அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Feb 27, 2023, 8 tweets

#மதுரை_மீனாட்சி_அம்மன்
அன்னையின் விக்ரகம் சுயம்பு ஆகும். சில ஆலயங்களில் லிங்கம் சுயம்புவாக இருக்கும். ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரகமாக நின்றுவிட்டாள். அதனால் சுயம்பு அன்னை. இவள் பச்சை நிறத்தவள். அதனால் மீனாக்‌ஷி

அம்மன் மரகத கல்லால் ஆனது என்கின்றனர் ஆய்வாளர்கள். அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும். நம் பிரார்த்தனைகளை மறு ஒலிபரப்பு செய்து அன்னைக்கு நினைவூட்ட! அன்னை

மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணி ஆகும்.
பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள். இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரகம் உயிருடன் இருக்கும் ஒரு நளினமான பெண்ணை பார்ப்பது போல்

இருக்கும். அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும். அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும். மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க

வேண்டும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு. இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை. அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல

செல்வமும் தரும் கோவில் இது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப் படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும். வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம். சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா

சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட கோவில். தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம். சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா. இவளின் அண்ணன் மாயவன் அழகர்மலை அழகுமலையான். உலக அதிசியங்களுள் ஒன்று அன்னையின் ஆலயம். இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள்!

ஓம் சக்தி!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling