிக்க துடித்தனர். வேட்டை நடத்துவதற்கான அரசு ஆணையை, போர்வாளைப் போல பிடித்திருந்தனர்.
ஊரில் உள்ள அத்தனை பேரும் தரதரவென இழுத்து வரப்பட்டு, ஊரின் மய்யத்தில் அமைந்திருக்கும் ஆலமரத்தடியில் அமர வைக்கப்பட்டனர்.

பெண்கள், குழந்தைகள், வயதானோர் எனப் பாகுபாடின்றி அடித்து துவைத்து உட்கார வைக்கப்பட்டனர். வெறியாட்டம் தொடங்குவதற்கு முன்பே, ஆலமரத்தடியில் நின்றிருந்த பெண்களில் 18 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, வாகனத்தில் ஏற்றி ஏரிக்கரையை நோக்கிக் கொண்டு சென்றனர் அதிகாரிகள். பதுக்கி வைத்திருக்கும்

சந்தனக் கட்டைகளை எடுப்பதற்கு அழைத்துச் செல்வதாக நாடகம் அரங்கேறியது.
பெண் காவலர்கள் இருந்தும் அவர்கள் இப்பெண்களோடு செல்லவில்லை. ஏரிக்கரைக்கு சென்றதும், ஒவ்வொரு பெண்ணையும் தனித்தனியாக இழுத்துச் சென்று மூவர் நால்வராகக் கூட்டு வல்லுறவு கொண்டனர். இதில் 13 வயதேயான சிறுமியும் இருந்தார்.

பருவமெய்தாத நிலையில் ரத்தம் கொட்ட அவர் அனுபவித்த கொடுமை, வக்கிரத்தின் உச்சம்.18 பெண்களையும் வன்கொடுமை செய்து, அரூர் வனத்துறை அலுவலகம் கொண்டு சென்றனர். ஆலமரத்தடியில் குவிந்திருந்த உறவுகளைப் பார்த்து பெண்களும், உடைகள் கிழிக்கப்பட்டு நின்ற பெண்களைப் பார்த்து உறவுகளும் கதறி அழுதனர்.

இரவு முழுவதும் வீடுகள் சூறையாடப்பட்டன. பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. கிணற்று நீர், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையால் பாழ்படுத்தப்பட்டது. வாழ்நாள் சேமிப்பாக இருந்த நகைகளும் பணமும் திருடப்பட்டன. கையில் சிக்கிய அத்தனை பேரையும் அடித்து நொறுக்கினர். ஊருக்குள் இருந்தவர்கள்

சிறைப்படுத்தப்பட்ட நிலையில், வெளியில் சென்றவர்கள் தகவலறிந்து மலைகளுக்குள்ளும் வேறு ஊர்களுக்கும் ஓடி ஒளிந்தனர். இதற்கிடையில், அழைத்துச் செல்லப்பட்ட பெண்களை விடிய விடிய அடித்துத் துவைத்தனர் அதிகாரிகள். தலைவரான ஊர் கவுண்டரை அழைத்து வந்து, அவரது ஆடைகளை பெண்களையும் பெண்களின் ஆடைகளை

அந்தப் பெரியவரையும் அவிழ்க்கச் சொல்லி அடித்தனர். ஊர் கவுண்டரை துடைப்பத்தால் அடிக்கும்படி வற்புறுத்தப்பட்டனர் பெண்கள்.
மறுநாளும் அரூர் வனத்துறை அலுவலகத்திலேயே அடைத்து வைக்கப்பட்டனர். வாச்சாத்தியில் இருந்து திருடிய உணவுப் பொருட்களையும், ஆடு கோழிகளை சமைத்து சாப்பிட்டனர் அதிகாரிகள்.

வாச்சாத்தி மக்கள் சந்தன மரக் கடத்தலில் ஈடுபடுவதைத் தடுக்கவே, நடவடிக்கையை எடுக்க நேர்ந்தது என நியாயம் கற்பிக்க, அடுக்கி வைக்கப்பட்ட சந்தனக் கட்டைகளின் முன்பு 18 பெண்களை நிறுத்தி படமெடுத்தனர். மாலை 5 மணியளவில் மாஜிஸ்திரேட் முன்நிறுத்தி பின்னர், சேலம் கிளைச் சிறையில் அடைத்தனர்

சூலை 20 தொடங்கி மூன்று நாட்கள் வாச்சாத்தியை மொத்தமாக சிதைத்து வெளியேறியது, அரச பயங்கரவாத கும்பல். இப்படியொரு கொடுமை நடந்ததற்கான சுவடு கூட வெளியுலகத்திற்கு தெரியவில்லை. வாச்சாத்தி மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை சொல்லி அழக்கூட ஆளின்றி புழுங்கிக் கொண்டிருந்த நிலையில்தான்,

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சித்தேரி மலை மாநாடு கூடியது. சூலை 7 அன்று கூடிய மாநாட்டில் பங்கேற்ற மலைவாழ் மக்கள் சிலர், அரைகுறையாக கேள்விப்பட்ட விஷயங்களை எடுத்துரைக்க, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் போராட்டத்தில் இறங்கியது.
ஊரே அழிக்கப்பட்டு,

வாச்சாத்தி ஒரு மயான பூமியாகவே மாறிப் போயிருந்த நிலையில், போரட்டத்தை எங்கு, எப்படி தொடங்குவதெனத் தெரியாமல் திணறியது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். மலைகளுக்கும் பிற ஊர்களுக்கும் ஓடிப் போயிருந்தவர்களை ஒவ்வொருவராகக் கண்டுபிடிப்பதற்குள் நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.

ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனு அனுப்பப்பட்டது. பத்திரிகை அலுவலகங்களுக்கும் மனுவின் பிரதி அனுப்பி வைக்கப்பட்டது. இது உண்மையாக இருக்கும் என நம்ப, எந்த செய்தி நிறுவனமும் தயாராக இல்லை. அதே மனுவை சில நாட்கள் கழித்து மார்க்சிஸ்ட் கட்சியின்

அப்போதைய தலைவரான ஏ. நல்லசிவன் மூலம் முதலமைச்சருக்கு அனுப்ப, அதன் பின்னரே ஊடகங்கள் வாச்சாத்தி என்ற பெயரை உச்சரிக்கத் தொடங்கின.
இப்படியொரு கொடுமை நடந்ததை யாராலும் ஏற்க முடியவில்லை. அரசும் அதிகாரிகளும் உறுதியாக மறுத்துவந்த நிலையில், ஆதாரங்களைத் திரட்டுவதே பெரும் சவாலாக அமைந்தது.

வன்கொடுமை செய்யப்பட்ட பதினெட்டு பெண்கள் உட்பட 90 பேர் – 28 குழந்தைகள் – 15 ஆண்கள் என சிறையில் அடைக்கப்பட்ட 133 பேரையும் பிணையில் வெளியில் கொண்டு வருவது எளிதானதாக இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.அய். விசாரணை கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட, நீதிபதி பத்மினி ஜேசுதுரை

வழக்கைத் தள்ளுபடி செய்ய சொன்னக் காரணம், வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது.
நீதிபதிகளின் சமூகப் பார்வையையும் நீதித்துறையின் நம்பகத் தன்மையையும் புரிய வைக்கப் போதுமானதாக அமைந்தன : “பொறுப்புள்ள அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.''

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வாச்சாத்தி மக்களின் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 1995 ஆம் ஆண்டு வாச்சாத்தி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை

தாக்கல் செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதன்பின், தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணை மாற்றப்பட்டது. முடிவில், 2011 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 24 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் 62 லட்சம் ரூபாய் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தாமதிக்கப்பட்ட நீதி மட்டுமல்ல; தாமதித்து வழங்கப்படும் இழப்பீடும் கூட பயனில்லாமல் போய்விடும் என்பதற்கு வாச்சாத்தி துயரம் ஓர் உதாரணம்

இதற்கான ஆதாரத்தோடு திரட்டிய பொழுது பத்திரிக்கை செய்திகளை காணவில்லை...

2011 தீர்ப்பு மட்டுமே செய்தித்தாளின் வலைத் கொண்டிருக்கிறது.

நீதி கிடைக்க முன் நின்று போராடிய மார்க்சிஸ்ட் இன் பிளாக்கில் கூட கொடூரத்தின் புகைப்படங்கள் கிடைக்க வில்லை..

ஃபேஸ் புக்ல கிடைத்த சில லிங்குகள் கீழே

m.facebook.com/photo.php?fbid…

தோழர்.பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய `உண்மையின் போர்குரல்-வாச்சாத்தி’ ஆவணப்படம் அந்த வரலாற்று உண்மையைப் பேசுகிறது. அதைப் பார்க்க பார்க்க நம் மனம் பதைபதைக்கிறது. அத்தனை கொடூரங்கள்.

m.facebook.com/photo.php?fbid…

19 ஆண்டுகள் சிறிது கூட தளர்ச்சி அடையாது போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரோ, தற்கால உதவியாக ரூ.15,000 வழங்கிய திமுக ஆட்சி பற்றியோ குறிப்பிடாத ஊடகங்கள்..
ஜெயாவின் கொடூரங்களை நிவாரண தொகையை கொட்டை இடத்தில் போட்டு மறக்கடித்தன

Pls go through & Share the English version too...

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling