Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Mar 6, 2023, 22 tweets

#போலிதகவல்_கூலிப்படை 3
பீகார் சம்பவத்தை தொடர்ந்து ஒரு வழியாக சமூக ஊடக போலி தகவல் மெர்சனரி (கூலிப்படைகள்) குறித்த பேச்சு மையத்திற்கு வரத் தொடங்கி இருக்கிறது. வலதுசாரிகள் இந்த விஷயத்தில் எவ்வளவு அட்வான்ஸ்ட்டாக இருக்கிறார்கள் என்பதற்கு இப்போது அமெரிக்க நிறுவனம் வெளியிட்டிருக்கும்

40,000 டிவிட்டர் அக்கவுண்ட் பற்றிய தகவல்களே சாட்சி..

சமூக ஊடகங்களை பல நாடுகளில் தேர்தல்களுக்கும் வலதுசாரிகளின் நலன்களுக்கும் பயன்படுத்த சர்வதேச அளவிலான நிறுவனங்கள் வந்துவிட்டது குறித்து கார்டியன் இதழ் செய்திருந்த stink ஆபரேஷன் குறித்து ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருந்தோம்.

சமூக ஊடகங்களை கையாளும் நம்முடைய பண்பாட்டு பலவீனங்களை வைத்து போலியான வீடியோக்களை உருவாக்கி நம்மை எப்படி வலதுசாரிகளின் நலன்களுக்கு அணிதிரட்டுவார்கள் என்பது குறித்தும் சிறுக சிறுக வட மாநில தொழிலாளர் பற்றிய செய்திகளை முதன்மைப்படுத்துவதை வைத்து இன மோதல் வீடியோக்களை உருவாக்குவார்கள்

இப்போது அமெரிக்கா வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பட்டியலுக்கு வருவோம்

Taippi என்ற அமெரிக்க ஜர்ணலிஸ்ட்களிண் இந்த நிறுவனம் பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு பிஜேபியின் இந்து தேசிய அஜண்டாவிற்காக ஒரு மெர்சனரி போல அமெரிக்காவில் வேலை செய்யும் 40 ஆயிரம் ட்விட்டர் அக்கவுண்டுகள் பட்டியலை

கண்டுபிடித்து கொடுத்து இருக்கிறார்கள். இவர்கள் அன்ஆதண்டிக்கான வகையில் இந்துத்துவ அரசியலுக்காக போலி செய்திகளை ட்விட்டரில் பரப்பி வந்தவர்கள். இவர்கள் செய்த ஆய்வு பற்றி விரிவாக இந்து நாளிதழில் செய்தி வந்திருக்கிறது.

இந்த 40,000 ட்விட்டர் அக்கவுண்ட்களின் சிறப்பு என்ன தெரியுமா

இவை எதுவுமே போலி அக்கவுண்டுகள் கிடையாது இவர்கள் யாருமே இந்தியர்கள் கிடையாது அனைவரும் அமெரிக்காவில் குடியேறியவர்கள். பல பேர் இந்தியாவில் காலடி கூட வைத்தது கிடையாது என்கிறது இந்த ஆய்வு. பலர் இந்திய அரசியலைப் எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர்கள் என்றும் இந்த ஆய்வு சொல்கிறது.

அப்படி என்றால் இந்திய அரசியலை பற்றி தெரியாமல் இந்திய குடியுரிமை இல்லாமல் இந்தியாவைப் பற்றிய அரசியல் அறிவே இல்லாமல் பிஜேபியின் இந்துத்துவ தேசிய அரசியலுக்காக சமூக ஊடகத்தில் ஒரு மெர்சனரி போல இந்த 40 ஆயிரம் பேர் செயல்படுகிறார்கள் என்று அர்த்தம். கவனியுங்கள் இது ட்விட்டரில் மட்டும்

செயல்படும் கணக்கு, பேஸ்புக் இன்ஸ்டா youtube இவை எல்லாம் இந்தக் கணக்கில் வரவில்லை. அவை தனி.

அடுத்து இது அமெரிக்காவில் மட்டும் உள்ள ட்விட்டர் மிஷனரி கணக்கு, அமெரிக்காவில் மட்டுமே 40 ஆயிரம் பேர் என்றால் ஐரோப்பாவில் எத்தனை ஆயிரம் பேர் இந்த டிவிட்டர் மெர்சனரி யில் இருப்பார்கள்

அப்படி என்றால் இந்தியாவில் எத்தனை லட்சம் பேர் இந்த பாஜகவின் இந்துத்துவ மிஷனரியில் இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?

இந்த மெர்சனரி மாடலை நீங்கள் அப்படியே இன்றைக்கு உக்ரைன் போருக்கு பொருத்திப் பார்க்கலாம். ரஷ்யாவிற்கு எதிரான உக்கரேனில் பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ

மெர்சனரிகள் நேட்டோவிற்காக போரிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கும் உக்ரைனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இன்றைக்கு வரைக்கும் உக்கரின் போரை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள்தான் ஐரோப்பாவில் பல இடங்களிலும் வைத்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

அதுபோல ஒரு மாபெரும் மெர்சனரி ஒர்க்கை பாஜகவின் இந்துத்துவ தேசிய அரசியலுக்காக இந்தியாவிற்கு வெளியே இவ்வளவு பெரிய கட்டமைப்பில் ஏற்கனவே செய்து முடித்து இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு தூரம் இந்த தகவல் யுத்தத்தில் முன்னோக்கி திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை

இங்கு உள்ள ஜனநாயக கட்சிகள் இயக்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் எப்போதும் சமூக வலைதள கட்டமைப்பை உலகளாவிய சர்வதேச அளவில் கட்டி முடித்து விட்டார்கள். நினைத்த மாத்திரத்தில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் கோடி கணக்கான மக்களை தங்களின் இந்துத்துவ அரசியலுக்காக அணி திரட்ட அவர்கள்

ஒரு சமூக ஊடக ராணுவத்தையே கட்டி முடித்து வைத்திருக்கிறார்கள்.

இந்த பீகார் வீடியோ விஷயத்தில் கூட பாருங்கள் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் அட்டூழியங்கள் என்கிற நரேஷனில் சிறுக சிறுக டெம்ப்லேட் போல செய்திகள் பரவிக் கொண்டே இருந்தது. அதேசமயம் தேசிய அரசியலில்

தங்களுக்கு எதிரான மிக முக்கியமான நகர்வாக பீகார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த மிகப்பெரிய கட்சிகளின் அடுத்த தலைமுறை தலைவர்கள் ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஸ்டாலின் நடத்திய பொது கூட்டத்திற்கு வருகை தருகிறார்கள்.

பீகாரின் தேஜஸ்வ யாதவ் இந்துத்துவ அரசியலுக்கு எதிரான மிக முக்கியமான அடையாளமாக

பார்க்கப்படுகிறார். இன்றைக்கு பீகாரின் ஆளும் கட்சியாகவும் இருக்கிறார் உடனே பீகார் முழுவதும் தமிழர்கள் இன வெறியர்கள் போல பிஜேபியின் ட்விட்டர் அக்கவுண்ட்களில் இருந்து வீடியோக்கள் தீ போல பரவுகிறது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இருக்கும் youtube சேனல்களின் எண்ணிக்கையும் அவர்களின்

பார்வையாளர்கள் எண்ணிக்கையும் மலைப்பை தரும்.
இந்து நாளிதழ் கட்டுரை குறிப்பிடுவது போல அமெரிக்க ட்விட்டர் கணக்கு தொடங்கி உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்கள் வரைக்கும் கால செயல்பாட்டாளர்களோடு ஒருங்கிணைத்து கனக்கச்சிதமாக ஒரு கட்டமைப்பை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.
தலைவர்களும் ட்விட்டரில்

இருக்கிறார்கள் ஆனால் ட்விட்டரில் மட்டும் தான் இருக்கிறார்கள்.
பல கோடி மக்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை 300 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது, கோதுமை விலை சமையல் எண்ணெய் விலை கொரோனா காலத்தில் மட்டும் 40 சதவீதம் உயர்ந்திருக்கிறது, இந்த தகவலை சீதாராம் எச்சரி தன்னுடைய twitter

பக்கத்தில் பகிர்ந்து விடுவார். கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் எரிபொருள் வரியாக 26 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை பா சிதம்பரம் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டு விட்டு சென்று விடுகிறார், அவர் குறைந்த பட்சம் சிவகங்கையில் உள்ள மக்களிடமும் காரைக்குடியில் உள்ள

மக்களிடமோ பொதுக்கூட்டம் போட்டு இந்த தகவல்களை சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்யவே மாட்டார்..

மக்கள் ரொம்ப கஷ்டப்பட்டார்கள் என்றால் அடுத்த தேர்தலில் ஓட்டை மாற்றி நமக்கு அளித்து விடப் போகிறார்கள் என்பதை தாண்டி எந்த யுக்தியும் இந்த தலைவர்களிடமோ இவர்களின் கட்சிகளிடமோ இல்லை.

சமூக வலைதள மெர்சனரி கட்டமைப்பு குறித்து கூட அதற்கு எதிரான செயல்முறை குறித்து கூட திறந்த மனதோடு தங்களுக்குள்ளும் மக்களோடும் எந்த ஜனநாயக கட்சிகளும் விவாதிக்கவில்லை.

உண்மையில் இந்த தகவல் யுத்தத்தில் நாம் மிகப்பெரிய அளவில் பின்தங்கி இருக்கிறோம் நம்மை ஒருங்கிணைப்பதற்கு வழி

நடத்துவதற்கு ஒரு வலிமையான கட்சி கூட்டமைப்பு எதுவும் இங்கு கிடையாது.

ஆனால் இவர்களை வீழ்த்த முடியுமா என்றால் வீழ்த்த முடியும் அதற்கு சிறந்த மனதுடன் அனைவரையும் அரவணைத்து அவர்களின் செயல் திட்டங்களை காது கொடுத்து கேட்டு ஒருங்கிணைக்கும் பண்பு கொண்ட கட்சியோ தலைமையோ தேவையாக இருக்கிறது..

இந்த நீண்ட கட்டுரையின் இரண்டாம் பகுதி..

இதனையும் படித்துப் பரப்புங்கள்..

நெருங்கும் அபாயத்தை உணருங்கள்

@vasantalic
@DrJayanThiyagu
@BaskerSerode
@pdhana
@Saimanrajs
@Seeniraj0158
@Timepassna
@thenisiraj

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling