#பாசிசகோமாளி_மோடி
2016,நவம்பர் 8,இரவு 8 மணி.
ஹிந்துஸ்தான் அதிபர் ஜெனரல் மோடி டிவியில் தோன்றி அந்த அறிவிப்பை வெளியிட்டார் :
இன்று நள்ளிரவு முதல் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.
இதன் மூலம் 50 நாளில் கருப்பு பணத்தை ஒழிப்பேன் இல்லாவிட்டால் என்னை உயிரோடு கொளுத்துங்கள்
அல்லு சில்லு முதல் பாலிவுட் கோலிவுட் உச்ச நட்சத்திரங்கள் வரை மாஸ்டர் ஸ்ட்ரோக் என அடிவயிற்றிலிருந்து எக்கி கத்தினார்கள், ட்விட்டரிலும் முகநூலிலும் சர்ஜிகல் ஸ்டிரைக் தெரித்தது
பொழுது விடிந்ததும் இந்தியாவே எமர்ஜென்சி காலம் போல் பைத்தியம் பிடித்து தெருத்தெருவாக அலைந்து கொண்டிருந்தது
#முதல்சர்ஜிகள்ஸ்ட்ரைக் அதிபர் மோடியால் கட்டுப்படுத்தப்பட்ட இந்திய ஊடகங்கள் மறைத்தததை.
சமூக ஊடகங்களில் வெளியான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நந்தலால் படம் வெளிப்படுத்தியது
மோடி நடத்திய அந்த முதல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கருப்பு பணத்தின் மீது அல்ல இந்நாட்டு ஏழைகள் மீது என்று உணர்த்தியது.
போட்டோஷாப்பில் ஊதி பெரிதாக்கப்பட்ட மோடி பிம்பம் இந்திய ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீது நிகழ்த்தப் போகும் கொடும் தாக்குதலின் தொடக்கமாக டிமான்ட்டிசேஷன் அமைந்தது.
கருப்பு பணம் ஒழிந்ததா?
தீவிரவாதிகள் முடக்கப்பட்டனரா? பொருளாதாரம் மேம்பட்டது வளர்ச்சி சாத்தியமானதா
விடை 2021 இல் தெரிய வந்தது.
டீமாலிட்டிசேஷன் முன்பு புழக்கத்தில் இருந்தது 17 லட்சம் கோடி.
2021ல் அது 27 லட்சம் கோடி
61 ஆயிரம் கோடி தொழிலில் நட்டம்
வங்கிகளுக்கு இழப்பு 35 ஆயிரம் கோடி
புதிய நோட்டுகள் அச்சிட்டதில் 17,000 கோடி இழப்பு
கணக்கில் வராத ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் இழப்பு
அப்பொழுது அமுக்கப்பப்பட்ட ஒரு செய்தி : ஜன்தன் திடீரென்று டெபாசிட் செய்யப்பட்ட ₹74,610 கோடி.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 3.8 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில் 12,021 கோடி 32 லட்சம் டெபாசிட்
மேற்கு வங்கத்தில் 2.44 கோடி ஜன்தன் கணக்குகளில் ரூ.9,193 கோடி 75 லட்சம்,
ராஜஸ்தானில் 1.9 கோடி ஜன்தன் கணக்குகளில் ரூ.6,291 கோடி 10 லட்சம்,
பீகாரில் 2.62 கோடி ஜன் தன் கணக்குகளில் ரூ.6,160 கோடி 44 லட்சம் டெபாசிட் ஆகியிருக்கிறது.
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகளில் இவ்வளவு தொகையை முதலீடு செய்தது யார்?
அவர்களுக்கு டிமான்ட்டி சீசன் முன்கூட்டியே தெரிந்திருந்ததா
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாகத்தான் அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற ஜந்தன் திட்டம் கொண்டுவரப்பட்டதா?
என்ற கேள்விகள் பிரேக்கிங் நியூஸ்களில் அமுங்கி போய் போய்விட்டன.
கருப்பு வெள்ளையானபின்
ஜன்தன் கணக்கில் ₹10000 மட்டுமே எடுக்க முடியும் என கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.