இந்துமதி Profile picture
விட்டு விடுதலை ஆகி விடு.. அந்த சிட்டு குருவி போலே

Feb 25, 2023, 14 tweets

#அனைவருக்கும்_வங்கிகணக்கு

2014 இல் மோடி இதனை ஆரம்பித்தபோது ஃபயர் விடாத இந்தியர்களே இல்லை..

பொங்கலுக்கு அரசு கொடுக்கும் இலவச வேட்டி தவிர வேறு உடை இல்லாதவனுக்கு எதுக்குடா வங்கி கணக்கு என எவனும் கேட்கவில்லை

திட்டம் அவ்வளவு கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்பட்டது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பதிவாளர்கள் அனைவரும் ஜன்தன் எனப்படும் ஜீரோ பேலன்ஸ் கணக்கில் இணைக்கப்பட்டார்கள்.
அரசின் ஸ்காலர்ஷிப்புக்காக அரசு வங்கிக்கு கணக்குத் துவங்கச் சென்ற பள்ளி கல்லூரி மாணவர்கள் ஜந்தன் கணக்கில் இணைக்கப்பட்டு குறிக்கோளை எட்ட முயன்றனர்

பிரதமராகிவிட்டால் 15 லட்சம் கிடைக்கும் என ஆசை காட்டப்பட்டு படிப்பறிவற்ற வட இந்தியர்கள் இணைக்கப்பட்டனர்.
சிலிண்டர் மானியம் இனி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற மிரட்டியதாலும் பலர் வங்கிகளை நாடி ஓடினர்.
எச்சில் கையால் ஈ கூட விரட்டாத மோடி அதற்கு அடுத்த ஆண்டு இன்னொரு

திட்டத்தை கொண்டு வந்தார்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜியோதி பீமா யோஜனா.
இதன்படி ஆண்டுக்கு ₹436 பிரிமியம் கட்டினால், இறந்தபின் நாமினிகளுக்கு 2 லட்சம் கிடைக்கும்.
இதற்கு 18 முதல் 50 வரை வயது நிர்ணயிக்கப்பட்டது
பிரீமியம் தொகை அதிகம் என்பதாலும் இன்சூரன்ஸ் திட்டங்களை போல பாலிசி

நிறுவனங்கள் பாலிசி அட்டை தராது என்பதாலும் மக்கள் தயங்கினர்.
குறைந்த பிரிமியம் தான் ஆக்சிடென்ட் ஆனால் உசுரோடு இருக்கும்போதே காசு கிடைக்கும் என ஆசை காட்டி
பிரதான் மந்திரி ஜீவன் சுரக்ஷித் பீமா யோஜனா திட்டம் துவங்கப்பட்டது. பிஜேபி ஆட்சி செய்த மாநிலங்கள் இதனை கட்டாயமாக அமுல்படுத்தின

2019 வரை 6 கோடி கணக்குகள் pmjjy இல் இணைக்கப்பட்டு 1.3 லட்சம் கணக்குகளுக்கு கிளைம் பண்ண தொகை கொடுக்க பட்டது.
கொரோனா காலத்தில் தன் கையாலாகாத தனத்தினால் அநியாயமாக போன உயிர்களின் கணக்குகளை குறைத்துக் காட்ட இந்தத் திட்டத்தில் இன்சூரன்ஸ் தொகை வழங்குவதை முற்றிலும் நிறுத்தியது மோடி அரசு

ஊதிப் பெருக்கப்பட்ட கார்ப்பரேட் கொள்ளைக்காரன் அதானி அதல பாதாளத்தில் விழுந்த போது. எல்ஐசியையும் தன்னுடன் இழுத்துச் சென்றான்.
கிட்டத்தட்ட 70 ஆயிரம் கோடி எல்ஐசிக்கு இழப்பு.
LIC சொத்து மதிப்புடன் ஒப்பிட இது சிறுதுளி என சப்பை கட்டு கட்டப்பட்டது. பெட்ரோல் விலை ஏறும் என மீம்ஸ் பறந்தது

நாம் எதிர்பார்த்தது வீண் போகவில்லை..
130 கோடி மக்களுக்கு பிரதமராக தேர்ந்தெடுத்த ஒரு குஜராத் பிராடு இன்னொரு குஜராத் பிராடுக்கு மாமா வேலை பார்க்க கொள்ளையடிக்கப்பட்ட எல்ஐசி தனது நஷ்டத்தை அடித்தட்டு மக்களின் மேல் சுமத்தியது.
ஜன்தன் கணக்குகள் எல்லாம் pmjjy திட்டத்தில் கணக்காளர்களை

கேட்காமலே இணைக்கப்பட்டு அவர்கள் கணக்கில் மிச்ச மீதி இருந்த தொகைகள் பிரிமியாக நேற்று கழித்துக் கொள்ளப்பட்டன. @TheOfficialSBI தனது வாடிக்கையாளர்களுக்கு எந்தக் குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை. தொடர்பு கொள்ளு முயன்றால் நேற்று மாலையில் இருந்து டெக்னிக்கல் எரர் என YONO காட்டுகிறது

இது போல நேற்று வேற எந்த வங்கி வாடிக்கையாளருக்காவது நிகழ்ந்து இருக்கிறதா..
நிகழ்ந்திருப்பின் உடனடியாக திங்கள் அன்று வங்கிக்குச் சென்று எழுத்துப்பூர்வமாக திட்டம் தேவை இல்லை என எழுதிக் கொடுங்கள்.
இதுவரை கழிக்கப்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக வங்கிக்கு தெரிவித்து விடுங்கள்

அதானி கடன் தீரும் வரை மீண்டும் நம்பர் ஒன் ஆகும் வரை, 140 கோடி பேரும் பல வகையிலும் இம்சை செய்யப்பட போகிறார்கள்.
இப்பதான் தெரிகிறது இந்த குஜராத்திகள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை விரட்டியது, குஜராத் மேற்கிந்திய கம்பெனி இந்தியாவை கொள்ளை அடிக்கத்தான் என்று..

விடுதியில் தங்கி படிக்கும் சகோதரி நேற்று சாப்பிட்டு விட்டு Gpay செய்ய முயன்றபோது பேலன்ஸ் இல்லை எனக் காட்ட பிறகுதான் @TheOfficialSBI செய்த மொள்ளமாரித்தனம் தெரிய வந்தது பதட்டத்தில் yono வில் முயற்சி செய்ய technical issue..
காலை நிலைமை சரியா இருக்கும் என call பண்ண class cut..😮

மாதக் கடைசி.. தமிழ்நாடு அரசின் ஸ்காலர்ஷிப்பை நம்பி படிக்கும் பெண் அவள். இன்று காலை சாப்பிட காசு இருந்ததா என்று கூட தெரியவில்லை.

படுபாவிகளா உங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதுடா.

19 வயசு பெண்ணின் கணக்கில் திருடியாடா அதனிய காப்பாத்தணும்..

இதுக்கு தெருத்தெருவா பிச்சை எடுக்கலாமேடா

வங்கியில் போய் சண்டை போட ₹300 செலவழித்து ஊருக்கு வர வேண்டும்..

கல்லூரி உள்ள ஊரில் வங்கியைத் தேடிப் போனா Home Branch போ என விரட்டுவான்..

வேற யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து இங்கே பதிவிடவும்

@SuVe4Madurai
@vasantalic
@its_me_King1
@Marankothi
@APJ_Dravidan

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling