#வரலாற்றில்_இன்று
15/03/2023
ஐநா சபை இஸ்லாமாஃபோபியாவிற்கு (Islamophobia) எதிரான முதல் சர்வதேச தினத்தை கடைபிடித்தது
இஸ்லாமாஃபோபியா என்றால் என்ன?
இஸ்லாமியர் என்ற உடனேயே ஒரு பயமோ அல்லது தப்பெண்ணமோ அல்லது வெறுப்போ அல்லது பதட்டமோ கலந்த ஒரு கசப்பு உணர்வு இஸ்லாமியர் அல்லாதவர்
மனதில் தோன்றினால் அதுவே இஸ்லாமாஃபோபியா எனப்படும்.
இந்த உளவியல் பிறழ்வு ட்விட்டர் இன்ஸ்டாகிராம் முகநூல் வாட்ஸ் ஆப் முதலான ஆன்லைன் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி, அச்சு ஊடகம், திரைப்படம், அரசியல் கட்சிகள், சமூக கலாச்சார அமைப்புகள் முதலான ஆஃப்லைன் ஊடகங்கள் ஊடாக முஸ்லீம்கள்
குறித்த பொய்யான அல்லது மிகையான அல்லது அவதூறான செய்திகளாக காணொளிகளாக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
இந்த போக்கு உலகில் முஸ்லிம்களை மட்டுமல்ல முஸ்லிம் அல்லாதவர்களையும் அச்சுறுத்துகிறது., துன்புறுத்துகிறது, தவறிழைக்கத் தூண்டுகிறது, ஆத்திரமூட்டுகிறது, மிரட்டுகிறது,
சகிப்பின்மையை விளைவிக்கிறது. இறுதியில் கலவரங்களை நிகழ்த்துகிறது.
திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அமைப்பு ரீதியான, கருத்தியல், அரசியல் மற்றும் மதவெறியினால் தூண்டப்படுகிறது.
உலகம் முழுதும் ஈவு இரக்கம் இன்றி இஸ்லாமியர்களைக் குறிவைக்கிறது. இந்தச் சமூக நோய்க்கு மிகுதியாக இஸ்லாமிய
குழந்தைகளும் பெண்களும் பலியாகிறார்கள்.
உலக இஸ்லாமாஃபோபியா எதிர்ப்பு நாளில் இஸ்லாமியர்கள் என்றில்லை
உலகில் எந்த மானுடக் குழுவையும் நிறத்தால் மதத்தால் மொழியால் நிலத்தால் ஜாதியால் இனத்தால் வெறுக்காதிருக்க, தாழ்த்தாதிருக்க -
யாதும் ஊரே யாவரும் உற்றார் என்று வாழ- உறுதி ஏற்போமாக.
நாம் இந்தியர்கள் கட்டாயம் இந்த உறுதிமொழியை ஏற்றாக வேண்டும். ஏனெனில் உலகிலேயே அதிகமாக இஸ்லாமிய வெறுப்பை கட்டமைப்பது இந்திய ஊடகங்கள் தான் என்பதை நீங்கள் மேலே கொடுத்துள்ள புள்ளிவிவரப் படத்தில் காணலாம். கண்டு வெட்கத்தால் அவமானத்தால் தலை குனியலாம்.
வடவர் மீதான வெறுப்பாக மாறுவதும் இதே
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.