அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Feb 23, 2023, 6 tweets

#வெற்றிலைபாக்கு_மகிமை பெண்கள் செய்யக்கூடிய தாம்பூல தானம் லக்ஷ்மி தேவியை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று. வெற்றிலையும் பாக்கும் இணைந்ததே தாம்பூலம் ஆகும். வெற்றிலையில் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என மூன்று தேவியும் இருப்பதால் அதை தானம் செய்வோருக்கு பல நன்மைகளை தரக்கூடியதாக உள்ளது.

என்ன தானம் செய்தாலும் அந்த தானத்துடன் தாம்பூலமும் இணைத்து கொடுப்பது உத்தம பலனை தரும். வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் குங்குமமாவது கொடுக்க வேண்டும். வெற்றிலை காமதேனுவின் அம்சம். அதனால் தான் இன்றும் நிச்சயதார்த்த நிகழ்வின்

போது வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். தெய்வத்தை ஆதாரமாகக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது பெரும் பாவத்தைத் தேடித் தரும். எல்லா தெய்வ பூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்கு வெற்றிலை பாக்கு மிகவும் அவசியம். வெற்றிலை, பாக்கு,

மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, வஸ்திரம் முதலானவை தானம் செய்யக் கூடிய முக்கியமான மங்கள பொருட்கள் ஆகும். இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலனை சொல்லும். மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு சுமங்கலித்

தன்மையை தரும். சீப்பு கணவனுக்கு ஆயுள் விருத்தியைத் தரும். கண்ணாடி கணவன் ஆரோக்கியத்தை அதிகப் படுத்தும். வளையல் மனம் அமைதியும் பொறுமையும் தரும். தேங்காய் பாவம் நீக்கும் (மட்டைத் தேங்காய் சிறப்பு). பழம் அன்னதானப் பலன் கிடைக்கும். பூ மகிழ்ச்சியைப் பெருக்கும். மருதாணி நோயிலிருந்து

காக்கும், சுபகாரியம் தடையின்றி நடக்கும். கண்மை திருஷ்டி தோஷங்களை நெருங்க விடாது. இரட்டை வஸ்திரம் புண்ணியம் சேர்ப்பதுடன் தானப்பலன் விரைவாக நிறைவுற உதவும். முடிந்த போதெல்லாம் வெற்றிலை பாக்குடன் தானம் செய்வோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling