அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Mar 6, 2023, 9 tweets

#ஶ்ரீமகாலட்சுமி_தாயாரின்_பன்னிரு_திருநாமங்கள்
1.  #ஶ்ரீரங்கநாச்சியார் - #ஶ்ரீரங்கம்
பன்னிரு திருநாமங்களில் முதல் திருநாமம்.
ஜீவர்களுக்கும் பரமனுக்கும் இடையே ஒரு பாலமாக பிராட்டி செய்யும் இவ்வுதவியை விளக்குவதே ஸ்ரீ: என்னும் திருநாமம். வடமொழியில் இப்பெயருக்கு ஆறு பொருள்கள் உண்டு.

#ஶ்ரீயதே - ஜீவர்கள் அனைவராலும் தஞ்சமாக பற்றப்படுகிறாள்.

#ஸ்ரயதே - தான் நாராயணனை சரணமாகப் பற்றுகிறாள்.

#ஸ்ருணோதி - தன்னை அண்டிய ஜீவர்கள் தங்கள் குறைகளையும் பாபங்களையும் விண்ணப்பிக்கும் போது காது கொடுத்துக் கேட்கிறாள்.

#ஸ்ராவயதி - ஜீவர்களுக்காகப் பரிந்து பேசி அவர்களது வேண்டுகோளை

பகவான் காது கொடுத்துக் கேட்கும் படி செய்கிறாள்.

#ஸ்ருணாதி - பெருமானை அடையத் தடங்கலாக இருக்கும் பக்தர்களின் பாவங்களை தன் அருளால் நீக்குகிறாள்.

#ஶ்ரீணாதி - ஜீவர்களைப் பெருமானோடு சேர்த்து வைக்கிறாள்.

2. #அம்ருதோத்பவா - #ஶ்ரீஅம்ருதவல்லி தாயார் - #சோளிங்கர்
இரண்டாவது திருநாமம்.

அமுதத்தோடு பாற்கடலில் தோன்றியவள் என்பது பொருள்.

3. #கமலா - #ஶ்ரீகமலவல்லி தாயார் - #உறையூர். ஸ்ரீ மகாலட்சுமியின் மூன்றாவது திருநாமம். க என்றால் பரம்பொருள். ம என்றால் ஜீவன். லா என்றால் கொடுத்து வாங்குதல். ஜீவனை பரமாத்மாவுக்கு கொடுத்து பரமனை ஜீவனுக்கு வாங்கிக் கொடுப்பதால் கமலா

என்று அவளுக்கு திருநாமம்.

4. #சந்த்ரசோபனா #ஶ்ரீபரிமளரங்கநாயகி தாயார் - #திருஇந்தளூர்
சந்த்ரஷோபனா என்பது ஸ்ரீமகாலட்சுமியின் நான்காவது திருநாமம். நிலவை மிஞ்சும் குளிர்ந்த ஒளியும், பேரெழில் கொஞ்சும் இன்முகமும் கொண்டவள் அல்லது நிலவுக்கே ஒளி ஊட்டுபவள் என்று பொருள்.

5. #விஷ்ணுபத்னீ

- #ஶ்ரீவஞ்சுளவல்லி தாயார் - #திருநறையூர்
ஸ்ரீ மகாலட்சுமி ஐந்தாவது திருநாமம் 'விஷ்ணு பத்னீ 'என்பது. அதாவது எங்கும் நிறைந்த இறைவனது அறத்திற்கு உறுதுணையானவள் என்பது இதன் பொருள்.

6. #வைஷ்ணவீ - #ஶ்ரீயதுகிரிநாச்சியார் - #மேல்கோட்டை
ஸ்ரீ மகாலட்சுமியின் ஆறாவது திருநாமம் வைஷ்ணவி, அதாவது

விஷ்ணுவை பின்தொடர்பவள் என்பது பொருள்.

7. #வராரோஹா - #ஶ்ரீவரமங்கை தாயார் - #வானமாமலை
பிராட்டியின் ஏழாவது திருநாமம் "வராரோஹா". இதற்கு உயர்ந்த இடத்தில் ஏறி அமர்ந்து அருள்பவள், என்று பொருள். பாற்கடலை கடைந்தபோது பெருமாளின் திருமார்பில் ஏறி அமர்ந்தாள் பிராட்டி!.

8. #ஹரிவல்லபா -

#ஶ்ரீஆண்டாள் -
#ஶ்ரீவில்லிபுத்தூர்
பெருமானின் பேரன்புக்கு இலக்கானவள்.

9. #சார்ங்கிணீ - #ஶ்ரீகோமளவல்லி தாயார் - #திருக்குடந்தை
ஸ்ரீமகாலஷ்மி ஒன்பதாவது திருநாமம் ஸார்ங்கிணீ அதாவது வில் வீரனின் வீர பத்னி.

10. #தேவதேவிகா - #ஸ்ரீபெருந்தேவி தாயார் - #காஞ்சிபுரம்

தேவனான ஸ்ரீராமனின்

பெருந்தேவியான சீதை

11. #மஹாலக்ஷ்மி - #ஸ்ரீபத்மாவதி #திருப்பதி
எல்லா நன்மைகளையும் கடாக்ஷிப்பவள்.

12. #லோகஸுந்தரீ - #ஸ்ரீசௌந்தரவல்லி தாயார் - #திருநாகை

உயர் பண்புகள் எனும் தன் அழகால் பெருமானுக்கு பெருமை சேர்த்து உலகினரை உய்விப்பவள்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling