#போலிதகவல்_கூலிப்படை 2
21 ம் நூற்றாண்டு அறியாமையின் நூற்றாண்டு. ஒரு பக்கம் மனிதகுலம் இதுவரை சந்தித்திராத தொழில்நுட்ப வளர்ச்சி. இன்னொரு பக்கம் பல நூறு ஆண்டு பழமைத்தனங்களோடு மனிதர்கள். அவர்கள் கைகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய அதிஉயர் சாதனம் வந்துவிடுகிறது, இந்த அதி உயர்
சாதனங்களை கையாள்வது குறித்து அதில் வரும் தகவல்களின் நிதானமாக நுங்குவதற்கான நேரமும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்பட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் எப்போதுமே ஒருவிதப் பதட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் நின்று நிதானமாக தர்க பூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும் நிலை இல்லை.
திடீரென்று சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் செய்திகள் எந்த நாட்டில் இருந்து எந்த நிறுவனத்தால் உருவாக்கப்படுகின்றன தவறான தகவலோடு மக்களின் பண்பாட்டு உணர்வை தூண்டி அந்த நாட்டின் தேர்தல் முடிவுகளையே மாற்றக்கூடிய வலிமையான இந்த வீடியோக்களை செய்திகளை உருவாக்குபவர்கள் யார்?
கார்டியன் இதழ் அப்படி ஒரு இஸ்ரேலிய நிறுவனத்தை அணுகி ஆப்பிரிக்காவிலிருந்து அந்த நாட்டுத் தேர்தலை தாமதப்படுத்துவதற்காக வேலை செய்ய வேண்டும் என்று கேட்பது போல நடித்து ஆறு மாத காலமாக பேசி அந்த நிறுவனம் செயல்படும் விதம் அவர்கள் என்னென்ன நாடுகள் எல்லாம் வேலை செய்திருக்கிறார்கள் என்பது
போன்ற விஷயங்களை ஒரு ஸ்டில் ஆபரேஷனாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது
2022 ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடந்த தேர்தலுக்கு முன்பு இடதுசாரி கட்சி முன்னணியில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ பரப்பப்படுகிறது.
இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால்
சர்ச்சுகளை மூடி விடுவார்கள், லெஸ்பியன் ஹோமோசெக்ஸ் வரை கொண்டு வந்து விடுவார்கள் ரீதியில் ஆன வீடியோ அது. கடுமையான கத்தோலிக்க மதப் பற்றாளர்களான பிரேசில் மக்களுக்குமிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி,தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கிறது. வலதுசாரி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.
20 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசில் நாட்டில் இந்த வலதுசாரிகளின் ஊடகங்கள் பரப்பிய வீடியோக்கள் தேர்தலுக்கு முன் சில நாட்களில் மட்டும் 10 கோடி பார்வையாளர்களை கடந்து அது என்றால் இது மாதிரியான செய்தி நிறுவனங்களின் வீச்சை கற்பனை செய்து பாருங்கள்..
இந்த செல்போனும் வாட்ஸப்பும் youtube
யும் கத்தோலிக்க மத நம்பிக்கை கொண்ட மக்களின் கைகளில் கிடைக்கும் போது சர்ச்சை மூடிருவாங்கன்னு சொன்ன உடனே அவர்கள் பதட்டம் ஆகி தேர்தல் முடிவை மாற்றி விடுகிறார்கள்
இதே மாடலை இங்கே உள்ள பெருமாள் கோவிலுக்கு பொருத்தி பாருங்கள், பள்ளிவாசல் முன்பு பன்றிக்கறியை வீசும் வீடியோவை பரப்பினால்
என்ன ஆகும், இந்துக்களுக்கு துரோகம் முஸ்லிமுக்கு துரோகம் இந்த ஜாதிக்கு துரோகம் அந்த மதத்திற்கு துரோகம் என்று இதுபோல பரப்பப்படும் வீடியோக்களுக்கு எந்த அடிப்படை இருக்கும் என்பது குறித்த எந்த சிந்தனையும் இந்த வீடியோக்களை பார்க்கும் பகிரும் மக்களுக்கு தோன்றப் போவதில்லை.
பதட்டத்தோடும் அறியாமையிடனுமே அதை பரப்பி இந்த மூலதனத்துக்கு பலியாகி விடுவார்கள்.
பல நூற்றாண்டு காலமாக இந்த ஆண்டை அடிமை மனநிலையை ஏற்றுக் கொண்டு வாழ பழகிவிட்ட இந்திய சூழலில் ஒரே ஜாதியில் அவர்கள் மட்டும் எப்படி பணக்காரர்கள் நாம் எப்படி ஏழை என்றோ அல்லது ஒரே மாதத்தில் அவர்கள்
மட்டும் எப்படி உள்ளே நாம் ஏன் வெளியில் என்றோ சிந்திக்கும் மனநிலையே இல்லாமல் அதை ஊழ்வினையாக மறுபிறப்பின் விளைவாக நம்பக்கூடிய ஏற்றுக்கொள்ளக்கூடிய சமூகமாகவே இங்கு நாம் இருக்கிறோம்.
இந்த சமூக அறியாமையை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
நமக்குள்ளாக இருக்கும் பண்பாட்டுப்
பலகீனங்கள் , காந்தி மீது நமக்கு இருக்கும் பொது அன்பின் உள்ளாக கொண்டு வந்து அண்ணா ஹசாரேவை நிறுத்தி பெரும் பிரச்சாரம் செய்கிறார்கள் காந்தி என்று சொன்னதால் கேள்வி கேட்காமல் நம் மனமும் ஏற்றுக் கொள்கிறது இங்கே கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஊழல் கருத்துக்களை அவரும் பேசுவதால் நம் ஆளாகவே
மாறிவிடுகிறார் அவர் எவ்வளவு ஆபத்தான ஒரு ஆட்சியை ஏற்படுத்தி விட்டு இந்த எட்டு ஆண்டுகளாக உறங்குகிறார் என்று பாருங்கள் நம் அறியாமையின் விலை என்னவென்று புரியும்.
திடீரென்று ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழல் என்பது இந்தியா முழுவதும் பரப்பப்படுகிறது அதற்கு திமுக தான் காரணம் என்பதும்
இந்தியா முழுவதும் பரப்பப்படுகிறது 2ஜி ஊழலை அறிந்த அளவுக்கு அந்த வழக்கின் இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு விவரங்கள் பட்டியல் தெரியாது. அறிந்து கொள்ளும் நிதானமும் மக்களுக்கு வாய்க்காது.
ஒரு லட்சத்து 75 ஆயிரம் என்ற எண்ணை நம் எல்லோர் மனதுக்குள்ளும் ஒட்டி வைத்து விட அவர்களால் முடியும்
அதே சமயம் சித்ரா ராமகிருஷ்ணன் போன்ற சுமார் 350 லட்சம் கோடி புழங்கக்கூடிய பங்கு சந்தையில் நடைபெற்ற ஊழல் குறித்த கைது செய்யப்பட்ட அந்த நபரின் புகைப்படமும் கூட நம் பார்வைக்கு வந்து விடாது. கனிமொழி கைது செய்யப்பட்ட புகைப்படம் இருக்கிறது சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட புகைப்படம்
எங்கே என்ற தர்க்கபூர்வமான கேள்விகளுக்குள் நாம் செல்லும் வாய்ப்பே நமக்கு வாய்க்காது.
இந்த அறியாமையை பண்பாட்டு பலகீனங்களை ஊழல் பற்றிய முழுமையற்ற கருத்துக்களை மத இன ஜாதி உணர்வுகளை மூலதனமாகக் கொண்டுதான் பல நாடுகளில் தேர்தல் முடிவுகளை ஆட்சியாளர்களையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது திடீரென்று வடக்கர்கள் குறித்தான செய்திகள் நமக்கு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது ஒரு பேச்சுக்கு திடீரென்று தேர்தல் சமயத்தில் ஐந்து வடக்கர்கள் ஒரு தமிழ் பெண்ணை இழுப்பது போன்ற வீடியோ பரவுகிறது எனில் அது தேர்தல் சமயத்தில் பரவினால் எம்மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் ?
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.