தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

Mar 25, 2023, 17 tweets

#BlackDayForIndianDemocracy
1991 ம் ஆண்டு, ஹார்வர்டில் வகுப்புக்குச் செல்ல, தயாராகி கொண்டிருக்கிறார் அந்த இளைஞன். அறைக் கதவு தட்டப்படுகிறது. இரு FBI அதிகாரிகள், அவருடைய HOD மற்றும் இந்திய தூதரக அதிகாரி ஒருவரும் நிற்கிறார்கள். இளைஞன் " என் தந்தை மரணமடைந்து விட்டாரா?" என்கிறார்

#மரணத்தின்_நிழலில்
சாதாரண இந்திய இளைஞனுக்கு அமைய வேண்டிய பள்ளி கல்லூரி வாழ்க்கை ராகுலுக்கு கிட்டியதே இல்லை. அந்தக் குடும்பத்தவர்கள் அரசியலில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியில் இருந்து மரணமும் அருவருக்கத்தக்க விமர்சனங்களும் துரத்த தொடங்கும். அதற்காக யாரும் பின்வாங்கியது இல்லை

#திருடப்பட்ட_குழந்தைப்பருவம்
1980ல் தில்லி செயிண்ட் கொலம்பஸ் பள்ளியில் படித்த போது அவர் பாட்டி இந்திய பிரதமர். எந்நேரமும் பாதுகாப்பு படை சூழ பள்ளியில் இருந்ததால் ஆசிரியர்களும் சக மாணவர்களும் நெருங்க அஞ்சினர். பெருந்தலைகள் வாரிசுகள் மட்டுமே அவருடன் பழக அனுமதிக்கப் பட்டனர்

#பறிபோன_பள்ளிவாழ்க்கை
1981 ல் குடும்ப வழக்கப்படி டேராடூனில் உள்ள தி டூன் பள்ளியில் சேர்க்கப் பட்டார். டெல்லியை விட இங்கு கெடுபிடி குறைவாக இருந்தது. தில்லிக்கு அரசியல்வாதிகள் பிள்ளைகள் மிக அதிக அளவில் பயின்றதால் கடும் பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்தார். 1984ல் முதல் குடும்ப மரணம்

#ஆலமரம்_சாய்ந்தது
சீக்கிய தீவிரவாதிகள் இந்திராவின் உயிரை மட்டும் எடுக்கவில்லை. ராகுலின் பள்ளி வாழ்க்கையையும் முடித்து விட்டனர். உடனடியாக டெல்லி வரவழைக்கப்பட்ட ராகுல் அதன்பின் பள்ளிக்கூடமே செல்லவில்லை. வீட்டிலேயே பள்ளி படிப்பு அவருக்கும் தங்கை பிரியங்காவிற்கும் தொடர்ந்தது

#போபர்ஸ்_சர்ச்சை
அந்தக் குடும்பத்தினர் விரும்பி அரசியலுக்கு வருவதில்லை. அரசியல் அவர்கள் மீது திணிக்கப்பட்டது.
தில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் விளையாட்டு துறை ஒதுக்கீட்டில் படித்துக் காலத்தில்,போபர்ஸ் பீரங்கி சர்ச்சை அரசியல் நிலையாமையால், ராகுல் ஹார்வார்டு அனுப்பப் பட்டார்

#மனிதவெடிகுண்டு
ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதுடன் ராகுலின் ஹார்வார்டு கனவும் கலைந்தது. ராஜிவ் மரணம் இந்தியாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல ராகுலின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஹார்வார்டில் இருந்து வெளியேறினார்

#ரவுல்_வின்சி
புதிய கெட்டப்,அடையாள அட்டை, பிரபலமாகாத ரோலின்ஸ் கல்லூரியில் ரவுல் வின்சி என்ற புனை பெயரில் ராகுல் தனது இளங்கலை படிப்பை தொடர்ந்தார்.
அவரது உண்மை அடையாளம். தில்லியில் உள்ள சில பாதுகாப்பு துறை அதிகாரிகள், அமெரிக்க உளவுத்துறை CIA, இரு கல்லூரி நிர்வாகி மட்டுமே அறிந்தது

#தலைமறைவு_வாழ்க்கை
1994ல் முடிவுக்கு வந்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைந்ததால் தன் கொள்ளுத் தாத்தா, தந்தை பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் Trinity கல்லூரியில் தன்னுடைய நிஜப் பேருடன் சேர்ந்து எம்ஃபில் படிப்பை முடித்து
லண்டனில் மேலாண்மை ஆலோசனை நிறுவனமான
மானிட்டர் குழுமத்தில்

#அரசியல்_நுழைவு
தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தியா திரும்பி மும்பையை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப அவுட்சோர்சிங் நிறுவனமான பேக்ஆப்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவினார். அரசியல் நிலையாமையால் பரவி வந்த மதவெறி காரணமாக
2004 ல், காந்தி தீவிர அரசியலில் நுழைவதாக அறிவித்தார்

#ஒற்றுமை_யாத்திரை
பிறந்த நாள் முதல் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக மக்களிடமிருந்து விலக்கி ஒரு இளவரசனைப் போல வளர்க்கப்பட்டதாலோ என்னவோ ராகுல் தன் அரசியல் வாழ்க்கை முழுவதும் மக்களுடன் கழித்தார். களவாடப்பட்ட கல்லூரி வாழ்க்கையை கல்லூரி கல்லூரியாக சென்று மாணவர்களுடனே கழித்தார

#பப்பு
அவருக்கென்று உள்ள தனிப்பட்ட வாழ்க்கையை வாழ விடாமல் அவரை எங்கு சென்றாலும் துரத்திச் சென்றன வன்மவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வதந்திகள். அவர் எங்கு செல்கிறார் யாரை சந்திக்கிறார் எல்லாம் மீடியாவில் கிண்டலடிக்கப்பட்டன. அவரது அறிவார்ந்த பேச்சுக்கள் பப்பு என பரப்பப்பட்டன

#துவளாது_போராடு
140 கோடி பேர் கொண்ட ஒரு மாபெரும் தேசத்தில் ஏதோ ஒரு பஞ்சாயத்தில் உள்ளூர் பிரச்சனையால் காங்கிரஸ் தோற்றால் கூட அது ராகுல் கணக்கில் எழுதப்பட்டது.
அவருடைய வியூகத் திறன் பகடி செய்யப் பட்டது. கூலிக்கு அமர்த்தப் பட்ட கோணல் புத்திகாரர்கள் பப்பு பப்பு என ஜெபித்தனர்

#போராட்டமே_வாழ்க்கை
அதிகாரம் இல்லாத இந்த 9 ஆண்டுகளில் அற்ற குளத்து அருநீர்பறவையாக கட்சியினர் அவரை விட்டு ஓடினர். கலங்கவில்லை. ஹத்ரஜ் கற்பழிப்பில் ஆரம்பித்து இந்தியாவின் எந்த மூலையில் நிகழும் அநியாயத்திற்கும் முதல் குரல் அவரிடம் இருந்து கிளம்பியது அறிக்கைகள் அரசை நடுங்க வைத்தன

#அதானி_மோசடி
அறிவார்ந்த அவரது தர்க்கங்களின் முன்னே ₹2 கூலியில் பரப்ப பட்ட கோஷம் மழுங்கிப் போனது. தில்லி ஊடகங்கள் பாரத் ஒற்றுமை யாத்திரையின் வீச்சை உணர்ந்தன. காற்று திசை மாறத் தொடங்கியது. பாராளுமன்றத்தில் அதானி குறித்து அவர் எழுப்பிய கேள்விகள் இந்தியாவின் மனசாட்சியைத் தொட்டது

#வாய்ப்பூட்டு
திருடனை திருடன் என்பதே தேசத்துரோகம் என வரையறை மாற்றப்பட்ட தேசத்தில்.
விடுதலைக்கு நான் வழி சொல்கிறேன் என்னுடன் வா என்று வீரமுழக்கமிட்ட அந்தப் பறவை இனி விடுதலை கீதம் இசைக்கக் கூடாது என்று பாசிச ஆளும் வர்க்கம் திட்டமிட்டு செயல்படுகிறது.
வரலாறு உன்னை விடுவிக்கும் ராகுல்

#ஒருமுடிவின்_தொடக்கம்

இந்திய நீதிமன்றங்களில் நியாய பரிபாலனம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள

ராகுல் மீது புனையப்பட்ட இந்த வழக்கும் அதன் தீர்ப்புமே சாட்சி

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling