Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Mar 3, 2023, 18 tweets

#ராஜராஜேந்திரன் திமுகவின் வெற்றி குறித்து நேற்று வெளியிட்ட கட்டுரை @malarvili1998 மூலம் ட்விட்டரில் காண நேரிட்டது. அப்போதுதான் அறிந்தேன் அவர்
முகநூல்களில் மிகவும் பிரபலமான திராவிட எழுத்தாளர் என. இந்தக் கட்டுரை சீமானின் இருப்பு குறித்து அவர் வெளியிட்ட துல்லியமான கணிப்பு

#Passing_Clouds

சீமானைக் கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து பார்த்து, கேட்டு வருகிறேன்.
மக்களாட்சியின் கருஞ்சாபம் அவர்.
தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும் ?

வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக அல்லது தோற்று எதிர்கட்சியாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களுக்கானது தேர்தல்

தேர்தல் அரசியலின் சித்தாந்தம் இதுதான்.

தேர்தல் Addict கொண்டோர் சிலர் உண்டு. அவர்களுக்கு தேர்தலில் வெற்றி என்பதோ, கட்டுத்தொகை திரும்ப வரவில்லையே என்கிற வருத்தமோ துளி கூட இருக்காது. மாறாக தேர்தலில் வேட்பாளராக பங்கு கொள்வதன் மூலம் மீடியா வெளிச்சம் தன் மீது படும், தன் பெயரை

செய்திகளில் சொல்வார்கள். தான் வாங்கிய வாக்குகளை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாகப் பதியும். இதற்காகவே ஒவ்வொரு தேர்தல் அறிவிப்பிலும் குஷியாவார்கள் !

இன்னொரு கேஸ் உண்டு.

அது, தேர்தல் என்றாலே தனக்கான வரவாக மட்டுமே பார்ப்பது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலா ? திரட்சி நிதி 20 லட்சத்தை

கொண்டாடா தம்பி எனத் துண்டு விரிப்பது.

நாம்தான் வெல்வோம், மக்கள் பூரா நம்மாளுகளா மாறிப்புட்டாய்ங்க, கூடுற கூட்டத்தைப் பார், வர்ற லைக்கைப் பார், தன்னை விட மூத்தவர்களையும் தம்பி, நீ வா போ என ஒருமையில் பேசுவது, அடா புடா என சீன் போடுவது, கேட்டா அதெல்லாம் உரிமையா பேசறதுடா குண்டா மவனே

என உருட்டுவது ...

முக்கியமாக, தாம் யாருடனும் கூட்டணி வைப்பதில்லை என உருட்டுவதுதான் மகா உருட்டல் !

அதாவது இவர்கள் மட்டுமே பரிசுத்தமானவர்களாமாம். இவர்கள் கூட்டணி வைக்குமளவுக்கு பிறர் எவருக்குமே தகுதி இல்லையாம். இது பத்தினி வாழும் வீடுன்னு ஒருத்தி எழுதி வச்சாளாம், தெரு பூரா

திருதிருன்னு முழிச்சதாம்.

ஆஹஹா, என்னா போல்டா எழுதி வச்சிருக்காப்பா, அப்ப அவ யோக்கியமாகத்தான் இருப்பான்னு ஒரு சின்ன கூட்டம் நம்புச்சாம். அவர்கள்தான் நம் தம்பிகள் !

மக்களாட்சியில் கூட்டணி என்பது பல நல்ல காரியங்களுக்கும் உதவும். சான்றுக்கு ஹிட்லர் போன்ற ஆட்களை வீழ்த்த

வேண்டுமானால், எதிர் நிலைப்பாடுகள் உள்ளவரும் கூட்டணி வைத்து அவரை அகற்ற முயல்வதே நாட்டுக்கு நலம்பயக்கும் !
ஹிட்லருக்கு உதவுவது போல், சதிகாரர்களுக்கெதிராக விழும் வாக்குகளை சிதற அடித்தால் ? கூட்டணி வைப்பது எங்கள் கலாச்சாரம் அல்ல என்ற பெயரில் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் சீமான்

இன்றையத் தேர்தல் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி. எங்களுக்கு முன் தோன்றிய, அதிலும் எதிர்கட்சியாக இருந்த ஒரு கட்சியே, எங்களை விட மிகக் கீழே இருக்கிறது என்பார் சீமான்.

ஆனால், பதிவான வாக்குகளில் 6 - 7% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது நா த க. அதாவது

முதலிடம் பெற்ற கட்சி 65% இரண்டாமிடம் பெற்ற கட்சி 25% இவர்கள் வாங்கியிருப்பது 7% ற்குள். இதுதான் அந்த மூன்றாம் இடம் !

ஒருவேளை அதிமுக இன்று 10000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருந்தால் கூட, இவர்களின் இந்த ஏழு விழுக்காட்டால் ஏதோ விளைந்தது எனப் பெருமை படலாம்.

2009 முதல் ஈழம், 2 G யில் பிறர் சொன்ன அவதூறுகளை, அப்படியே வழிமொழிந்து ஏற்ற இறக்கத்துடன் பேசி திமுகவின் நற்பெயரை முற்றிலும் பாழ்படுத்த முயன்றவர்களில் தலையானவர் சீமான். அவர் தேர்தலில் போட்டியிட ஆரம்பித்தவுடன் 3% வாக்குகளை பெற்றார். அது 5% ஆனது. சமயங்களில் 7 - 10% வரை,

தொகுதிக்கேற்ப மாறியது. ஆனால் சராசரி அந்த 5% மட்டுமே !

இந்தச் சராசரியால், அதாவது தமிழ்நாடு முழுக்க விரவியிருக்கும் இந்த 20 - 30 இலட்சம் வாக்குகளால், என்ன விளையும் ?

எதுவுமே ஆகாது.

சீமான் வீங்குவார். சீமானின் கார் வீங்கும். வங்கி இருப்பு வீங்கும். சீமானைப் போல் எடக்கு

மடக்காகப் பேசுவதால் வசமாகச் சிக்கிய தம்பிகளின் மண்டை வீங்கும். வேறு எந்த மாற்றமுமே நடக்காது !

13 வருடங்களில் இவர் வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டிருந்தால், இன்று 50 - 60 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும். 2026 ன் ஆட்சி இவர்களுடையது என மக்கள் பேச வேண்டும் !

சான்றுக்கு, திமுக 1957 ல் 12 MLA, 1962 ல் 50 MLAக்களுடன் எதிர்கட்சி, 1967 ல் ஆளுங்கட்சி. இதை நீங்கள் MGR, ஜெயலலிதா வளர்ந்த வரலாற்றோடும் ஒப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால், இவருக்குத்தான் அத்தகைய எண்ணமே இல்லையே ?

ஒரு மேகக்குவியலால், பலத்த மழை பொழிந்து காடே செழிக்கப் போகிறது பார்

என்றுதான் இவருக்கு ஆதரவாளர் கூட்டம் உருவாகிறது. ஆனால் சிறு துளிகளைப் பெய்துவிட்டு கலைந்து விடுகின்றன அந்த பொய் மேகங்கள். மீண்டும் மேகம் கூடுகிறது, கலைகிறது. காரணம் ?
திமுகவை மட்டும் பலமாக எதிர்த்துக் குரைக்க வேண்டும் என்று வளர்க்கப்படும் ஒரு வேட்டை நாயின் வேலைதான் இவருடையது.

அப்படித்தான் சில பிரபலக் கைகள் இவரை ஆட்டுவிக்கின்றன !

சமூக வலைத்தளங்களில் நடத்தப்படும் தேர்தல்கள், கணிப்புகளில் ஏமாற்று வேலை செய்து தாங்கள் மிக பிரபல்யம் என இவர்கள் நிறுவ முனைவது அத்தனையும் யூரோ, டாலர், பவுண்ட்களுக்குத்தான். இத்தனை மாபெரும் டம்மி பீஸை, ஒவ்வொரு தேர்தலிலும்

எவ்வளவு பிரம்மாண்டமாக ஒரு கூட்டம் கட்டமைக்கிறது ?

இதை அறிந்துக் கொண்ட அடுத்த நொடி, அந்த மேகக் கூட்டம் சிதறிவிடுகிறது. அதனால்தான் அந்த fixed average 5%

சமூக வலைத்தளங்களில் அவருடைய ஆட்கள் பலர் தொடர்ந்து இயங்குவதால் மட்டுமே, இத்தகைய விளக்கங்களைச் சொல்ல வேண்டி வருகிறது.

இளைஞர்கள்தான் இவர்கள் வலையில் எளிதாகச் சிக்குகிறார்கள்.
பிள்ளைகள பிடிக்கும் பூச்சாண்டி வருவான், வெளிய போகாத என்று குழந்தைகளை முன்பு எச்சரிப்பார்கள். சீமான் பேச்சைக் கேக்காதடா, மூளைய கலக்கிவிட்டுப் போவான் என்கிற புது எச்சரிக்கையைத் தருவது பெற்றோர்களுக்கு இன்று அவசியமாகிறது !!!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling