அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Mar 17, 2023, 21 tweets

#அஹோபிலம்
#நரசிம்மரின்_அவதார_ஸ்தலம்_அஹோபிலம்
சென்னையிலிருந்து 400கிமீ தொலைவில் உள்ள திவ்யதேசம் கர்னூல் மாவட்டத்தில், ஆந்திர மாநிலத்தில் உள்ளது. திருப்பதியிலிருந்து சுமார் 300கிமீ. பகவான் ஸ்ரீ நரசிம்மர் ப்ரஹ்லாதனுக்காக தூணைப் பிளந்துகொண்டு வந்த இடம் இதுவே. ப்ரஹ்லாதன் பிற

வளர்ந்து, படித்த இடம்.
பகவான் ஸ்ரீ நரசிம்மர் இங்கே #10கோயில்களில் தரிசனம் தருகிறார்.
1. #திருமலைஸ்ரீநிவாசன் ப்ரதிஷ்டை செய்த #ப்ரஹ்லாதவரதவரதன் ஊருக்குள் கோயில் கொண்டுள்ளார்.

2. #அஹோபிலநரசிம்மர்
அஹோபில குகைக்குள் ப்ரஹ்லாதனோடும் ஸ்ரீசெஞ்சுலக்ஷ்மிதாயாருடன்.

3. #க்ரோடநரசிம்மர்

ப்ரஹ்மாவின் கையிலிருந்து விழுந்த வேதத்தை மீட்க #வராஹ ரூபமாய் மாறிய நரசிம்மர்.

4. #ஜ்வாலாநரசிம்மர்
தூணைப் பிளந்து கொண்டு வந்து, ஹிரணியகசிபுவை தன் மடியில் போட்டு கிழித்த இடம் இதுவே.

5. #மாலோலநரசிம்மர்
லக்ஷ்மியை தன்னோடு வைத்துக்கொண்டு அருளும் அழகான நரசிம்மர். இவரின் உற்சவர் தான்

அஹோபிலமட ஆசார்யர்கள் அழகிய சிங்கரோடு யாத்திரை செல்பவர்.

6. #காரஞ்சநரசிம்மர்
காரஞ்ச வனத்திற்குள் ஆஞ்சநேயருக்கு ராமனாய் வில்லேந்தி காட்சி தந்த நரசிம்மர்.

7. #பார்கவநரசிம்மர்
பார்கவர் எனப்படும் பரசுராமருக்காய் காட்சி தந்த நரசிம்மர்.

8. #பாவனநரசிம்மர்
பாவன நதி தீரத்தில் இருந்து

அருள் பாலிக்கும் நரசிம்மர்.

9. #யோகானந்தநரசிம்மர்
பகவான் நரசிம்மர் ப்ரஹ்லாதனுக்கு யோகம் சொல்லிக்கொடுத்த இடம். தன் உக்ரத்தை விட்டு யோகானந்தமாய் நரசிம்மர் இங்கே காட்சி தருகிறார்.

10. #சத்ரவடநரசிம்மர்
ஆனந்தமாய் சங்கீதம் ரசித்துக் கொண்டு, ஆலமரமே குடையாய் இருக்க ஆனந்தமான நரசிம்மர்

இந்த 10நரசிம்மர் இல்லாமல், நரசிம்மர் அவதரித்த #உக்ரஸ்தம்பம், ப்ரஹ்லாதன் படித்த பள்ளிக்கூட இடம், நரசிம்மர் இரணியனை வதம் செய்துவிட்டு கையை அலம்பிய #ரக்தகுண்டம் இவையெல்லாம் அஹோபிலத்தில் காணவேண்டிய அற்புத இடங்கள்.
#அஹோபிலம் என்றால் ஆச்சரியம் மிக்க பிலம்; சிங்க-குகை. ‘அஹோ’ என்றால்

சிங்க, ‘பிலம்’ என்றால் ‘குகை‘. இரண்யனை சம்ஹாரம் செய்த போது, நரசிம்மரைப் பணிந்து நின்ற தேவர்கள் எல்லாரும் அகோ பலம்! ஆச்சரியம் மிக்க பலம்கொண்டவர் என்று சொல்லி வணங்கினர். திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் 9 நரசிம்ம வடிவங்களில்

#கருடனுக்குக்_காட்சிகொடுத்தார். கருட பகவான், அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டார். கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள #கருப்புமலையிலுள்ள அஹோபிலத்தில் நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள். இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலம்.

இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட #உக்கிரஸ்தம்பம் உள்ளது. இரண்டு நிலைகளாக அமைந்துள்ளது அஹோபில ஷேத்திரம். கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதர் ஆலயமும், மேல் அஹோபிலத்தில் அகோர ந்ருஸிமஹர் ஆலயமும்

அமைந்துள்ளன. மலையடிவாரம் கீழ் அஹோபிலம் என்றும் அடிவாரத்தில் இருந்து 8 கி.மீ உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்றும் அழைப் படுகிறது. நவ நரசிம்மர் ஆலயங்கள் மேலும் சுற்றிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன. மலையேற்றம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உடல் உறுதியும்

இருந்தால் மட்டுமே நவநரசிம்மர்களை சேவிக்க முடியும் என திருமங்கை ஆழ்வார் தமது பாசுரத்தில் பாடியுள்ளார்.

எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால் செல்லவொண்ணாச் சிங்கவேள் குன்றமே

(பெரியதிருமொழி:1.7.4; 1011) நரசிம்ம அவதாரம் பிரகலாதன் என்கிற மாபெரும் பக்தனின் நம்பிக்கைக்கு உயிர் கொடுத்தது. பக்தனின் பரிபூரண நம்பிக்கைக்கு அவனுடைய சரணாகதி தத்துவத்திற்கு இலக்கணமாய் அமைந்தவர் நரசிம்மர். எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்த இங்கு இல்லையால் என்று இரணியன் தூண்

புடைப்ப, அங்கு அப்பொழுதே தோன்றியவர் நரசிம்ம ஸ்வாமி. அசுர குலம் தழைக்க வேண்டும் என்று
இரணியகசிபு போர்க்குரல் கொடுத்து, மாபெரும் துன்பங்களை துயரங்களை பிரகலாதனுக்கு கொடுக்க நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிற திடபக்தியில் பிரகலாதன் நிற்க நெஞ்சு பொறுக்குதில்லையே என்று துடிதுடித்துப்

போனான் இரணியகசிபு. எங்கே உன் இறைவன்? அந்த மாயக் கண்ணன்? இந்த தூணில் இருக்கிறானா என்று மமதையில் ஆணவத் திமிரில் தூணை பிளந்தபோது இதோ பார் என்று இரணியகசிபு மூலமாக உலகிற்கே நிரூபித்துக் காட்டியவர் நரசிம்மஸ்வாமி. நரசிம்மம் பிளந்து கொண்டு வந்த தூண், ஹிரண்யனின் அரண்மனை மண்டபம் இன்றளவும்

திகழ்கின்றன. இரண்டாகப் பிளந்து நிற்கும் மலைதான் அந்தத் தூண், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் மலைப் பிஞ்சுகள், நரசிம்மம் வெளிப்பட்ட போது உண்டான பூகம்ப அதிர்ச்சியின் அடையாளங்கள். நரசிம்மத்தின் ஒன்பது தத்துவங்களையும் விளக்கும் வகையில்  ஒன்பது அர்ச்சாவதார மூர்த்திகளாகக் காட்சியளிக்கிறார்

திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்து மகிழ்ந்து இருக்கிறார். கீழ் அஹோபிலம், மேல் அஹோபிலம் சேர்த்து ஒரே திவ்ய தேசமாக வழி படுகிறோம். மகா பெரிய அசுரன் ஒருவனை எந்த ஆயுதமும் கைக் கொள்ளாமல், விரல் நகங்களாலேயே வதம் செய்த பராக்கிரமத்தைக் கண்ட தேவர்கள்

‘ஆஹா, பரந்தாமனுக்குதான் என்ன பலம்!’ என்று வியக்க, அந்த ஆச்சரியமே ‘அஹோப(பி)லம்’ என்ற பெயரை இத்தலத்திற்கு அளித்ததாகவும் சொல்வார்கள். லக்ஷ்மி நரசிம்மர்-பிரகலாத வரதன் (லஷ்மி நரசிம்மர்-அம்ருதவல்லி, செஞ்சுலஷ்மி) இவர்களை திருப்பதி சீனிவாசப் பெருமாள் தனது திருக்கல்யாணம் முடிந்து வணங்கிய

பெருமாள்-சீனிவாசப் பெருமாள் சன்னிதியும் உண்டு.
#10தகவல்கள்
1. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த இடம்
அஹோபிலம் (சிங்கவேள்குன்றம்)
2. நரசிம்மவழிபாட்டிற்கு மிக உகந்தவேளை பிரதோஷ வேளை (மாலை 4.30-6))
3. இரணியனை சம்ஹரித்த நாள்
சதுர்த்தசி திதி
4. நரசிம்ம வழிபாட்டிற்குரிய நட்சத்திரம் சுவாதி

(நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரம்)
5. பக்தன் என்ற அடைமொழியோடு அழைக்கப் படும் பக்தன். பக்த பிரகலாதன்
6. அஹோபிலத்தில் நரசிம்மருக்கு எத்தனை கோயில்கள் உள்ளன?
ஒன்பது (நவநரசிம்மர் கோயில்)
7. நரசிம்மருக்குரிய நிவேதனம் பானகம், தயிர் சாதம்
8. பிரகலாதனுக்கு ஹரி மந்திரத்தை உபதேசித்தவர் நாரதர்

9. நரசிம்மரின் பெயரைக் கொண்ட தமிழ்ப்புலவர்கம்பர் (தூணில் அவதரித்தவர் என்பதால் நரசிம்மருக்கு கம்பர் என்று பெயர்)

10. நரசிம்மரின் பெருமையை எப்படி குறிப்பிடுவர்?
நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்

ஶ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹர்ப்பணமஸ்து
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling