மகோராரசிகன் Profile picture
பதிவுகளை ஆர்டி செய்யும் ஃபாலோயர் ஐடிகள் அனைத்தும் திருப்பி ஃபாலோ பேக் செய்யப்படும்

Mar 28, 2023, 14 tweets

#பூஜ்_பூகம்பம்
2001, ஜனவரி 26.
இந்தியா குடியரசு தின சடங்குகளை தொடங்க ஆரம்பித்தபோது, குஜராத், கட்ச் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பூஜ் நகரத்தையே நிர்மூலம் செய்திருந்தது. வைர வியாபாரிகளாக தூங்கியவர்கள் அன்னக்காவடிகளாக எழுந்தார்கள். அரசியல் பூகம்பம் ஒன்று வெடிக்க காத்திருந்து

#இளமை_புயல்
2003 ல் கட்ச் மாவட்ட கலெக்டராக இருந்த பிரதீப் சர்மா நகரின் மறு நிர்மாணத்தின் ஒரு பகுதியாக பூஜ் நகரத்தை அழகுபடுத்த ஒரு மலை தோட்டம் அமைக்க திட்டமிட்டு இருந்தார். அதற்காக, அந்தத் துறையில் சிறப்பிடம் பெற்ற மாதுரி என்ற 24 வயது இளமை புயலை பெங்களூரில் இருந்து தருவித்தார்

#சாஹேப்_அறிமுகம்
2005 ல் பூங்காவை திறந்து வைக்க காந்திநகரில் இருந்து சாஹேப் வந்திருந்தார்.
அலுவல் ரீதியாக மாதுரி அறிமுகப்படுத்தப்பட்டார்.
பெங்களூர் திரும்பிய மாதுரி 2006 ல் அகமதாபாத் வந்திருப்பதாக பிரதீப் சர்மாவுக்கு தகவல் கொடுக்கிறார். இரண்டு நாட்கள் கழித்தே சந்திக்க முடிந்தது

#ஒலி_நாடாக்கள்
2009 ல் இர்ஷாத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டபோது சிங்கால் என்ற ஐபிஎஸ் அதிகாரி, 4 ஜிபி அளவுள்ள பென்டிரைவில் பதிவு செய்யப்பட்ட 267 உரையாடல் தொகுப்பை ஒப்படைத்தார். இவை வெளியான போது, குஜராத்தில் மீண்டும் பூகம்பம். இம்முறை காந்தி நகரில்

#உளவுத்துறை_அமைச்சர்
இதன் விவரங்களைப் புலனாய்வு இதழாளர்களான குலைல் டாட் காமின் #அசிஷ்_கேதனும் கோப்ராபோஸ்ட் டாட் காமின் #ராஜா_சவுத்ரியும் வெளியிட்டனர்.
இந்த ஒலி நாடாக்கள் முழுவதிலும், ‘சாகேப்’பிற்காக ஒரு இளம் பெண்ணைச் சட்ட விரோதமாக எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து, அவர் யாரைச்

சந்திக்கிறார், யாருடன் ஓட்டலில் தங்குகிறார், விமானத்தில் யாருடன் பயணம் செய்கிறார் போன்ற அனைத்து அந்தரங்க விவரங்களையும் நவீன உளவுத் தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்திச் சேகரித்து உடனுக்குடன் தன்னிடம் தெரிவிக்குமாறு உயர் போலீஸ் அதிகாரியான சிங்காலை வற்புறுத்துவது பதிவாகியிருந்தது

#சாஹேப்_ஜண்டா
சிறப்புக் காவல்படைக் கண்காணிப்பாளர் சிங்கால் அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஆண்கள் யார், ஒட்டலில் தங்கும்போது அப் பெண்ணுடன் எந்த ஆண் இருந்தார் என அறியத் துடிப்பதும் அந்த சாகேப் எந்த அளவு பாலியல் வக்கிரம் பிடித்த நபராக இருக்கவேண்டும் என்பதை யூகிக்க வைக்கிறது.

#ஜண்டா_ஒருதண்டம்
ஆகஸ்ட் 9, 2009
பரபரப்போடு சிங்காலை கூப்பிட்டு "சாகேப்போட பேசினேன். அவங்க இன்னைக்கு இரண்டு தடவை வெளியே போன விஷயம் அவருக்கு தெரிஞ்சிருக்கு. நம்ம ஆளுங்க சரியா வேல செய்யலேன்னு நினைக்கிறேன்” என ஜண்டா பதறுவதால் ஜண்டாவை நம்பாமல் வேறு ஒரு டீமும் சாஹேப் இறக்கி இருந்தார்

#பிள்ளையார்_பிடிக்க_குரங்கு
கோப்ரா போஸ்ட் மாதுரி என புனை பெயரிட்டு இருந்தாலும், இந்த ஆடியோ வெளிவந்த உடன் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை ரீதியில், சாஹேப் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க களம் இறக்கப்பட்ட பிரான்லால் சோனி மகள் மான்சி சோனி என்ற பெங்களூர் ஆர்கிடெக்ட் தான் அவள்

#தந்தையின்_முட்டு
அவள் அடிக்கடி அகால நேரங்களில் பயணம் செய்ய நேரிட்டது. தந்தை என்கிற முறையில் நான் எங்கள் குடும்பத்துடன் நீண்ட நாள் உறவில் உள்ள #சாஹபிடம் அவளைக் கவனித்துக் கொள்ள கூறினேன்
அதாவது கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே சாஹேப் மான்சியின் ஒவ்வொரு நடமாட்டத்தை கண்காணித்தாராம்

#பிரதீப்சர்மா_வாக்குமூலம்
கடச் கலக்டரா இருந்தவர், பாவ் நகருக்கு முனிசிபல் சேர்மனாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, ஊழல் குற்றசாட்டில் சஸ்பெண்டும் செய்யப் பட்டார். அதனை எதிர்த்து 2011 ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்த போது சாஹப்பின் தனி தொலைபேசி எண் மானசியிடம் இருந்தது தெரிந்தது

#குஜராத்_போலீஸ்
சட்டம் ஒழுங்கை பராமரிப்பது பற்றி கவலை கொள்ளாது, உளவு சாதனங்களுடன் இளம் பெண்கள், இளைஞர்கள் பின் திரிந்து இருக்கிறது. பிரதீப் சர்மா போன்ற மூத்த IAS அதிகாரிகளும் கண்காணிக்கப் பட்டனர். இடை இடையே அப்பாவி முஸ்லிம்கள் போலி என்கவுண்டரில் போட்டும் தள்ளப்பட்டனர்

#கோமாளி_காங்கிரஸ்
சாகப்பிற்கும் அந்த பெண்ணுக்கும் இடையிலான நெருக்கம் நாகரீகம் கருதி விரிவாக பகிர வில்லை.
குஜராத் உளவுத்துறை அமைச்சரை சிபிஐ கைது செய்யபட்ட போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தன் கடமையை ஒழுங்காக செய்து இருந்தால் ஒரு அப்பாவி இளைஞன் disqualify ஆகி இருப்பானா?

#நவீன_சீதைகள்
இந்த விவரம் எதுவும் தெரியாமல், ஏதோ ஒரு கிராமத்தில் ராமனின் அழைப்புக்கு காத்திருக்கிறார் அவர்

காத்திருந்தால் தான் அவர் சீதை

அதைத்தான் சனாதனம் விரும்புகிறது

சாக்ஷி மகராஜ் கூறுவது போல
சீதைகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்

m.timesofindia.com/city/delhi/sak…

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling