தசாவதாரங்களில் மிக உயர்ந்தது #ஶ்ரீநரசிம்மர் அவதாரம். பகவான் எதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்றால், சர்வ வஸ்துக்களின் உள்ளேயும் அவன் வியாபித்து இருப்பதை நாம் உணர்வதற்காகவே. விஷ்ணு புராணத்தில் ஒரு சுலோகத்தில் ஹே விஷ்ணு நாராயணா நீ எப்போதும் எங்கும் பரவியிருக்கிறாய். அது தர்ம
சூக்ஷ்மமான விஷயம். ஆனால் அப்படி நீ பரவியிருப்பதை எல்லோரும் உணர வேண்டும் என்பதால் அல்லவா நரசிம்ம அவதாரம் பண்ணினாய் என்று வருகிறது. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று பொருள். காயத்ரியின் மத்தியிலே ஒளிப்பிழம்பாய் இருப்பவன் பகவான் மகா விஷ்ணு. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஸ்வம், விஷ்ணுர்
என்று சொல்லிக் கொண்டே வந்தோமானால் நரசிம்மனிடத்திலே தான் போய் முடியும். சகஸ்ரநாமத்தில் முதன் முதலில் சொல்லப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம் தான்.
சகஸ்ரநாமத்தின் நடுவிலும் நரசிம்மனே பேசப்படுகிறான். நரசிம்மன் இருக்கிற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயரும் நின்று கொண்டு இருக்கின்றான். நரசிம்மனை
பார்த்து ஸ்ரீ நரசிம்ஹாய நம என்று ஒரு புஷ்பத்தை போட்டு அர்ச்சனை செய்து அவனை தியானம் செய்தால் எல்லா பிரம்ம வித்தையும் கிடைத்த பலன் நமக்கு உண்டாகும்.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
கோபம், வீரம், தேஜஸ்,
(பிரகாசம்) கொண்ட மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! எல்லா திசைகளையும் பார்த்து கொண்டிருக்கும் உன்னிடமிருந்து தவறு செய்பவர்கள் யாராலும் தப்பிக்க முடியாது.
ஶ்ரீ நரசிம்ஹாய நமஹ
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.