Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Feb 26, 2023, 21 tweets

#விஞ்ஞான_ஊழல்
1970களில் நிரூபிக்கப்படாமலே ஊத்தி மூடப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் தூக்கிக்கொண்டு 50 ஆண்டாக எம்சியார், ஜெயலலிதா, பன்னீர், எடப்பாடி செய்த ஊழல்களை ஒன்னும் இல்லாதது போல் ஆக்கி கலைஞர் செய்யாத ஊழலா என பரப்பி வருகின்றனர்?
உண்மையில் விஞ்ஞான ஊழல் எது தெரியுமா?

2011ல் ஜெயலலிதா பதவியேற்ற நாள் முதலாகவே.. வசூல், வசூல்,வசூல். மாத வசூல் கிடையாது.வார வசூல். ஒவ்வொரு அமைச்சருக்கும், அவரது துறைக்கு ஏற்றார்ப்போல, டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் வாரந்தோறும் பணத்தை வசூல் செய்து, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும்

ஒரு பங்களாவில் தங்கள் வசூல் தொகையை கொண்டு செலுத்த வேண்டும். அப்படி செலுத்துகையில் அத்தனையும் புதிய கரன்சித் தாள்களாக இருக்க வேண்டும். அந்த கரன்சிக் கட்டின் மேல்புறத்தில், முதல் நோட்டின் எண்ணையும், கடைசி நோட்டின் எண்ணையும் ஒரு தாளில் குறிப்பிட்டு சொருகியிருக்க வேண்டும். தொகையைக்

கொடுத்ததும், ஒவ்வொரு அமைச்சருக்கம் அவர்கள் கொடுத்த தொகையில் 30% திரும்ப அளிக்கப்படும். யாராவது தனக்குச் சேர வேண்டிய 30% எடுத்துக் கொண்டு தொகையைக் கொடுத்தால். நடக்கும்னே தெரியாது.வசூல் செய்யப்பட்ட தொகை, பல்வேறு ஆடிட்டர்களின் வழியாக ஹவாலா மூலமாகவும், பரிமாற்றம் செய்யப்படும்.

#நத்தம்விஸ்வநாதன்
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதலாக ஒரு மின் உற்பத்தித் திட்டம் கூட செயல்படுத்தப்பட வில்லை. ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய்க்கு 3000 வாட் மின்வாரியத்தால் தனியாரிடமிருந்து வாங்கப்பட்டது. இதில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு ஒரு யூனிட்டுக்கு கமிஷன் 20 பைசா.

மின்வாரிய சேர்மன் ஞானதேசிகன் ஐஏஎஸ்க்கு ஒரு யூனிட்டுக்கு 2 பைசா.
அதாவது ஞான தேசிகன் ஐஏஎஸ்
ஒரு நாளைய வருமானம் ₹14.40 லட்சம் நத்தம் விஸ்வநாதனுக்கு ஒரு நாளைய வருமானம் ₹1.44 கோடி. எனில், இவர்கள் இருவரும் தனித்தனியாக ஜெயலலிதாவுக்கு கட்டிய கப்பம் ஒரு நாளைக்கு எவ்வளவு இருக்கும்?

#டாஸ்மாக்_பார்கள்
மின்துறையை அடுத்து அதிமுக அடிமை அமைச்சர்களுக்கு அமுதசுரபியாக அள்ளிக் கொடுத்தது டாஸ்மாக்.
ராமசாமி உடையார் "உதவிகளுக்கு கைமாறாக" எம்ஜிஆர் 1983இல் டாஸ்மாக் மூலம் அயல்நாட்டு மது வகைகளை விற்பனை செய்ய துவக்கப்பட்டது. 2003ல் ஜெயலலிதா தனது சாராயக் கம்பெனி சரக்குகளை

விற்பனை செய்ய ஏதுவாக அதுவரை தனியார் நடத்திய ஒயின்ஷாப்புகளை இனி அரசு நடத்தும் என தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 ல் திருத்தம் செய்து அரசுடைமை ஆக்கினார்.
அரசுக்கு வந்த வருமானத்தை விட ஜெயா சசி இருவருக்கும் வந்த வருமானம் அதிகம்.
இதில் மூன்றாவதாக ஒரு நபர் வந்தார். துக்ளக் சோ. ராமசாமி

டாஸ்மாக்கோடு இணைக்கப்பட்டுள்ள பார்களில் அமர்ந்தே பெரும்பாலோனோர் குடிக்கின்றனர். பார்களில் அமர்ந்து சப்ளை செய்பவர்களிடமே ஆர்டர் செய்கிறவர்களுக்கு, சப்ளையர், டாஸ்மாக் கடையில் சரக்கை வாங்குகிறாரா அல்லது, அவர் பாரில் உள்ள சரக்கை எடுத்துத் தருகிறாரா என்பது தெரியாது…

இந்த இடத்தில் தான் அதிமுக #விஞ்ஞானமுறையில்_ஊழல் செய்தது. #நத்தம்விஸ்வநாதன் தன்னுடைய நூதனமான தந்திரத்தின் மூலமாக, சரக்கு விற்பனையாளர்களிடமிருந்து, நேரடியாக பார்களுக்கு தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் சரக்கை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். உதவி விஸ்வநாதனின் #மைத்துனர்கோபி.

உதாரணத்துக்கு எஸ்என்ஜே டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அரசுக்கு ஒரு பாட்டில் பியரை 100 ரூபாய்க்கு வழங்குகிறதென்றால் அதன் அடக்க விலை 30 ரூபாய் இருக்கும். மீதம் உள்ள 70 ரூபாயும், அரசு விதிக்கும் வரி. அரசுக் கணக்குக்கே வராமல், நேரடியாக பார்களுக்கு எஸ்என்ஜே டிஸ்டில்லரிஸ் சரக்கு வழங்கினால், .

அதாவது டாஸ்மாக் கணக்குக்கே வராமல். அரசுக்கு வர வேண்டிய ₹70 வருவாய் யாருக்குப் போகும் ? இது ஒரு பியர் பாட்டிலினுடைய கணக்கு. இது போல, லட்சக்கணக்கான பாட்டில் பியர்கள் மற்றும் இதர மதுபானங்கள் பார்களுக்கு சப்ளை செய்யப்பட்டால் கிடைக்கும் வருவாயின் பெரும்பங்கு, கோமலவள்ளிக்கே சென்றது

இப்படியெல்லாம் வசூல் செய்யும் பணத்தை ஜெயலலிதா மற்றும் சசிகலா என்ன செய்தார்கள்?
ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல்வரான பிறகு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயரில் ஏராளமான பினாமி நிறுவனங்களை தொடங்கினார்
அதில் ஒன்று ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட். .

05 செப்டம்பர் 2005ல்
இந்த நிறுவனம் தொடங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தொடக்க கால இயக்குநர்களாக யார் இருந்தார்கள் என்ற விபரம் இல்லை.
ஆனால், சசிகலா டிசம்பர் 2011ல் வெளியேற்றப்பட்ட உடனே இந்த ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தில் இயக்குநர்களாக நியமிக்கப்படுபவர்கள் இரண்டு பேர்.

ஒருவர் தன்னை தமிழகத்தின் மிகப்பெரிய நியாயவானாக சித்தரித்துக் கொண்ட ப்ரோக்கர் சோ ராமசாமி.
மிடாஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த இந்த மிடாஸ் மாமா சோ ராமசாமிதான் இந்த ஹாட்வீல்ஸ் நிறுவனத்தில் மன்னார்குடி மாபியாவின் வெளியேற்றத்துக்குப் பிறகு இயக்குநராக இருந்தார்.

மற்றொரு இயக்குநர் பூங்குன்றன். இவரது தந்தையின் பெயர் புலவர் கலியபெருமாள். சொந்த ஊர் சூரக்கோட்டை. இவருக்கு வேலை, நமது எம்ஜிஆரில் கட்டுரை எழுதுவது, ஜெயலலிதாவுக்கு அறிக்கைகள் எழுதித்தருவது ஆகியன. இந்த கலியபெருமாளை சசி ஜெயா சகோதரிகள் ஒரு நாள் திடீரென்று விரட்டி விட்டனர்.

அவரை விரட்டி விட்டு விட்டு, அவர் மகன் பூங்குன்றனை அவர் தந்தை இடத்தில் வேலைக்கு வைத்துக் கொண்டனர்.
பூங்குன்றனின் பணி, ஜெயலலிதாவுக்கு வரும் கடிதங்களை பிரித்து அவர் மேசையில் வைப்பது, செய்தித்தாள்களை அவர் பார்வைக்கு வைப்பது உள்ளிட்டன. இந்த பூங்குன்றனும், ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங்

நிறுவனத்தின் இயக்குநராம். ஜெயலலிதா தன்னை இயக்குநராக இருக்கும்படி கேட்டதும், உடனடியாக ஒப்புக்கொண்டு சாராய ஆலையான மிடாஸுக்கும், ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கும் இயக்குநராக இருக்க ஒப்புக்கொண்ட சோ ராமசாமி, நவம்பர் 2012ல், இந்நிறுவனங்களையெல்லாம் விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்

இந்த நிறுவனங்களில் மீண்டும் இயக்குநரானவர்கள் ஒருவர் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார். மற்றொருவர் கார்த்திகேயன் கலியபெருமாள்
சசிகலா சுந்தரவதனத்துக்கு மொத்தம் இரண்டு மகள்கள். ஒருவர் பிரபாவதி. மற்றொருவர் அனுராதா. இந்த அனுராதாவின் கணவர் டிடிவி.தினகரன். மற்றொரு மகளான பிரபாவதியின்

கணவர் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார். இந்த சிவக்குமார்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பவர்.
மற்றொரு இயக்குநரின் பெயர் கார்த்திக்கேயன் கலியபெருமாள். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு இரண்டு மகள்கள் ஒருவர்

ஷகீலா ஜெயராமன். மற்றொருவர் பெயர் கிருஷ்ணபிரியா ஜெயராமன். ஒருவரின் கணவர் ராஜராஜன். மற்றொருவரின் கணவர்தான் கார்த்திகேயன். இளவரசிக்கு விவேக் ஜெயராமன் என்றொரு மகன் உண்டு.
இந்த ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவன பெயரை ஜாஸ் சினிமாஸ் என திடீரென்று ஜுலை 2014ல் மாற்றுகிறார்கள் (தொடரும்)

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling