Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Feb 24, 2023, 13 tweets

#என்நிம்மதிக்கு_வந்தசோதனை

"இப்படித்தான் என்னையும் மிரட்டினார்கள்.. தியானத்தில் இருக்கும் ஓபிஎஸ் இன் மணக் குமுறல் புரிகிறது

- கங்கை அமரன் பேட்டி

ஓபிஎஸ் சசி கும்பலால் விரட்டப்பட்டு தர்மயுத்தம் நடத்தும் வரை கங்கை அமரனுக்கு நிகழ்ந்த கொடுமை வெளியுலகத்திற்கு தெரியாமலே இருந்தது

பையனூர் பங்களாவை அபகரிக்க நினைத்த சசிகலா தரப்பு, முதலில் அதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. மாறாக அ.தி.மு.க.வின் குழும தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த என்னை நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அப்போது, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது அலுவலகத்திலிருந்து என்னுடைய

வீட்டுக்குப் போனில் பேசியவர்கள், என் மனைவியை மிரட்டி உள்ளனர். கங்கை அமரன் என்ன பெரிய ஆளா, ஜாக்கிரைதையாக இருக்கச் சொல்லு எங்களை மீறி செயல்பட்டால் அவ்வளவுதான் என்றனர். இதனால் பயந்து. ஸ்டுடியோவில் இருந்த எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக சசிகலாவிடம் போனில் பேசினேன்.

அதற்கு அவர், அப்படியா... நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதன்பிறகு அதுபோன்ற மிரட்டல் போன் அழைப்புகள் இல்லை. ஆனால் என்னுடைய வீட்டை போலீஸார் மப்டியில் கண்காணித்தனர். என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கண்காணித்தனர். மறைமுகமாகவே எனக்கு சசிகலா தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்தன.

பையனூர் பங்களாவை என்னிடமிருந்து பெறப்பட்ட போது எனக்கு வேறு இடத்தில் 2 ஏக்கர் இடம் தருவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை சசிகலா நிறைவேற்றவில்லை..
கங்கை அமரன் பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டி இது. தன் சரிதை பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளார்.
உண்மையில் நிகழ்ந்தது என்ன

1991-96 தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், 1994-ல் இசையமைப்பாளர் கங்கை அமரனிடமிருந்து இந்த நிலம், வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவரிடமிருந்து முறையாக நிலத்தை வாங்கவில்லை, மிரட்டியே வாங்கினார்கள் என்று தகவல்கள் வெளியாகின. 'சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரன், கங்கை

அமரனிடம் சென்று 'முதல்வர் ஜெயலலிதா உங்களைப் பார்க்க விரும்புகிறார்' என்று அழைத்துச் சென்று சந்திக்க வைத்திருக்கிறார். பின்னர், 'முதலமைச்சருக்கு உங்களுடைய பங்களா மிகவும் பிடித்துவிட்டது, எனவே, இந்த பங்களாவை நீங்கள் விற்றுவிடுங்கள்' என்று கூறியிருக்கிறார், அதற்கு பதிலளித்த கங்கை

அமரன். `இந்த நிலம் என்னுடைய இசையமைப்புப் பணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. மேலும் என் குடும்பத்தாருக்கும் இந்த வீட்டை விற்பதில் விருப்பம் இல்லை' என்று கூறியிருக்கிறார். ஆனால், இவற்றையெல்லாம் காதில் வாங்கிகொள்ளாத ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், கங்கை அமரனைப்

பின்தொடர்ந்தவண்ணம் இருந்திருக்கிறார். திடீரென்னு ஒருநாள், கங்கை அமரனின் வீட்டுக்குப் பதிவாளர், பிற அரசு அதிகாரிகளுடன் சென்று, அமரனையும் அவருடைய மனைவியையும் மிரட்டி கையெழுத்து போடவைத்தார்'' என்று சொல்லப்பட்டது.
2017-ம் ஆண்டு சசிகலா, ஜெயலலிதாவுக்குச் சொந்தமான 157 இடங்களில் வருமான

வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது பினாமி சொத்துகள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துகளைக் கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது. அதன்படி, 2019-ல் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு, கொடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் பங்களா

உட்பட 65 சொத்துகள் முடக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது பையனூர் பங்களாவும் முடக்கப்பட்டிருக்கிறது.
பையனூர் பங்களாவைப் பூட்டி சீல் வைத்த வருமான வரித்துறை, அதற்கான காரணத்தை விவரிக்கும் வகையில் பத்து பக்கங்கள் கொண்ட நோட்டீஸை பங்களா முகப்பில் ஒட்டியிருக்கிறது. அதன்படி

அறிவிக்கப்பட்ட 90 நாள்களுக்குள் இந்தச் சொத்தின் மூலம் ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ கூடாது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, பங்களாவைப் பயன்படுத்தலாம். ஆனால், விற்கவோ, அடகுவைக்கவோ முடியாது. மேலும், பங்களா முடக்கப்பட்டது குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன்

தீபக், மகள் தீபா இருவருக்கும் தகவல் வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது. இந்தநிலையில், தன்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை மீண்டும் மீட்டுத்தர வேண்டும் என்று கேட்பதற்காக கங்கை அமரன், தமிழக முதல்வர் மு.கஸ்டாலினைச் சந்திக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling