Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Mar 4, 2023, 19 tweets

#நிழல்_யுத்தம்
பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பீகாரில் பல போலி வீடியோக்களை பரப்பி இருக்கிறார்கள்.

இங்கு அவர்கள் தமிழர்களை தாக்குவதாக தொடர்ந்து வீடியோக்களை பரப்புகிறார்கள் இதெல்லாம் தற்செயலாக நடப்பதா?

ஒரு கற்பனையாக 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சில

வட மாநில தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு தமிழ் பெண்ணை சீண்டுவது போல ஒரு வீடியோ வருகிறது என்று வைத்துக் கொள்வோம் அது அந்தத் தேர்தலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரேசில் நடைபெற்ற தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு

ஒரு வீடியோ அங்கு பரப்பப்பட்டது இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால் சர்ச்சுகளை பார்களாக மாற்றி விடுவார்கள் என்றும் லெஸ்பியன் ஹோமோ ச***** எல்லாம் சர்ச்சில் நடக்கும் என ஒரு வீடியோ பரப்பப்பட்டது 20 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசில் சில நாட்களில் அந்த வீடியோ 10 கோடி மக்களை சென்றடைந்திருந்தது

இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வீடியோ இது மாதிரியான வீடியோக்கள் பரப்புவதற்காக உலக அளவில் பல நிறுவனங்கள் இயங்குகின்றன அவை செயல்படும் விதம் செயல்பட்ட நாடுகள் பங்கெடுத்த தேர்தல் வேலைகள் குறித்து கார்டியன் இதழ் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் செய்திருந்தது
2012 ம் ஆண்டு பெங்களூரில் வடகிழக்கு மாநில

தொழிலாளர்களை குறிவைத்து ஒரு வீடியோ வாட்ஸப் எம் எம் எஸ் மூலம் பரப்பப்பட்டது ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறாவிட்டால் என்கிற ரீதியிலான அந்த மிரட்டல் வீடியோக்கள் பல தளங்களிலும் பரப்பப்பட்டு திடீரென்று ஒரு மாலை பல்லாயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பெங்களூர்

ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தது சிலருக்கு நினைவில் இருக்கலாம் அவர்களை வெளியேற்றுவதற்காக சிறப்பு ரயில்கள் எல்லாம் இயக்கப்பட்டது அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தையை திருட வருகிறார்கள் என்று சமூக ஊடகங்களின் வழியாக பல தளங்களிலும்

வீடியோக்கள் பரப்பப்பட்டது. கவுகாத்தியிலிருந்து ஒரு இடத்துக்கு சுற்றுலாவுக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
இது போன்ற கும்பல் மனநிலையை
புரிந்து கொண்டு அதை எப்படி இயக்குவது என்பதில் கைதேர்ந்த நிறுவனங்கள் இன்று உலக அளவில் இயங்குகின்றனஇவர்கள்

வலதுசாரிகளால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் இது போன்ற சம்பவங்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது..
அந்தந்த வட்டாரங்களில் உள்ள மக்களின் கலாச்சார தன்மைகளை பலகீனங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போலான வீடியோக்களை டெம்ப்லேட் போல உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்

பிரேசிலில் கத்தோலிக்க மக்கள் என்றால் சர்ச்சுகள் குறித்து வீடியோக்களை இந்துக்கள என்றால் கோவில் குறித்து உருவாக்குவார்கள் தமிழர்கள் என்றால் வடமாநில மக்கள் இந்த சாதி என்றால் அந்த சாதி இது சிறுக சிறுக வளர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் அது பற்றிக்கொள்ளும்.

சமூக ஊடக தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் காலகட்டத்தில் அதை பயன்படுத்தும் மனிதன் பல நூற்றாண்டு பழமைத்தனத்தோடு இருக்கிறான். அவன் செல்போனுக்குள் வந்து கொட்டப்படும் தகவல்களை நிதானமாக தர்க்கபூர்வமாக ஆராய்ந்து சிந்திப்பதற்கான வாய்ப்பு முதலாளித்துவ சமூகம் அவனுக்கு வழங்குவதே இல்லை

எப்போதுமே பதட்டத்தோடு கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டிய தேவையோடு இன்னும் அதிக நேரம் உழைக்க வேண்டிய நெருக்கடியோடு வாழும் மக்கள் இது போன்ற பரப்பப்படும் வீடியோக்களை உண்மை தன்மை குறித்து நிதானமாக ஆராய்வதற்கு வாய்ப்பற்றவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்

அப்போ இப்படி ஒரு பெரும் சமூக

பதட்டத்தை கலவரத்தை கும்பல் மனநிலையை யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கி விட முடியும் என்ற காலகட்டத்தில் இது போன்ற விஷயங்கள் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டால் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மாற்றத்தை விரும்பும் ஜனநாயக

அமைப்புகள் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.
மக்களிடம் மாற்றத்தை விரும்பும் சிறிய கட்சிகளால் மாநில கட்சிகளால் கூட இதுபோன்ற கும்பல் மனநலையை உருவாக்கும் சர்வதேச நிறுவனங்களை கைப்பற்ற முடியாது கண்டிப்பாக இதனை பாரதிய ஜனதா போன்ற மிகப்பெரிய வலதுசாரி கட்சிகள் தான் பயன்படுத்த போகின்றன

என்றால் அவர்களுக்கு பின்னால் தான் அதானி அம்பானி போன்ற குரோனி கேப்பிட்டலிஸ்ட்கள் இருக்கிறார்கள் அவர்களுடைய பரஸ்பர பலன்களும் இருக்கின்றன.
அப்போ இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து சிறந்த மனதோடு இந்த கட்சிகள் இயக்கங்கள் விவாதிக்க வேண்டும்
இது யானை செல்லும் பாதை என்று சில சாலைகளில்

ஏப்பொதும் எச்சரிக்கை பலகை இருப்பது போல நமக்கு இது போன்ற வீடியோக்கள் குறித்து எச்சரிப்பதற்கு எப்போதும் எச்சரித்துக் கொண்டே இருப்பதற்கு கட்சிகள் ஜனநாயக அமைப்புகள் தேவை
எல்லா மாநிலங்களிலும் உள்ள ஜனநாயக அமைப்புகள் மாநிலக் கட்சிகள் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தி மிகப்

பெரிய அளவில் இந்த வதந்தி வீடியோக்கள் வரப்போவது குறித்து கும்பல் மனநிலை குறித்து மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
ஆளும் திமுக அரசும் நமக்கிருக்கும் கலாச்சார பலகீனங்களை இந்த போலி வீடியோக்கள் பயன்படுத்திக் கொள்ளும் விதம் குறித்து எச்சரிக்கையை அரசு செய்ய வேண்டும்

ஏற்கனவே நம்மிடம் சில வடிவங்கள் இருக்கின்றது இப்போதும் மதுரை மாட்டுத்தாவணி போன்ற பெரிய நகர பேருந்து நிலையங்களில் திருடர்கள் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு செய்து கொண்டே இருப்பார்கள் பண்டிகை காலங்களில் பாண்டி பஜார் டி நகர் போன்ற ஏரியாக்களில் வாட்ச் டவர் அமைத்து காவல்துறை எச்சரிக்கை

செய்து கொண்டே இருப்பார்கள்.
திருடன் எப்போ வருவான் என்று தெரியாது எப்படி இருப்பான் என்று தெரியாது ஆனால் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்க வேண்டும் அவன் உங்களைப் போலவே இருப்பான் உங்களில் ஒருவனாகவே இருப்பான் என்பதை எச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும் அதுதான் வலதுசாரிகளால்

பயன்படுத்திக் கொள்ளும் இந்த கும்பல் மனநிலை சமூக ஊடக தொழில்நுட்பத்திற்கு மக்கள் ஏமாறாமல் தவிர்க்கும் வழி..

மூலக் கட்டுரை : Anbe Selva

News Photo : @indhumathi1977

Fake Video Check : @zoo_bear

#நிழல்_யுத்தம் தலைப்பு :
@VIS1976AL

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling