அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Feb 25, 2023, 10 tweets

#நாகலாபுரம்_ஸ்ரீவேதநாராயண_பெருமாள்
முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகலாபுரத்தில் காணலாம். இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ

மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே. கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான். அசுரனை கண்டுப்பிடித்த திருமால் மச்சவடிவில் அவராதம்

செய்து கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார் என்று மச்ச புராணம் சொல்லுகின்றது. நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக இங்கு அருளும் பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் ஆகும்.
மூலவர் வேதநாராயணப் பெருமாள்,

ஸ்ரீதேவி–பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் சூரிய பூஜையுடன் கூடிய தெப்பத் திருவிழாவும், பிரம்மோத்ஸவமும் முக்கியமானவை.
ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதத்தில் சில நாட்கள் மூலவர் நாராயணன் மீது சூரிய ஒளிக்

கதிர்கள் விழுகிறது. மேற்கு திசையை பார்த்து நிற்கும் நாராயணன் மீது, முதல் நாள் பாதங்களிலும், இரண்டாம் நாள் நாபியிலும் (வயிறு), மூன்றாம் நாள், சுவாமியின் சிரசிலும் (தலை) சூரிய ஒளிக்கதிர்கள் விழும். பிரதான கோபுர நுழைவாயிலிலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ளது மூலவர் விக்ரகம்.

சூரியனின் கதிர்கள் நேரடியாக தெய்வத்தின் மீது விழுவதற்கு இவ்வளவு தூரம் கடந்து செல்ல வேண்டும். இந்த 3 நாட்களைத் தவிர ஆண்டு முழுவதும் இந்த அதிசயம் நடக்காது. மேலும் இது நமது முன்னோர்களின் கட்டிடக் கலையா அல்லது வானியல் புத்திசாலித்தனமா என்பது இன்னும் புரியவில்லை, இது காலங்காலமாக

நடந்து வருகிறது. இந்த பழமையான மற்றும் பரந்த கோவில் கிருஷ்ண தேவராயரின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. கிருஷ்ணதேவராயர் தனது தாய் நாகம்பாவின் நினைவாக இந்த ஊருக்கு நாகலாபுரம் என்று பெயரிட்டுள்ளார். மிகப் பரந்த நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் கோவிலில் பிரமாண்டமான கோபுரங்களும்,

பெரிய பிரகாரங்களும் உள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் பிரகாரங்களை ஒட்டிய அழகிய தோட்டங்களுடன் இந்த ஆலயம் அற்புதமாகப் பராமரிக்கப்படுகிறது. திருப்பதியிலிருந்து தென்கிழக்கே 70 கிமீ தொலைவில், சென்னையிலிருந்து வடக்கே 90 கிமீ தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து பயணித்தால்,

ஊத்துக்கோட்டையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சுருட்டுப்பள்ளிக்குப் பிறகு புதூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்று தரிசித்து அதிசயத்தை உணர்ந்து அருள் பெறுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling